ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 8,00,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். கிட்டத்தட்ட 40 நொடிகளுக்கு ஒருவர் இறந்து போகின்றார். தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களின் எண்ணிக்கை இதேபோல் 20 மடங்கு அதிகம். இது உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதி மட்டுமே. தற்கொலையைத் தவிர்க்கும் வழிகள் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதை முன்னரே அறிந்து தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அழுத்தம், கடன் தொல்லை, தீராத நோய், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் தற்கொலை செய்துகொள்வதற்கான ஆபத்து அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு இரவில் சரியாக உறங்காமல் இருத்தல், மன அழுத்தம், தனிமையாக இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தற்கொலை நோக்கம் இருப்பதாக அளவிடுவார்கள். உளவியல் மருத்துவர்கள் பரிசோதனைகள் மூலமாகத் தற்கொலை செய்வற்கான நோக்கம் உள்ளதைக் கண்டறிவர். ஆனால், இந்த வகையில் கண்டறியும் முடிவுகள் 50 சதவிகிதம்கூடச் சரியாக இருப்பதில்லை. மன அழுத்தம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்ள வெறும் ஆறு சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னைக்கு AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தீர்வு கண்டுள்ளார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். செயற்கை நுண்ணறிவைக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதை முன்னரே துல்லியமாகக் கண்டறிய இயலும். பல லட்சக்கணக்கான மக்களின் மருத்துவத் தகவல்கள், குறிப்பாக யார் தற்கொலை முயற்சி செய்தவர் என்பது பற்றிய தகவல்களை வைத்துக்கொண்டு இந்த ஆய்வு தொடங்கப் பட்டது. அவற்றுள் குறிப்பிட்ட தகவல்களைக் கொடுத்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன. கிட்டத்தட்ட 3,250 நபர்கள் தற்கொலை நோக்கமுடையவர்கள் எனச் சரியாகக் கண்டறிந்து சொன்னது அந்த சிஸ்டம். செயற்கை நுண்ணறிவின் மூலம் கண்டறிந்த தகவல்கள் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான துல்லியத்தன்மை கொண்டதாக இருந்தன.

நோயாளியின் பெயர், வயது, வாழுமிடம், தொழில், வருமானம் மற்றும் மருத்துவ வரலாறு போன்ற தகவல்கள் இதற்குத் தேவை. இவற்றை செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படும் சிஸ்டத்திடம் தந்திருக்கிறார்கள். இந்த சிஸ்டத்தில் தற்கொலை முடிவை எடுக்கக்கூடியவருக்கு இருக்கும் சிக்னல்களை ஏற்கெனவே இன்புட் செய்திருக்கிறார்கள். இரண்டும் ஒன்றிணையும் புள்ளிகளைக் கொண்டு இந்த சிஸ்டம் கணிக்கிறது.

உதாரணத்துக்கு, ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். அவர் சில நாள்களாக அலுவலகம் செல்லவில்லை. சரியாகச் சாப்பிடவில்லை. சமூகவலைதளங்களில் எப்போதும் நெகட்டிவ் விஷயங்களையே பகிர்கிறார். கூகுளின் தவறான தகவல்களைத் தேடிப் படிக்கிறார். இந்தத் தகவல்கள் எல்லாம் கிடைத்தால், அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் எனச் சொல்லிவிடலாம் இல்லையா? இதைத்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு சிஸ்டம் செய்யும்.

