என்னுடைய வயது 30. சில நாள்களாகக் காதில் சீழ் வடிந்தது. பிறகு தண்ணீர் போன்ற திரவம் வெளியானது. இதற்கு என்ன காரணம்? இது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்குமா?

-பி. ராணி, புதுக்கோட்டை.

மருத்துவத்தில் இந்த நிலையை சி.எஸ்.ஓ.எம் Chronic suppurative otitis media (CSOM) என்று கூறுவோம். ஆரம்பத்தில் காதில் ஒருவித உறுத்தல்போல இது துவங்கும். இதற்குக் காரணம், பெரும்பாலும் நடுக்காதுத் தொற்றுதான். காது ஜவ்வுகளில் ஓட்டை ஏற்படும்போது காதில் சீழோ, நீரோ சில சமயங்களில் ரத்தமோ வடியக்கூடும். காதுக்குப் பின் Mastoid Bone Region என்றொரு பகுதி இருக்கும். அதில் தொற்று ஏற்பட்டால் கூட நடுக்காதிற்கு பரவி சீழ் வரலாம்.

நடுக்காதுத் தொற்றோ, தொண்டைச் சளியோ இருக்கும்போதோ, காதில் தண்ணீர் தங்கி விடுவதாலோ ஏற்படும். அப்படி இருக்கும்போது காதுகளை நோண்டக் கூடாது. சளி பிடித்தால் முதலில் அதற்குப் போதிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். காதுகளைச் சுத்தம் செய்வதன் மூலம், பூஞ்சைத் தொற்றுகளால் வெளிக் காதில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்திவிடலாம்.

தொற்றுகளுக்கு முதலில் மருத்துவரின் அறிவுரைப்படி ஆன்டிபயாட்டிக் சொட்டு மருந்தைக் காதுகளில் இட்டுப்பார்க்க வேண்டும். சரியாகாத நிலையில் Tympanoplasty அல்லது Tympanomastoidectomy அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம். இவற்றின் மூலம் கிழிந்த ஜவ்வுகளையும் பாதிப்படைந்த நடுக்காது எலும்புப்பகுதியினையும் சரி செய்திட முடியும். அதற்குப் பின் காதுகளில் சீழ் வடிவதுபோன்ற பிரச்னைகள் வராது. சுய சிகிச்சைகள் கூடாது.

எனக்கு 26 வயதாகிறது. சில சமயங்களில் மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுகிறது. ஆசனவாயில் வலி மற்றும் கடினத்தன்மை உண்டாகிறது? இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?

- அர்ச்சனா, மேட்டுக்குடி.

மலம் கழிக்கும்போது ஆசனவாயில் வலி உண்டாவது, மலத்துடன் சேர்ந்து ரத்தம் வெளியேறுவது ஆசனவாய்ப் பிளவு எனும் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மூலநோய் இருந்தாலும் இதுமாதிரியான அறிகுறிகள் வெளிப்படும். இந்த நோய் வருவதற்கு முக்கியக் காரணம் மலச்சிக்கல்தான். மலம் இறுகி வெளிவர சிரமம் ஏற்படுகையில் ஆசனவாய் லேசாகப் பிளவுபடும். அப்பிளவினால் ரத்தக்கசிவும் ஏற்படும்.
மலச்சிக்கலைச் சரிசெய்ய நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான கீரைகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நாளொன்றுக்கு சுமார் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

நோயின் தன்மையை அறிய மருத்துவரை நேரில் சந்தித்துப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மூலநோயாக இருப்பின் அதன் தன்மையைப் பொறுத்துச் சிகிச்சை அளிக்கப்படும். ஆசனப்பிளவு நோயாக இருப்பின் மலத்தை இலகுவாக்கும் மருந்துகள் மற்றும் ஆசனவாயில் தடவும் களிம்பு பரிந்துரைக்கப்பட்டுப் புண் சரி செய்யப்படும். மலச்சிக்கலைச் சரி செய்வதே இதுபோன்ற நோய்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.

50 வயதைத் தாண்டியவன் நான். எனக்கு சுகர் அளவு 400 வந்ததால் டாக்டர் இன்சுலின் போடும்படி கூறினார். தற்போது எனக்கு சுகர் கட்டுக்குள் வந்து 150 ஆக உள்ளது. ஆனால், டாக்டர் இன்சுலின் போடுவதைத் தொடரும்படி கூறுகிறார். இது ஏன்? இப்படி எத்தனை நாள்கள் இன்சுலின் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்?

- டி.ஜெய்சிங், கோவை.

வயதிற்கும் இன்சுலின் குறைபாட் டிற்கும் எந்த விதச் சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு நபருக்கும், அவருடைய உடல்நிலையைப் பொறுத்து இந்த நிலை வேறுபடும். உடலில் சிறுசிறு காயங்கள், கீறல்கள் ஏற்படும் சமயத்தில் இன்சுலின் எடுத்துக்கொள்வது நல்லது. இன்சுலின் அளவு குறைந்துகொண்டே போகும்போது மாத்திரையின் செயல் திறன் குறையும். அப்போது இன்சுலின் தேவைப்படும். அந்த நேரத்தில் கண்டிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது சரியாகிவிட்டதே என்று நிறுத்திவிடக் கூடாது. உணவுக் கட்டுப்பாடு அளவு மாறும்போது சர்க்கரையின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். சுமார் 10 வருடங்களாக, சர்க்கரை அளவு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தால் இன்சுலின் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.