விழுப்புரம் அருகே காணை என்றொரு கிராமம் இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர் வண்ணத்துப்பூச்சி ஒன்று அங்கே வசித்து வந்தது. மலரிலிருந்து தேனைப் பருகிக்கொண்டு, ஏதோ மலருலகின் மன்னனைப்போல் மகிழ்ச்சியாக அது சுற்றித்திரியும். நீலமும் கறுப்பும் கலந்த அதன் இரு இறக்கைகள், இரு விழிகள்போன்ற உருவத்தைக் கொண்டிருந்தன. அதேபோன்ற விழிகளைக் கொண்ட சிறுவன் ஒருவனும் அவ்வூரில் இருந்தான். பெயர் புஷ்பராஜ். அந்த நீல நிற வண்ணத்துப்பூச்சியின் வசீகரத்தில் மயங்கிய அச்சிறுவன், அதை எப்படியேனும் ஓவியமாக வரைந்திட வேண்டும் என ஆசை கொண்டிருந்தான். தினமும் அதைப் பிடிக்க முயல்வான். ஆனால், வண்ணத்துப் பூச்சியோ உயரப்பறந்து தப்பித்துவிடும். இப்படியாக அதுவும் ஒருநாள் அவன் கைகளில் சிக்கிக்கொண்டது. பிரமித்துப்போய் அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன், கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலும் அதன் கால்கள் உடைந்துவிடுமே எனச் சுதாரித்து உடனே பறக்கவிட்டான். அவன் மனதில் ஓரளவு பதிந்திருந்த அதன் உருவத்தை ஓவியமாக வரைந்தான். வரைந்த ஓவியத்தைத் தனது அம்மாவிடம் காட்ட சிட்டெனப் பறந்தான் புஷ்பராஜ். வேகம் கால்களைத் தடுமாறச் செய்தது. கீழே விழுந்து கால் எலும்பை உடைத்துக்கொண்டான். பதறிப்போன அவன் அம்மா குமாரி, புஷ்பாவைத் தோளில் தூக்கிப்போட்டு மருத்துவரிடம் ஓடினார். கட்டு கட்டிவிட்டு `பயப்பட வேண்டாம். சரியாகிடும்’ என்றார் மருத்துவர். அவன் அம்மாவுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. குலசாமியை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அந்த வண்ணத்துப்பூச்சியும் அங்குதான் இருந்தது. ஆனால், அழுதுகொண்டிருந்தது. புஷ்பாவின் உடலும் சிறு அழுத்தமான தொடுதலைத் தாங்கும் வலிமையை இழந்துவிட்டதென அதற்குத் தெரிந்திருந்தது. புஷ்பராஜ் அன்றிலிருந்து சிறகொடிந்த வண்ணத்துப் பூச்சியாக மாறினான். காரணம், பாலியோஸ்டேட்டிக் ஃபைப்ரஸ் டிஸ்ப்ளேஸியா ( Polyostatic Fibrous Dysplasia) எனும் அரக்கன்.

புஷ்பராஜ் இப்போது 32 வயது இளைஞர். இந்த 25 ஆண்டுகளில் ஐம்பது முறைக்கு மேல் அவரது எலும்புகள் உடைந்திருக்கின்றன. உடல் இப்போது உடலாக இல்லை. கை கால்கள் மரக்கிளைகள்போல் வளைந்து விட்டன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு, சிறுநீரகக் கற்கள் போன்ற நோய்களும் உடலை உருக்கிக் கொண்டிருக்கின்றன. பாலியோஸ்டேட்டிக் ஃபைப்ரஸ் டிஸ்ப்ளேஸியா எனும் ஒற்றை நோய் அவரை வாழவிடாமல் முதுகெலும்பை வளைத்துக்கொண்டிருக்கிறது. புஷ்பராஜும் முடிந்த அளவு அதை எதிர்த்து, நிமிர்ந்து கொண்டிருக்கிறார். தைராய்டு சிகிச்சைக் காகச் சென்னை வந்திருந்தவரைச் சந்திக்கச் சென்றோம். மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த புஷ்பராஜை அவர் அண்ணன் ரமணன் தூக்கி அமரவைத்தார். ஒருமுறை, கடினமான மெத்தையில் படுத்ததால் புஷ்பராஜுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாம். அதனால் அவரைச் சுற்றி தலையணைகளைக் கொண்டு அணைத்தார் ரமணன்.

