Published:Updated:

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

விழிப்பு முதல் உறக்கம் வரை! நாம் செய்வதெல்லாம் ஆரோக்கியம்தானா? 

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizண் விழித்தது முதல் தூங்கும் வரை தினமும் நாம் சரியாகச் செய்வதாக நினைத்துப் பல செயல்களைத் தப்பும் தவறுமாகச் செய்துகொண்டிருக்கிறோம். படிப்பது, எழுதுவது, உட்கார்வது, உறங்குவது... என சின்னச்சின்னச் செயல்களைக்கூட நாம் சரியான நிலையில் இருந்துதான் செய்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்வி. இவற்றில் அக்கறை காட்டாமல் இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடல்நலனைப் பாதிக்கும். சில வேளைகளில் அவையே பெரிய பிரச்னைகளைக்கூட உருவாக்கலாம். அப்படி நாம் செய்யும் செயல்கள் என்னென்ன... அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று விரிவாகச் சொல்கிறார் இயன்முறை மருத்துவர் கோ.வித்யாசாகர்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!
நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

காலையில் எழுந்ததும் என்ன செய்வீங்க?

காலையில் தூங்கி எழுந்ததும் உள்ளங்கைகளைச் சூடுபறக்கத் தேய்த்துக் கண்களில் வைப்பது, கண்ணாடியில் முகம் பார்ப்பது, கடவுளின் போட்டோவைப் பார்ப்பது, சூரியனைப் பார்ப்பது, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பது, கடிகாரத்தைப் பார்ப்பது... எனப் பலருக்குப் பல வழக்கங்கள். இன்னும் சிலர் கண் விழித்ததுமே மொபைலைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், நெட்டி முறித்து, சொடக்குப் போடுவார்கள். சிலரோ தங்கள் உடல் அலுப்பைப் போக்க, முடிந்தவரை கைகால்களை நீட்டி நெளிப்பார்கள்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

`இதுபோன்ற பழக்கங்களைக் காலையில் எழுந்ததும் செய்வதால், நரம்புகள் பிடித்துக்கொண்டு தசைப் பிடிப்பு ஏற்படும்’ எனச் சிலர் பயம் காட்டுவார்கள். உண்மையில், காலையில் எழுந்ததும் நாம் இந்தப் பழக்கங்களில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணமாக, நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தூங்கி எழுந்தவுடன் என்ன செய்கின்றன என்பதைக் கவனித்தாலே இதுபோன்ற தேவையற்ற பயம் நம்மைவிட்டு விலகிவிடும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

பூனை, நாய் போன்றவை தூங்கி எழுந்ததும் கைகால்களை நன்றாக நீட்டி நெளிக்கும். உடலைக் குலுக்கி அலுப்பைப் போக்கிக்கொள்ளும். தூக்கம் கலைந்ததும், சிறிது நேரம் நடக்கும். பிறகு, காலைக் கடனை முடிக்கும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். காரணம், அறிவியல்பூர்வமாக விலங்கிலிருந்து வந்தவன் மனிதன்.

விலங்குகளுக்கு முதுகெலும்பு நேராக இருக்கும். இதயம் முதுகெலும்புக்குக் கீழ் இருக்கும். மனிதனுக்கு முதுகெலும்பு வளைந்து இருக்கும். இதயம் பக்கவாட்டில் இருக்கும். இதனால் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்புச் சீராக, நாம் சற்றுக் கூடுதல் செயல்களைச் செய்ய வேண்டும். அதற்கான ஆரம்பமே ஸ்ட்ரெச்சஸ் (Stretches).

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

ஸ்ட்ரெச்சஸ் ஏன் அவசியம்?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தசைகளின் ஒத்துழைப்பு அவசியம். தசைகளை இதமாக வைத்துக்கொள்ள ஸ்ட்ரெச்சஸ் செய்ய வேண்டும்.
பலன்கள்:

 * கை, கால், இடுப்பு, முதுகுப்பகுதிகளில் உள்ள தசைப்பிடிப்புகள் நீங்கும்.

 * உடலின் நெகிழ்வுத்தன்மை மேம்படும்.

 * உடல் அழகான தோற்றம் பெறும்.

 * உடலை உறுதியாக்கும். எனர்ஜி லெவலைக் கூட்டும்.

 * தசைப்பிடிப்புகள், சுளுக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

 * உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

 * நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

 * உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.

 * உடற்பயிற்சியால் ஏற்படும் உடல்வலியைக் குறைக்கும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

உணவு முறை:

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது உணவு. அப்படிப்பட்ட உணவைத் தவிர்க்காமல், குறிப்பிட்ட நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.

