Published:Updated:

டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

கேசவன் ஜெகதீசன் குடல், இரைப்பை நிபுணர்ஹெல்த்

ம் ஒவ்வொரு நாளையும் இனிமையாக மாற்றுவது நாம் எழுந்தவுடன் செய்யும் காலைக் கடன்களே! அதில் சிரமம் ஏற்பட்டால், அன்றைய தினம் முழுவதையும் சிறு கோபம் அல்லது எரிச்சலுடனேயே நகர்த்த வேண்டியிருக்கும். ஒருவிதமான சோர்வும் நாள்முழுக்கக் கூடவே வரும். நம் வாழ்வியலிலும் உணவு முறையிலும் ஏற்படும் மாற்றங்கள்தான் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நமக்கு ஏற்படும் ஆரோக்கியத் தடைகளுக்குப் பல விஷயங்கள் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.  

டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

நாம் சாப்பிடும் உணவுகளைச் செரிக்கும் செரிமான மண்டலம், உடலின் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலம் சீராகச் செயல்பட்டால்தான் உடலின் பிற உறுப்புகளும் பாதிப்பு எதுவுமில்லாமல் சீராக இயங்கும். செரிமான மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும். இப்படிச் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டுக்குப் பின்னால் ஏற்படும் வயிறு, இரைப்பைக் கோளாறுகளால் மலம் கழிக்கும்போது ஏற்படும் பிரச்னையை `இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome) என்கிறார்கள்.

இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்பது என்ன... அதன் அறிகுறிகள்... சிகிச்சைகள், இது எதனால் வருகிறது, யாருக்கு வரும் என்பது பற்றி குடல், இரைப்பை நிபுணர் கேசவன் ஜெகதீசன் விரிவாக விளக்குகிறார்.

இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் (IBS - Irritable Bowel Syndrome)


 இரைப்பையில் ஏற்படும் கோளாறு.  இதனால், ஆசனவாயில் எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். இது ஒரு செயல்பாட்டுக் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது. மாறாக, இது நாள்பட்ட பிரச்னையாக இருக்கும்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

எவ்வளவு கால இடைவெளியில் இந்தப் பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியும்?

மலம் கழிக்கும்போது ஒருவிதமான அசௌகரிய உணர்வு உண்டாகும். இந்த உணர்வு, குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் இருக்கும். குறிப்பாக, ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் இருக்கும். இதுவே இரிட்டபிள் பவல் சிண்ட்ரோமுக்கான பிரத்யேக அறிகுறி. மேலும், கழிக்கும் மலத்தின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.

என்ன காரணங்கள்?


• பெருங்குடல் மற்றும் சிறுகுடலின் சீரற்ற இயக்கம்.

• வாய்வு வெளியேறும்போது அல்லது மலம் வெளியேறும்போது வயிறு மற்றும் ஆசனவாயில் வலியுடன் வெளியேறுதல்.

• இனிப்பு மற்றும் அமில உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது.

• வயிற்றுக்கோளாறு, வயிறு தொடர்பான நோய்கள் அல்லது பாக்டீரியா தொற்று.

• பதற்றம், மனச்சோர்வு.

• ஹார்மோன் சுரப்பில் மாற்றம்.

• சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகரிப்பது.

அறிகுறிகள் எப்படியிருக்கும்?

• கடுமையான வயிற்றுவலி

• வயிற்று உப்புசம்

• மலம் கழிக்கும்போது சிரமம் ஏற்படுதல்

• வாய்வுக்கோளாறு அதிகரித்தல்

• அடிவயிற்றுப்பகுதியில் வீக்கம்

• வயிறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தசைப்பிடிப்பு

• உணவு உண்பதில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்

• வலதுபுறத்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுதல்

இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் வேறு பிரச்னைகளாலும் வருமா?

மேலும் சில உடல் உபாதைகளுடன் சேர்ந்தும் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் ஏற்படலாம். அவை...

• செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகள்.

• வயிறு மற்றும் குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

• சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரகக் கோளாறு போன்றவை.

• குடலில் நச்சுகள் தங்கிவிடுவதால் ஏற்படும் குடல் அழற்சி.

• செரிமானச் செயல்பாடுகள் நிகழப் போது மான அளவு நார்ச்சத்து இல்லாத நிலை.