“வணக்கம். நான் புஷ்பராஜ்” - கணீர் குரல். பின்னே, ஆசிரியரின் குரல் அல்லவா! புஷ்பராஜ் அவர் ஊரிலுள்ள அவர் படித்த அரசுப் பள்ளியிலேயே ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தக் கனவை அவருள் விதைத்ததும் அவரைச் சிதைத்துப் படுக்கையில் தள்ளிய அதே நோய்தான். “ஏழாம் வகுப்புக்குப் பிறகு ஒவ்வொரு வருஷமும் எலும்புகள் உடைய ஆரம்பிச்சுது.

ஒவ்வொரு முறையும் என் அம்மா, நாட்டு மருத்துவர்கிட்டே கூட்டிப்போய்க் கட்டு கட்டி விடுவாங்க. கட்டும்போதும் பிரிக்கும்போதும் கீழே விழுறப்போ வலிச்ச அதே அளவு வலிக்கும். ரண வேதனையில் துடிப்பேன். என் அம்மாவுக்குக் கண்ணீர் கொட்டும். ஒவ்வொரு முறை கட்டைப் பிரிக்கும்போதும் எலும்பின் வடிவமே மாறியிருக்கும். நேரா இருந்த எலும்புகள் சுருங்கி, வளைஞ்சுடும். அது எவ்ளோ பெரிய பிரச்னைனுகூட என்னால அந்த வயசுல புரிஞ்சுக்க முடியலை. பன்னிரண்டாம் வகுப்பில் ப்யூர் சயின்ஸ் குரூப் எடுத்தேன். எலும்புகள் அடிக்கடி உடைஞ்சுடுறதால ஸ்கூலுக்குச் சரியா போக முடியாது. வீட்டிலிருந்தேதான் படிப்பேன். ஆசிரியர்கள் யாராவது எனக்கு நேரில் வந்து பாடம் சொல்லித் தரணும்னு ஆசைப்படுவேன். அதுதான் எனக்குள் ஆசிரியராகணும்ங்கிற கனவை உருவாக்குச்சு.

ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்து டீச்சர் ட்ரெய்னிங் சேர்ந்திடணும்னு வெறியா படிச்சேன். ஆனால், அந்த வருஷமும் என் கால் எலும்பு உடைஞ்சது. மீதிப் பாடங்களை வீட்டில் இருந்தேதான் படிச்சாகணும். என் நண்பர்கள் எனக்கு நோட்ஸ் எடுத்துக் கொடுத்து, பாடங்களைச் சொல்லிக் கொடுப்பாங்க. அவங்க உதவியால் 1034 மார்க் வாங்கினேன். என் ஸ்கூல்லேயே அதிக மார்க் நான்தான்” எனச் சொல்லும்போது அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் D.Ted படித்திருக்கிறார். பின்னர், பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் பி.எட் படித்திருக்கிறார். அவர் நினைத்தபடி அவர் படித்த பள்ளியிலேயே இன்று ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். குடல் நிறையுமளவிற்கு ஒருநாளில் 20 மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார். மருத்துவச் செலவு மட்டும் மாதம் முப்பதாயிரம் ரூபாயை நெருங்கிவிடுகிறது. அவர் வாங்கும் சம்பளம் மருத்துவச் செலவுகளுக்கே சரியாகிவிடுகிறது.