சாப்பிட சரியான நேரம் எது?

காலை உணவு    7 முதல் 8 மணி

மிட் மார்னிங்    10:45 முதல் 11:30 மணி

மதிய உணவு    12 முதல் 2 மணி

மாலை ஸ்நாக்ஸ்    4 முதல் 5 மணி

இரவு உணவு    7 முதல் 8 மணி

 * காலை உணவு: ஒரு நாளைத் தொடங்குவதற்கான புத்துணர்ச்சியை உடலுக்குத் தரும். மூளை முதல் ரத்தஓட்டம் வரை உடலில் உள்ள அனைத்துச் செயல்களின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கும்.

 * மிட்மார்னிங்: செயல்களைச் சுறுசுறுப்பாகச் செய்ய எனர்ஜி டிரிங்ஸ் உதவும்.

 * மதிய உணவு: உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தரும்.

 * மாலை ஸ்நாக்ஸ்: உடலும் மனமும் புத்துணர்வு பெற உதவும்.

 * இரவு உணவு: நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

என்னென்ன சாப்பிடலாம்?

  * தோசை, சட்னி, சாம்பார், பூரி-உருளைக்கிழங்கு-குருமா, பொங்கல், சப்பாத்தி-சப்ஜி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, புட்டு, கொண்டைக்கடலை, சத்துமாவுக் கஞ்சி மற்றும் பழங்கள் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை.

  * பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னதாகப் பருகலாம்.

  * மதிய உணவோடு முட்டை, இஞ்சி, பூண்டு, கீரை, பருப்பு வகைகள், பயறுகள், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசியில் சமைத்த உணவைச் சாப்பிடுவது நல்லது.

  * ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடலாம்.

 * இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா மற்றும் கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றைத் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்துக்கு முன்னர் சாப்பிடலாம்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

இன்பமான நாளைத் தரும் இதமான குளியல்...

உண்மையில், நாம் குளிப்பது அழுக்குப் போவதற்காக அல்ல... உடலில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதற்காகவே. உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட மிக முக்கியக் காரணம் உடல் சூடு. இரவில் நீண்ட நேரம் உறங்குவதால் ஏற்படும் உடல் கழிவுகளால் உடலில் சூடு அதிகரிக்கும். அவற்றைக் குறைக்கவே நாம் தூங்கி எழுந்ததும் குளிக்கிறோம். அப்படிக் குளிக்கும்போது சில தவறுகளை நம்மையும் அறியாமல் செய்கிறோம்.

குளிக்கும்போது நீரை உடலின் மீது ஊற்றுவதற்கென சில வழிமுறைகள் உள்ளன. முதலில் கால், பின் முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி எனத் தொடங்கி இறுதியாகத் தலையில் நீர் ஊற்ற வேண்டும். காரணம், உடலின் வெப்பம் கீழிலிருந்து மேல்நோக்கிச் சென்று கண், காது வழியாக வெளியேறும். நேரடியாக தண்ணீரைத் தலைக்கு ஊற்றினால் உடல் சூடு கீழ் நோக்கிச் சென்று தலைச்சுற்றலை ஏற்படுத்தும். ஷவரைத் தவிர்த்து, தண்ணீரை மொண்டு குளிப்பது நல்லது. அதிலும் குளிந்த நீர் அல்லது மிதமான சூடுள்ள நீரில் குளிக்கலாம். இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது குளிக்கும் நேரம். சூரிய உதயத்துக்கு முன்னர் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

உடற்பயிற்சிகள் நல்லது

தூங்கி எழுந்ததும், நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சிகள் உதவும். ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த உடற்பயிற்சிகளைப் பின்பற்றலாம். ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருந்தால், அவற்றுக்கான பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணர் அல்லது மருத்துவர் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். அதிகாலையில் தியானம், யோகா, பிராணாயாமம், நடைப்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் அமைதி, ஆரோக்கியத்தைத் தரும். உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் அதிகாலைதான். அமைதியான சூழலில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

உடற்பயிற்சியில் அலட்சியம் வேண்டாம்

எந்த வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும், அதை வல்லுநர்களின் ஆலோசனையில்லாமல் செய்யக் கூடாது.

  * உடற்பயிற்சி செய்யும்போது தவறான முறையில் செய்தால் உடல்வலி ஏற்படும். தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்படலாம்.

  *  தியானம், யோகா, பிராணாயாமம் செய்யும்போது விரிப்பில் அமர்ந்து செய்ய வேண்டும்.

