Published:Updated:

குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!

குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!

சிவப்ரியா மாணிக்கவேல் உணவியல் ஆராய்ச்சியாளர்ஹெல்த்

டுகு, மருத்துவத்தன்மை வாய்ந்த, பிரபலமான மசாலாப் பொருள்களில் ஒன்று. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே சமஸ்கிருத நூல்களில் கடுகு விதைகளின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தனித்துவமான சுவையைக்கொண்டிருக்கும் கடுகு விதை, கடுகுக் கீரை, கடுகு எண்ணெய் ஆகியவற்றிலிருக்கும் பினாலிக் காம்பௌண்ட்ஸ் (Phenolic Compounds) பல்வேறு ஊட்டச்சத்துகளுடன் இணைந்து பல நன்மைகளை நம் உடலுக்குத் தருகின்றன. கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் ஆகிய  கனிமங்களும், ஏ, சி, கே, இ, பி வைட்டமின்களும், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஓலிக் அமிலம் (Oleic acid) போன்ற அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்களும் இதில் நிறைந்திருக்கின்றன.  

குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!

இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில், கடுகில் இருக்கும் குளூக்கோசினோலேட்ஸ் (Glucosinolates), புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்பதும் நல்ல செல்களைப் புற்றுநோய் செல்கள் தாக்காதவாறு பாதுகாக்கின்றன என்பதும் தெரியவந்திருக்கிறது.

கடுகில் இருக்கும் ரசாயனக் கலவைகள் எச்சில் சுரப்பதை அதிகரித்து, பசியைத் தூண்டுகின்றன. செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணக் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கின்றன. கடுகு விதைகள் ஆன்டி பயாடிக் தன்மைகொண்டவை. அதனால் குடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளையும் நச்சுத்தன்மையையும் சுத்தம்செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.  கடுகு எண்ணெயை நம்  சருமத்தின் மீது தடவினால் அது வெப்பத்தை உருவாக்கும். இது சுளுக்கு, தசைவலி, மூட்டுவலி, வாதநோய் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும். கடுகு விதைகளில் பைட்டோகெமிக்கல்களான கரோட்டின் (Carotene) மற்றும் லூடின் (Lutein) ஆகியவை நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்களைக்கொண்ட இவை, செல் முதிர்ச்சியைத் தடுத்து, நம் சருமத்துக்கு இளமையான தோற்றத்தைத் தருபவை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!


கடுகுக்கீரை சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு. கடுகுக்கீரையைச் சாப்பிடுவது, ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும்;  பித்த அமிலங்களை உடலிலிருந்து வெளியேற்றி, உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கடுகுக்கீரை, ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகளைக் கரைத்து, மாரடைப்பு  ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். கடுகுக்கீரையில் இருக்கும் வைட்டமின் பி 6, ரத்தத் தட்டுகள் (Platelets) ஒன்றாகச் சேர்ந்து ரத்த உறைவு ஏற்படாமல் இதயம், மூளையைப் பாதுகாக்க  உதவும்.

குட்டிக் கடுகு குறையாத நன்மைகள்!

கடுகுக்கீரை, மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்குப் பல நன்மைகளைத் தரும். இதிலிருக்கும் கால்சியம் மற்றும் மக்னீஷியம் எலும்பின்  ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மெனோபாஸ் தொடர்பான எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க உதவும்.  ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பையும்  குறைக்கும். கடுகைத் தாளிப்பதற்கும், சைவ உணவுகள், இறைச்சி, மீன் ஆகியவற்றில் சுவையூட்டுவதற்கும், ஊறுகாய் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். கடுகுச் செடி வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் வளரக்கூடியது.  கடுகுக்கீரையை அது இளசாக, மென்மையாக  இருக்கும்போதே அறுவடை செய்துவிட வேண்டும். முற்றிய இலைகள் அதிகக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.

எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும் கடுகின் கீர்த்தி (புகழ்) மிகப் பெரியது என்பதை  மறுப்பதற்கில்லை.