Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் Sulphanin பவுடரைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பயன்படுத்துவேன். ஆனால், அந்தப் பவுடருடன் இணைக்கப்பட்டுள்ள துண்டுச்சீட்டில் `Sulphanin பவுடரை நீர் அல்லது எண்ணெயுடன் குழைத்துப் பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெயுடன் குழைத்துப் பயன்படுத்துவதால் அதன் தன்மை மாறுமா? வேறு எதுவும் பிரச்னைகள் வருமா?   

கன்சல்ட்டிங் ரூம்

- நிவேதா, அருப்புக்கோட்டை.

காயங்களுக்குப் போடப்படும் Sulphanin பவுடரைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பயன்படுத்தலாம். தவறில்லை; ஆனால், அதனால் எந்தப் பயனுமில்லை. பொதுவாகக் காயங்களில் பவுடரை வெறுமனே பயன்படுத்துவதுதான் சிறந்தது. காயங்களின் மேல் அப்பிவிடுவதே போதுமானது. இப்படிச் செய்வதால், பவுடரின் தன்மை நேரடியாகக் காயத்துக்குள் செல்லும். விரைவில் காயங்கள் ஆறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கன்சல்ட்டிங் ரூம்

என்னுடைய வயது 35. அனைத்துப் பருவகாலங்களிலும் சளிப்பிடித்துக்கொண்டே இருக்கிறது. குணமடைந்தாலும் மீண்டும் சில நாள்கள் கழித்து சளிப்பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படிச் சரிசெய்யலாம்?

- துரை, நாகப்பட்டினம்.     

கன்சல்ட்டிங் ரூம்

பருவநிலை மாற்றத்தின்போது சளி, இருமல் போன்ற தொற்றுப் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், எப்போதும் அது தொடர்வது ஆரோக்கியமானது இல்லை. இது, ஆஸ்துமா குறைபாடாக இருக்க வாய்ப்புள்ளது. மூச்சுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், ப்ரான்கியல் ஆஸ்துமா (Bronchial asthma) ஏற்படும். பருவநிலை மாற்றம், இப்பிரச்னையைத் தீவிரப்படுத்துவதற்கு முக்கியக் காரணம். 19 முதல் 40 வயதுக்காரர்களுக்கு இதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்பதால், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

கன்சல்ட்டிங் ரூம்

எனக்குத் தலைமுடி அதிகம் கொட்டுகிறது. வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம்  உண்டு. அப்போது வழக்கத்தைவிட அதிகமாகக் கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம்?

- சவீதா, சிவகாசி   

கன்சல்ட்டிங் ரூம்

தலைமுடி கொட்டுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சூடு அதிகமானாலும் தலைமுடி கொட்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதும் தலைமுடி கொட்டுகிறது என்றால், இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள், தைராய்டு பிரச்னைகளாலும்  தலைமுடி கொட்டும். தவிர, தலைமுடிக்கு எண்ணெய் வைக்காமல் ஷாம்பு பயன்படுத்தினாலும், தண்ணீர் மாற்றிக் குளித்தாலும் தலைமுடி உதிர வாய்ப்புண்டு. மன அழுத்தம்,  டென்ஷன், சில நோய்கள் காரணமாகவும் தலைமுடி உதிரும். தவிர, காற்றில் உள்ள மாசு, அதிகமாக டீ, காபி குடிப்பது, தலையை அசுத்தமாக வைத்திருப்பது, பைக்கில் வெகு தொலைவு பயணம் செய்வது போன்றவற்றாலும் தலைமுடி உதிரலாம்.

தலைமுடி உதிர்வுக்கான காரணத்தைக்  கண்டுபிடித்தால் மட்டுமே தீர்வை யோசிக்க முடியும்.  அதிக அளவு புரதம், இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் வெந்தயத்தை ஊறவைத்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடலாம். தினசரி ஒரு முட்டை, வாரம் இரண்டுமுறை மீன், இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடலாம். நோய், ஹார்மோன் மாற்றங்கள், தைராய்டு போன்றவற்றால் தலைமுடி உதிர்ந்தால் நோய்க்கான சிகிச்சையுடன் உணவில் மாற்றங்கள் செய்வது சிறந்தது. உடல் உஷ்ணத்தால் தலைமுடி உதிர்ந்தால் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:  கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.