Published:Updated:

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

பிரவீன்குமார் உளவியல் ஆலோசகர்குடும்பம்

``இன்று பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலும் புகாரும், தாங்கள் சொல்வதைத் தங்கள் குழந்தைகள் கேட்பதில்லை என்பதாகவே இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகச் செல்லம் கொடுப்பது, அவர்களின் ஒழுங்கு குலையக் காரணமாகிறது. அவர்கள் வளரும்போது, எல்லாம் சரியாகிவிடும் என்று  பெற்றோர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகும்போது ஏற்படும் ஏமாற்றம், பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்துகிறது. அதைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் துவக்கத்திலிருந்தே பழக்கப்படுத்த வேண்டிய விஷயங்கள் இவை’’ என்று சொல்லும் உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார் வழங்கும் பேரன்ட்டிங் நோட்ஸ் இங்கே... 

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

1. உங்கள் குழந்தைகள் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான ரோல் மாடலாக நீங்களே மாற வேண்டும். உங்களிடம் உள்ள குறைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள்.

2. பள்ளி செல்லும் வயதில், காலையில் சீக்கிரமாக எழுவதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். காலையில் எழுவது, உணவு, உறங்கச் செல்வது அனைத்தும் நேரப்படி நடக்க வேண்டும்.

3. எழுந்ததும் பெட் காபி போன்ற பழக்கங்கள் வேண்டாம். உங்கள் அன்பு, உங்கள் குழந்தைகளைச் சோம்பேறியாக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாயிருங்கள்.

4. ருசி, பசி தாண்டி உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எடுத்துக்கூறி, சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையல் வேலைகளிலும் குழந்தைகளைப் பங்குபெறச் செய்யுங்கள். உணவை வீணாக்காமல் சாப்பிடப் பழக்குங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!5. வயதில் பெரியவர்  உட்பட, யார் கேள்வி கேட்டாலும் அதை முதலில் உள்வாங்கி, உரிய மரியாதையுடன் பதில் சொல்லப் பழக்குங்கள். சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.

6. தன் சுத்தத்தை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். சாப்பிடும் முன் கை கழுவுவதில் தொடங்கி, படுக்கைக்குச் செல்லும்போது பல் துலக்குவதுவரை, அனைத்தையும் தாமாகவே முன்வந்து செய்யும்

7. வெளியிடங்களுக்குச் செல்லும்போது குப்பைத் தொட்டிகளிலிருந்து கழிவறைவரை சமூக அக்கறையோடு அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.

8. நீங்கள் சொல்லும் விஷயத்தை உங்கள் குழந்தை பின்பற்றும்போது பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்; பரிசளித்து அங்கீகரியுங்கள்.  

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

9. ஆரம்பத்தில் குழந்தைகள் சில பழக்கங்களைப் பின்பற்ற விருப்பமின்றி இருப்பார்கள். அதற்கு ‘21 டேஸ் மேஜிக்’கை செயல்படுத்திப் பாருங்கள். அதாவது, வீட்டுக்கு வந்ததும் ஹோம்வொர்க் செய்வதிலிருந்து இரவு உறங்கச்செல்லும் முன் பல் துலக்குவதுவரை 21 நாள்கள் குழந்தைகளை ஒரு செயலைத் தொடர்ந்து செய்யவைத்து வாருங்கள். 22-வது நாள் தாங்களாகவே அவற்றைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

10. வெளியில் அழைத்துச் செல்லும்போது குழந்தை பார்ப்பதையெல்லாம் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டால், குழந்தை ஆசைப்படுகிறது என்பதைவிட, குழந்தைக்கு அது தேவையா, உங்கள் பொருளாதாரத்துக்கு அது சரிவருமா என்பதை முதலில் நீங்கள் ஒரு நொடி சிந்தியுங்கள். பிறகு, அதைக் குழந்தைக்கும் சொல்லிப் புரியவையுங்கள். இதன் மூலம், வளர்ந்த பிறகும் அநாவசியச் செலவு செய்யும் பழக்கம் அவர்களை நெருங்காதிருக்கும்.  

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

11. எட்டு வயதில் 100 கவுன்ட்ஸ் ஸ்கிப்பிங் போடுவது, 10 வயதில் 100 திருக்குறள் மனப்பாடம் செய்வது என அந்தந்த வயதுக்கான கோல் செட்செய்து கொடுங்கள். அதை அடையும்போது குழந்தையைப் பாராட்டி, அடுத்த கோலை நோக்கி உத்வேகப்படுத்துங்கள்.

12. தன்னை எந்தச் சூழலிலும் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். ஒருவேளை அவர்களுக்குப் பாலியல்ரீதியான தொந்தரவுகள் நேர்ந்தால், உங்களிடம் உடனடியாகத் தெரியப்படுத்தும் தெளிவையும் நம்பிக்கையையும் கொடுங்கள்.

13. எதையும் புரிந்து படிக்கக் கற்றுக்கொடுங்கள். கிரியேட்டிவிட்டிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விளையாட்டு, இசை என அவர்கள் எந்தத் துறையில் விருப்பமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதில் ஊக்கப்படுத்துங்கள்.

14. மொபைல், டேப் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்து அவர்களை கேட்ஜெட் அடிமைகளாக்காதீர்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைச் சட்டை செய்யாமல் அதிலேயே மூழ்கிக்கிடப்பது, தவறான இணையதளங்களுக்குச் செல்ல நேர்வது, ஒளிர்திரையால் ஏற்படும் கண் பாதிப்புகள் உட்பட, கேட்ஜெட்கள் குழந்தைகளுக்குத் தரும் தீங்குகள் நிறைய. 

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

15. படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என அவர்கள் நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். அவர்களுடன் நீங்கள் செலவழிக்கும் ‘குவாலிட்டி டைம்’, மிக முக்கியம்.

16. இன்றைய குழந்தைகளிடம் இரும்புச்சத்து உட்பட பல சத்துக்குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன், கவனிக்கும் திறன், நினைவுத்திறன் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்துச் சத்துகளும் அவர்களுக்குக் கிடைக்கும் உணவை நீங்கள் கொடுக்கிறீர்களா என்று, உங்கள் வீட்டின் மெனுவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

17. வியர்க்க வியர்க்க விளையாடுவது, பசித்த பின் சாப்பிடுவது இவை இரண்டும் சிறப்பு.

18. குழந்தைகள் தோல்வி மற்றும் குழு மனப்பான்மையைப் பழக வேண்டும். குழு விளையாட்டுகள் நட்புப் பாலத்தை உருவாக்குவதுடன் தோல்வியைப் பழகவும் கற்றுக்கொடுக்கும்.

19. இடத்துக்கு ஏற்ப கண்ணியமாக உடுத்தும் நாகரிகத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

20. தவறு செய்துவிட்டால் மன்னிப்புக் கேட்கவும், உதவி பெற்றால் நன்றி சொல்லவும் கற்றுக்கொடுங்கள். அனைவரையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளவும் எல்லா விஷயங்களையும் நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.

- யாழ் ஸ்ரீதேவி