எந்தத் தொடர்பும் இல்லாத நான்கு பேரின் தகவல்களைப் பார்ப்போம். ஒருவர் 45 வயதுக்காரர். இன்னொருவர் சமீபத்தில் விவாகரத்து பெற்றவர். அடுத்தவர், ஏற்கெனவே மனநோய்க்கு மருத்துகளை எடுத்துக்கொண்டவர். கடைசி நபர் நல்ல சம்பளத்துடன் பிடித்த வேலை செய்பவர். இவர்களுக்கு இடையேயான வேறுபாட்டை நாமே சொல்ல முடியும். ஆனால், மிகக்குறைவான தகவல்கள் மட்டுமே தெரியும் என்றால் வித்தியாசங்களைக் கண்டறிவது கடினம். அவற்றைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படுகிறது. உதாரணமாகத் தூக்கமாத்திரைகளைச் சாப்பிடுவது என்கிற தகவல் இரவில் தூக்கமின்றி தவிப்பவர், ஏதோ ஒரு குற்ற உணர்வினாலோ அல்லது வேறு ஏதேனும் மன நோய்களாலோ பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதைச் சொல்லும். செயற்கை நுண்ணறிவு இதேபோல் பல நூறு கடினமான, சிக்கலான, தகவல்களை ஒப்பிட்டு முடிவுகளைச் சிறப்பாகத் தருகிறது. அது பயன்படுத்தும் பல தகவல்கள் நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்குச் சிக்கலானவை.

செயற்கை நுண்ணறிவு தரும் முடிவுகளின் துல்லியத்தன்மை, நாம் கொடுக்கும் தகவல்களைப் பொறுத்தது. மருத்துவமனைக்கு வந்த ஒருவரை வைத்துச் சோதனைகள் செய்யும்போது அது 91–92 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைத் தருகிறது. பொதுவாகக் கிடைக்கும் தகவல்களைக் கொண்டிருக்கும்போது அது 80 சதவிகிதம் அதிகமான துல்லியத்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் கிடைக்கும் தகவல்களில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கும். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சரியாக முடிவுகளைத் தருவதில் AI கில்லாடி.

செயற்கை நுண்ணறிவு, மருத்துவர்களைவிடச் சிறந்ததா என்ற கேள்வி தேவையற்றது. ஏனெனில், இது மருத்துவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. மருத்துவர்கள் இதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் அல்லது இது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது. பயன்படுத்தத் தொடங்கி ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன பின்னரே நமக்கு சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

அதெல்லாம் சரி. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் எனக் கண்டறிந்தபின்னர் என்ன செய்வது? வெளிநாடுகளில் துப்பாக்கிகள் அதிகமாக உள்ள இடங்களில், அவற்றைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் வந்த பின்னர் அங்கு நடக்கும் தற்கொலைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. நமது நாட்டில் விஷம் குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் (கிட்டத்தட்ட பத்தில் நான்கு பேர்). இதைக் குறைக்கும் வகையில் சட்டங்கள் வேண்டும்.

வரும் நாள்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடையும்போது, பெரும்பான்மையான மக்களுக்குப் பயன்படப் போகின்றன. சமூக வலைதளங்களில் உள்ள தகவல்கள் இவற்றோடு இணைக்கப்படும்போது மிக அதிக அளவில் இலவசமாக, எளிமையாக, துல்லியமாகத் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறும். துல்லியமான கண்டறிதல் மற்றும் அதிவிரைவான தடுப்புமுறைகள் மூலம் ஒரு மாபெரும் மாற்றத்தை நாம் பார்க்கலாம். மருத்துவர்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில், மருத்துவத்திற்குச் செலவு செய்ய முடியாத ஏழ்மையான மக்கள் உள்ள இடத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவின் பயன் அளப்பரியது.

- ச.கலைச்செல்வன்

தோல்விகள், பிரிவு, தனிமை, மன அழுத்தம் போன்றவற்றால் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல கலந்தாய்வு தேவைப்படும். அவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய சொற்கள் தேவைப்படும். இந்த வகையிலான கலந்தாய்வுகளைக் கொடுக்குமளவுக்குச் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. சில ஆண்ட்ராய்டு செயலிகள் உங்கள் மனப்பக்குவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள விளையாட்டுகள், தற்கொலை மற்றும் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல் போன்ற எண்ணங்களைக் குறைக்க உதவும்.