“ஸ்கூல் முடிச்சதும், திருவள்ளூரில் டீச்சர் ட்ரெய்னிங் சேர்ந்தேன். அங்கேதான் உடல் நிலை இன்னும் மோசமாச்சு. என்னால எழுந்து நடக்கக்கூட முடியலை. என் அண்ணன் கோயம்புத்தூரில் நல்ல வேலையில் இருந்தார். என்னைக் கவனிச்சுக்கிறதுக்காக வேலையை விட்டுட்டு திருவள்ளூர் வந்துட்டார். தினமும் என்னை அண்ணன் தான் க்ளாஸுக்குத் தூக்கிட்டுப் போவார். என் அண்ணன்தான் எனக்கு இன்னோர் அம்மா. நிறைய டாக்டர்கள்கிட்டே கூட்டிப்போய்க் காட்டுவார்; யாருக்கும் எனக்கு என்ன பிரச்னைனே கண்டுபிடிக்க முடியலை. அப்போ ஏ.எம்.செல்வராஜ்ங்கிற டாக்டர்தான் எனக்கிருக்கும் பிரச்னையைச் சரியா கண்டுபிடிச்சுச் சொன்னவர். என்னை ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்துக்கிட்டார். இந்த நோயை க்யூர் பண்ண முடியாது, கன்ட்ரோல்ல வெச்சுக்கலாம்னு சொன்னதும் அவர்தான். அவருக்குப் பிறகு அவர் மாணவர்கள் சுப்ரா, சபியா என்னைப் பார்த்துக்கிறாங்க. அவங்க இல்லைன்னா நான் உயிரோடவே இல்லை”- குரல் கம்முவதால் பாதி வார்த்தைகள் மட்டுமே வெளியே வந்து விழுகின்றன.

இந்த நோயால் புஷ்பராஜ் மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். நாளடைவில், அது தூக்கமின்மையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. பின்னர், இளமதி என்பவர் சொல்லிக்கொடுத்த தியானப்பயிற்சிகளே அவர் மன அழுத்தத்தைக் குறைத்து மன வலிமையைக் கூட்டியிருக்கின்றன. புஷ்பராஜுக்கு ஏற்றார்போல் அவர் வீட்டை மாற்றி அமைத்திருக்கிறார் ரமணன். அறை முழுக்க மெத்தைகளை நிரப்பி, ஸ்விட்ச்களைத் தரை மட்டத்தில் பொருத்தியிருக்கிறார். ஆனால், இன்னமும் இயற்கை உபாதைகளைக் கழிக்க, புஷ்பராஜ் அவரின் அம்மாவின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

“ அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல்...’னு சொல்வாங்கள்ல, அந்த பூமியைவிட பொறுமைசாலி என் அம்மா. இத்தனை வருஷம் கொஞ்சம்கூட சலிக்காம, முகத்தில் எந்த வருத்தத்தையும் காட்டிக்காம, அவங்கதான் என்னைப் பார்த்துக்கிறாங்க. இவ்வளவு நாளா என்னை நல்லாப் பார்த்துக்கிட்ட அம்மாவுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காமல், நான் அவங்களை நல்லாப் பார்த்துக்கணும். ஆனால், அது நடக்குமான்னு தெரியலை” - புஷ்பராஜின் குரல் உடைய, நமக்கு மனம் கனத்துப் போகிறது. உடனே, புஷ்பராஜை மகிழ்ச்சியாக்க, அவரின் மாணவர்களைப் பற்றிக் கேட்டோம்.

“பசங்களோடு செம ஜாலியா இருக்கும். புஷ்பா சார், புஷ்பா சார்னு அவ்ளோ ப்ரியமா பார்த்துக்குவாங்க. பயங்கரமா ஜோக் அடிப்பாங்க. பசங்க எனக்கு கொடுக்கிற சந்தோஷம், கடவுள் என் வாழ்க்கையில் கொடுத்த வரம்...’’

``உங்களுக்குக் கடவுள்மீது கோபம் இல்லையா?’’

``சுத்தமா கிடையாது. எனக்கு அவர் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதற்கு நான் நன்றிதான் சொல்லணும்.”

“ஒருவேளை கடவுளை நீங்க நேர்ல பார்த்தால், அவர்கிட்டே என்ன கேட்பீங்க?’

``நிம்மதி வேணும்னு கேட்பேன்.’’

``என்ன மாதிரியான நிம்மதி?’’

``நிம்மதி. அவ்ளோதான். அந்த ஒரு வார்த்தையிலேயே எல்லாம் அடங்கியிருக்கு” என மௌனமானார்.

- ப.சூரியராஜ்

படங்கள்: வேங்கட்ராஜ்