 இந்தப் பிரச்னையின் பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா?

இல்லை. இரிட்டபிள் பவல் சிண்ட்ரோமில் மூன்று வகைகள் உள்ளன.

வயிற்றுப்போக்குடன் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்  (IBS-D - Irritable Bowel Syndrome with Diarrhea): இந்த வகையில் வயிற்றுப்போக்குடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, வீக்கம், அடிக்கடி மலம் கழித்தல், மலம் கழித்து முடித்த உணர்வற்றுப்போதல், குமட்டல், வாய்வுத்தொல்லை, வயிற்றுவலி, திடீரென மலம் வருதல் போன்றவை ஏற்படும்.

மலச்சிக்கலுடன் இர்ரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் (IBS-C - Irritable Bowel Syndrome with Constipation): இந்த வகையில் மலச்சிக்கலுடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது வலி ஏற்படுதல், மலம் கழித்து முடித்த உணர்வற்றுப்போதல், கடுமையான வயிற்றுவலி, வாய்வுத்தொல்லையுடன் கூடிய தசைப்பிடிப்பு வலி, வீக்கம் போன்றவை ஏற்படும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்குடன் கூடிய இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் (IBS-M - Irritable Bowel Syndrome with alternating constipation and diarrhea): இந்த வகையில் கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்க லுடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும்.

ஐபிஎஸ் மற்றும் ஐபிடி இரண்டும் ஒன்றா?

ஐபிஎஸ் என்பது ‘இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’. இது இரைப்பையில் ஏற்படும் பிரச்னையால் மலம் கழிக்கும்போது கடினத்தன் மையை உண்டாக்கும். ஐபிடி என்பது ‘இன்ஃப்ளா மேட்டரி பவல் சிண்ட்ரோம்’ (Inflammatory bowel syndrome). இது மலம் கழிக்கும்போது அழற்சியை உண்டாக்கும்.வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, திடீரென மலம் வருதல் போன்ற அறிகுறிகள் இரண்டுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். மலம் கழிக்கும்போது ஏற்படும் ரத்தப்போக்கு, குடலில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றும் அல்சர் போன்றவை ஐபிடியால் ஏற்படும்.

இதற்கான சிகிச்சைகள் எப்படியிருக்கும்?

இதற்கென தனியே மருந்து மாத்திரைகள் போன்ற சிகிச்சைகள் கிடையாது. வாழ்வியல் மாற்றம், உணவு முறையில் மாற்றம் மற்றும் மன அமைதியே  இரிட்டபிள் பவல்  சிண்ட்ரோமுக்கான சிகிச்சைகள்.

உணவுமுறைகளில் எப்படிப்பட்ட மாற்றங்கள் வேண்டும்?

நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். முழு தானியங்கள், சிவப்பரிசி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். அவ்வப்போது புரோபயாடிக் (Probiotic) உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதப் படுத்தும் பால் பொருள்கள், டீ, காபி, கார்பனேட்டட் பானங்கள், கஃபைன் மற்றும் ஆல்கஹால் நிறைந்த பானங்கள், காரம் மற்றும் மசாலா அதிகம் சேர்த்த உணவுகள், பொரித்த உணவுகள், நிறமூட்டிகள் நிறைந்த இனிப்புகள், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் வாய்வுத்தொல் லையை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் வழிகள் என்னென்ன?

• சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும். அளவான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.

• புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

• தினசரி உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

• மன அமைதிக்கு உதவும் உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றைத் தினந்தோறும் செய்யவும்.

• செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.

- ச.மோகனப்பிரியா

டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

எந்த வயதுக்குட்பட்டவர்களுக்கு இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் வரும்?

16 முதல் 40 வயது இடைப்பட்டவர்களுக்கு இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் அதிகமாக வரும். குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் பத்து லட்சம் பேர் இந்தப் பிரச்னை யால் வருடம்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.

டாக்டர் டவுட் - இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்

யாருக்கு வரலாம்?

• நீண்ட நாள் புகைப்பழக்கம் உள்ளவர்கள்

• அதிக அளவு காபி குடிப்பவர்கள்

• மன அழுத்தம் உடையவர்கள்

• பாலியல் பிரச்னை உள்ளவர்கள்

•  முறையற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள்