ஹெல்த்
Published:Updated:

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

எம். துரைராஜ், பொது மருத்துவர்ஹெல்த்

ரு குழுந்தை பிறந்ததும் அக்குழந்தையின் உருவ அமைப்பு பற்றித்தான் பெரும்பாலும் பேச்சு இருக்கும். அப்பாவைப்போல காது, அம்மாவைப்போல கண்ணு, தாத்தாவைப்போல சிரிப்பு எனப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதற்குக் காரணம் டி.என்.ஏ (Deoxyribonucleic acid). அனைத்து  உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூலப்பொருள்களைக்கொண்டே உருவாகின்றன. டி.என்.ஏ-வில் உள்ள மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். மரபணு- மரபு+அணு. மரபு என்பது வழி வழியாக வருவது. பரம்பரையாக வரும் மரபுப் பண்புக்குக் காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் மரபணு.

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!


மரபணுச் சோதனையின் மூலம் ஒருவருடைய பரம்பரை, இனம், வரக்கூடிய நோய்கள், ஒருவரின் குணாதிசயம் அல்லது பிறக்கப்போகும் குழந்தையின் குணாதிசயம் போன்றவற்றைக் கண்டுபிடிக்கலாம். கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சரியான குற்றவாளியைக் கண்டறிய மரபணுச்  சோதனை செய்யப்படுகிறது. மரபணுச்  சோதனைக்கு ஒரு நபரின் ரத்தம், முடி, தோல், ஆம்னியாட்டிக் திரவம் (கர்ப்பக்காலத்தின்போது குழந்தையைச் சுற்றியுள்ள திரவம்)அல்லது திசு போன்ற ஏதேனும் ஒன்று மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. பெரும்பாலும் ரத்த மாதிரியே சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

மரபணுச் சோதனைகள் செய்வதன் காரணங்கள்:

கண்டறியும் சோதனை:
ஒருவர் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளைப் பெற்றிருந்தால் இச்சோதனை செய்யப்படும். இச்சோதனை பிறப்புக்கு முன்னால் அல்லது மனிதனின் வாழ்நாளில் செய்யப்படும்.

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!


கேரியர் டெஸ்ட்டிங்:
இச்சோதனை பெரும்பாலும் பரம்பரை நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது. இதில் பெற்றோருக்கும் சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையின் மூலம் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு நோய் வரும் அபாயம் உள்ளதா எனக் கண்டறிவர்.

ப்ரீநேட்டல் ஜெனெட்டிக் டெஸ்ட்டிங்: கர்ப்பக்காலத்தில் பதினாறாம் அல்லது பதினெட்டாம் வாரங்களில் செய்யப்படும் சோதனை. ஆம்னியோசென்டெஸிஸ் (Amniocentesis) என்கிற ஊசியினை வயிற்றில் செலுத்திச் சிறிதளவு ஆம்னியாட்டிக் திரவத்தை மருத்துவர் எடுத்துச் சோதனைக்கு அனுப்புவார். இதன்மூலம் குழந்தைக்கு வரக்கூடிய நோய்களையும் குழந்தைகளின் குணாதிசயங்களையும் அறியலாம்.

தடயவியல் சோதனை:
நோய்களைக் கண்டறிவதற்காக இல்லாமல் சட்டநோக்கில் கொலை மற்றும் கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில்  குற்றவாளிகளை அடையாளம் காணவும் (Paternity-தந்தைமை) மனிதர்களுக்கிடையே உள்ள உயிரியல் உறவுகளைச் சுட்டிக்காட்டவும் இந்தச் சோதனை செய்யப்படும்.

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

மரபணுச் சோதனையில் உபயோகப்படுத்தும் முறைகள்:

மூலக்கூறு மரபணுச் சோதனை:  சோதனையில் ஒற்றை மரபணு, டி.என்.ஏ-வின் குறுகிய நீளம், அவற்றின் பிறழ்வுகள், வேறுபாடுகளை ஆராய்ந்து மரபணுக் கோளாறுகளைக் கண்டறிகின்றனர்.

குரோமோசோம் மரபணுச் சோதனை: இந்த ஆய்வில் ஒரு முழு குரோமோசோம் அல்லது நீண்ட நீளம் கொண்ட டி.என்.ஏ-வில் பெரிய மரபணு மாற்றங்கள் உள்ளனவா எனக் கண்டறிந்து அதன் மூலம் நோய்களைக் கண்டறிவர்.

உயிரி ரசாயன மரபணுச் சோதனை: இதில் டி.என்.ஏ-விலுள்ள புரதங்களின் நிலை. அவற்றின் அளவு, செயல்பாட்டை ஆராய்ந்து நோய்களைக் கண்டறிகின்றனர். ஒப்புதல் படிவத்தில் (Consent form) சோதனை செய்யப்படுவோரின் ஒப்பம் பெறப்படும். அவர்களுக்குச் சோதனையின் நோக்கம், செயல்முறை போன்றவை விளக்கப்படும். மரபணுச்  சோதனையின் முடிவானது நேர்மறையாக (Positive test result) இருந்தால், அந்த நபர் நோயினால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக அர்த்தம்.

மரபணுச் சோதனை என்பது ஓர் எளிய செயல்முறை. இச்சோதனைக்கு எந்தத் தயார் நிலையும் அவசியமல்ல.

-இ. நிவேதா