Published:Updated:

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - டிசம்பர் 3ஹெல்த்

ருடம் 1963. அந்த இளைஞனுக்கு 21 வயது இருக்கும்.  வயதுக்குரிய வேகத்துடன் துடிப்பாய் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். காரணம், அதிசயிக்கவைக்கும் அவனது கற்றுக்கொள்ளும் திறன். பள்ளியில் படிக்கும்போதே “ஹே! நம்ம ஸ்கூல் ஐன்ஸ்டின் போறான் பாரு!” என்று மாணவர்கள் கிண்டலடிக்கும் அளவிற்குப் பிரபலம். அதுவரை மகிழ்ச்சியின் விலாசமாகச் சென்ற வாழ்க்கை, மிகப்பெரிய திருப்புமுனை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டது. பெயரே புரியாத நோய் ஒன்று அவனைத் தாக்கியது. மோட்டார் நியூரான் நோய் என்று அழைக்கப்பட்ட அது, அந்த இளைஞனின் கைகள் மற்றும் கால்களைச் செயலிழக்க வைத்ததோடு, பேசும் திறனையும் பிடுங்கிக்கொண்டது.   

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

படுக்கையில் வீழ்ந்த அவனுக்கு ‘இன்னும் இரண்டு வருடங்கள் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்’ என்பதே  மருத்துவர்கள் கொடுத்த பதில், ஆனால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வேறு ஓர் இதிகாசத்தை அவனுக்காக எழுதத் தொடங்கியிருந்தது.

இன்று, அந்த இளைஞனுக்கு வயது 75. தத்துவார்த்த இயற்பியலாளர், அண்டவியலாளர், எழுத்தாளர் என்று பல அரிதாரங்களைப் பூசிக் கொண்டு உலகத்திற்கே செல்லப் பிள்ளையாகி விட்டார். அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்! பேசவும் முடியாது, நடக்கவும் முடியாது என்று மருத்துவர்களே கைவிட்ட ஒருவர், இன்று பல ஆராய்ச்சிகள் செய்கிறார்; புத்தகங்கள் எழுதுகிறார்; இளம் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த மாற்றத்திற்கும் அவரது தன்னம்பிக்கைக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அறிவியல்!

கடவுள் ஆவோமா?

பிறக்கும்போதே மாற்றுத்திறனுடன் பிறப்பவர்கள், கோரவிபத்தால் மாற்றுத்திறனாளி யானவர்கள், இவர்களின் பிரச்னைகளை நூறு சதவிகிதம் எந்த மருந்தாலும் நிவர்த்தி செய்ய முடியாது. குணமாக்க முடியா விட்டாலும், அவர்களுக்கு ஒரு தீர்வை அறிவியலால் நிச்சயம் கொடுக்க முடியும். நடக்கவே முடியாது, முதுகெலும்பு சிதைந்து விட்டது, படுத்த படுக்கைதான் என்பவருக்கு எல்லாம் சக்கர நாற்காலி கொடுத்த இளம் அறிவியல், இப்போது அதன் அடுத்த கட்டத்துக்கு முதிர்ச்சி அடைந்துள்ளது.

ப்ரோஸ்த்தெடிக்ஸ் (செயற்கை உறுப்புகள்)

உங்கள் வீட்டில் இருக்கும் மேசை ஒன்று கிடுகிடுவென ஆடுகிறது. ஒரு கால் தரையில் படாமல் இருக்கிறது. என்ன செய்வீர்கள்? ஒரு கல்லோ, அட்டையோ வைத்து முட்டுக் கொடுப்பீர்கள். அதே தத்துவார்த்த அடிப்படையில், மனித உடலுக்குக் கை மற்றும் கால்கள் செயற்கை முறையில் செய்தால் அது தான் ப்ரோஸ்த்தெடிக்ஸ். பல வருடங்களாக இது புழக்கத்தில் இருந்தாலும், தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தால், நிஜத்தைப்போன்றே ப்ரோஸ்த்தெடிக்ஸ் உருவாக்க முடியும். அது மட்டுமின்றி, அதற்கான செலவு, செயல்பாடு, மற்றும் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து மனிதர்கள் சுலபமாகப் பயன்படுத்தும் வகையில் இப்போது ப்ரோஸ்த்தெடிக் தீர்வுகள் வந்துவிட்டன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

3D பிரின்டெட் ப்ரோஸ்த்தெடிக்ஸ்

ப்ரோஸ்த்தெடிக் செய்யும் செலவானது சமீப காலங்களில் பத்து மடங்கு குறைந்துள்ளது. இன்று அவற்றை 3D பிரின்டிங் முறையில் தயாரித்து விடலாம். இதன் மூலம் ப்ரோஸ்த்தெடிக் உறுப்புகளின் எடையைப் பெருமளவு குறைக்க முடியும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பயோமிமிக்ரி முறையில் இயற்கையாக நடப்பது போன்ற உள்ளுணர்வைத் தர முடியும். 

Brain-Computer Interface (BCI)


BCI என அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மற்ற உறுப்புகளைப் போல், செயற்கையாகப் பொருத்தப்பட்ட ப்ரோஸ்த்தெடிக்ஸ்களையும் கட்டுப்படுத்த முடியும். இங்கே இவை ரோபோடிக் லிம்ப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. தவிர, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்கூடத் தங்கள் நாற்காலியைத் தாங்களே தங்கள் எண்ணங்களில் கட்டுப்படுத்த முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், 2020-ல் இவற்றைச் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

3D பயோபிரின்டிங்

தண்டு உயிரணுக்கள் மற்றும் 3D பிரின்டிங் முறையைப் பயன்படுத்திச் சிதிலமடைந்த உறுப்புகள் மற்றும் தசைகளை மீண்டும் உருவாக்க முடியும். கிட்டத்தட்ட, உங்கள் நிஜ உடலைப் போன்றே இருக்கும் இதைக்கொண்டு உறுப்புகளை இழந்தவர்கள் நிச்சயம் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

ஜீன் தெரபி

கை மற்றும் கால்கள் செயலிழந்த ஒருவருக்கு அதற்குக் காரணமான மரபணுக் கோளாறுகளைச் சரி செய்ய இந்த முறை பயன்படுகிறது. இதில் உங்கள் DNAவை அலசி ஆராய்ந்து எந்த அணுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கண்டறிவார்கள். CRISPR என்ற கருவியின் மூலம் பாதிப்படைந்ததை நீக்கிவிட்டுப் புது மரபணுவை உருவாக்கி உடல் பாதிப்பையும் சரி செய்ய முடியும்.

- ர.சீனிவாசன் 

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!
உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!