Published:Updated:

கன்னக்குழிக்கும் வந்தாச்சு அழகுசிகிச்சை!

கன்னக்குழிக்கும் வந்தாச்சு அழகுசிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னக்குழிக்கும் வந்தாச்சு அழகுசிகிச்சை!

துரைராஜ் சரும மருத்துவர்ஹெல்த்

“அவள் கன்னத்தின் குழியில் சிறு செடிகளும் நடலாம்”

‘காக்க காக்க’ திரைப்படப் பாடல் இது. இன்னும் நிறைய திரைப்பாடல்களிலும் காதல் கவிதைகளிலும் கன்னக்குழிகள் பாடப்பட்டிருக் கின்றன. கன்னக்குழிகள் அழகு மற்றும்  இளமையின் அடையாளமாகப் பார்க்கப் படுகின்றன. சிலர் இதை அதிர்ஷ்ட மாகவும் கருதுகின்றனர். ஆனால், அனைவருக்கும்  கன்னத்தில் குழி விழுவதில்லை. கன்னம் அல்லது முகவாய்க் கட்டையில் ஏற்படும் சிறிய பள்ளமே கன்னக்குழி ஆகும்.  அதற்குக் காரணம் Zygomaticus Major எனும் தசை தான். இந்தத் தசையில் ஏற்படும் வித்தியாசமே குழி உருவாகுவதற்கான காரணமாகும்.  

கன்னக்குழிக்கும் வந்தாச்சு அழகுசிகிச்சை!

இரண்டு அல்லது பிளவுபட்ட Zygomaticus Major அமைந்திருப்பதே கன்னக்குழிக்குக்  காரணம். பொதுவாகக் கன்னத்தில் குழி விழுவது பரம்பரைப் பண்பின் காரணமாக வருகிறது. சிலருக்குக் கன்னக்குழிகள் தோன்றிக் குறிப்பிட்ட நாள்கள் கழித்து மறைந்தும் போகலாம்.

சீக் டிம்பிள் மற்றும் சின் டிம்பிள் எனக் கன்னக்குழிகளில் இரண்டு வகை உண்டு.

Cheek Dimple: இவ்வகைக் குழிகள் ஒருவர் ஏதோ முகபாவனை செய்யும்போது மட்டும் முகத்தில் உண்டாகும்.

Chin Dimple: முகவாய்க்கட்டையில் உண்டாகும் ஒரு சிறிய கோடு /பள்ளமே இக்குழி உருவாகக் காரணம். இவ்வகைக் குழிகள் முகபாவனைகள்  எதுவும் செய்யாமலே நம் கண்களுக்குத் தெரியும். நிரந்தரமாகவே இருக்கும்.

மற்றவரைக் கவரக்கூடிய கன்னக்குழிகள் அனைவருக்கும் அமைவதில்லை.    அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. செயற்கையாகக் கூடக் கன்னக்குழிகளை உருவாக்க முடியும் என்கிறது மருத்துவம். இந்தச் சிகிச்சையின் பெயர் ‘டிம்பிள் பிளாஸ்டி’ (Dimple Plasty). அதாவது கன்னத்தின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தி அடித்தோலினை சேர்த்துத் தைத்து விடுவார்கள். இப்படிச் செய்தபின் இயற்கை யாகவே கன்னக் குழிகள் இருப்பது போன்று காட்சியளிக்கும். சிகிச்சை நடந்தபின் சில வாரங்கள் கழித்தே கன்னக்குழி தெரியும்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கன்னக்குழிக்கும் வந்தாச்சு அழகுசிகிச்சை!

டிம்பிள் பிளாஸ்டி சிகிச்சை பற்றி சரும மருத்துவர் துரைராஜ் தரும் தகவல்கள்...

இந்தச் சிகிச்சையில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா?

இது மிகவும் பாதுகாப்பான, நம்பகமான, குறைந்த நேரத்தில் எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய சிகிச்சை. சிகிச்சை பெற விரும்புவோருக்கு சிகிச்சைப் பற்றிய முழுவிவரமும் அளிக்கப்படும். மயக்க மருந்து (Local Anesthesia) செலுத்திய பின்னரே சிகிச்சை தொடங்கும். கன்னக் குழிகள் எங்கு வேண்டும் என்பதைக்கூட சிகிச்சை பெற விரும்புவோர் முடிவு செய்யலாம். அவரின் முகத்திற்கு ஏற்றவாறு மருத்துவர் குழிகள் எங்கே இருந்தால் அழகாக இருக்கும் என்ற அறிவுரையை வழங்குவார்.

யாரெல்லாம் இந்தச் சிகிச்சையைச் செய்யக் கூடாது?


அழகுக்காகப் பலர் இந்த ஒப்பனை சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள். நரம்பு தொடர்பான பிரச்னைகள் இருப் போர் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் இந்தச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிகிச்சைக்கு பின்னால் கன்னக்குழிகள் வேண்டாம் என்றால் நீக்கிவிட முடியுமா?


முடியும். குறிப்பிட்ட காலம்வரைதான் கன்னக்குழிகள் தெரியும். காலப்போக்கில்  முகத்தசைகள் வளரும்போதோ அல்லது சுருக்கங்கள் உண்டாகும்போதோ அவை தெரியாமலேயே போய்விடும்.

-இ.நிவேதா

கன்னங்கள் அழகாக

வா
யை முழுவதுமாகத் திறந்து, பின் சிரிப்பது போல் செய்ய வேண்டும். சிறிதளவு நல்லெண்ணையை வாயில் வைத்துக்கொண்டு காலை அல்லது இரவு வேளையில் கொப்பளிக்க வேண்டும். வட்டம், நீள்வட்டம் எனப் பல முக வடிவங்கள் உண்டு. சிலருக்குத் தாடையோடு முகம் ஒட்டிப் போயிருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் கன்னங்கள் போஷாக்காகும்.