  * நடைப்பயிற்சி, ஜாகிங், உடற்பயிற்சியைச் சரியான முறையில் செய்ய வேண்டும்.

 * உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிக்கக் கூடாது; உணவு உண்ணக் கூடாது.

  * உடற்பயிற்சி செய்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் `வார்ம்-அப்’ செய்ய வேண்டும். இதனால் உடல் தசைகள் உடற்பயிற்சி செய்ய ஒத்துழைக்கும்.

 * உடற்பயிற்சி முடிந்ததும் 15 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

நடைப்பயிற்சி

நடை, அதிகப் பலன்கள் தரும் மிக எளிய உடற்பயிற்சி. நடைப்பயிற்சி செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், நாம் செய்யும் பயிற்சியை முறையாகச் செய்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம். நடைப்பயிற்சியின்போது நிமிர்ந்து நேராக நடக்க வேண்டும். நடக்கும்போது கைகளைத் தளர்வாக விட வேண்டும். நடைப்பயிற்சியின்போது பேசுவது, சிரிப்பது, தண்ணீர் குடிப்பது என எந்தச் செயல்களையும் செய்யக் கூடாது. இது உடலின் சக்தியைக் குறைக்கக்கூடியது. நடைப்பயிற்சியின்போது நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும். சுவாசம் உடல் முழுக்கப் பரவும்போது தசைகள் தொடர்ந்து இயங்கும். நடைப்பயிற்சி செய்து முடித்ததும், 15 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் குடிக்கலாம்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

பலன்கள்:

இதயம், எலும்புகள் பலப்படும்.

மன அழுத்தம் குறையும்; கொழுப்பைக் கரைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய்கள் வராமல் தடுக்கும்.

முழு உடலுக்கான உடற்பயிற்சி என்பதால் கை, கால் தசைகள் வலுப்பெறும்.

உடல் சமநிலைத்தன்மை பெற உதவும்.

ரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் திறனை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

அமரலாமா?

நாம் ஒரு நாளைக்குச் சராசரியாக 12 மணி நேரத்துக்கும் மேல் அமர்ந்த நிலையில் இருக்கிறோம். தலையணைகளை முதுகின் பின்னே வைத்துக்கொண்டோ, கால்களை நன்றாக நீட்டியோ, சாய்ந்தோ உட்கார்ந்தபடி டி.வி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது, புத்தகம் படிப்பது, லேப்டாப் பயன்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்வோம். இப்படித் தவறான அமைப்பில் உட்கார்வது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கால்களை நன்றாக நீட்டியபடி, நீண்ட நேரம் சாய்ந்த நிலையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதால் கைகால், முதுகில் வலி ஏற்படும். மேலும் நாம் பயன்படுத்தும் பொருள்களை நீண்ட நேரம் கையில் பிடித்திருப்பதாலும், நன்றாகக் கால்களை நீட்டியபடி இருப்பதாலும் உடலில் சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் போகும். இதனால் கால்வலி, முதுகுவலி உண்டாகும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

சரியாக அமர்வது எப்படி?

நாற்காலியில், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். தோள்பட்டையை உட்புறமாகக் குறுக்கிய நிலையில் வைக்கக் கூடாது. இது, சுவாசம் உடல் முழுக்கச் சீராகப் பரவுவதைத் தடுக்கும். கால்களை நீட்டியபடி இல்லாமல் `எல்’ வடிவில் மடக்கி வைக்க வேண்டும். எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அதைத் தோள்பட்டைக்கு நேராக வைத்துப் பயன்படுத்த வேண்டும். லேப்டாப்-ஐ உயரமான மேஜையின் மீது வைத்து நாற்காலியில் அமர்ந்து பயன்படுத்தலாம்.
சரியாக அமர்ந்தால்...

மூட்டுவலி வருவதைத் தவிர்க்கலாம்.

முதுகுவலி, இடுப்புவலி வராது.

தசைநார்களில் ஏற்படும் அழுத்தம் இராது. இடுப்பு, முதுகுத்தண்டு இணையும் பகுதியில் ஏற்படும் வலி வராது.

உடலுக்குத் தேவையான சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளும்.

அழகான உடல் தோற்றம் பெற உதவும். உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.

தொப்பை உண்டாவதைத் தடுக்கும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

அலுவலகத்தில்...

பெரும்பாலும் அலுவலகப் பணியாளர்களே தொடர்ந்து மணிக்கணக்கில் அமர்ந்த நிலையில் வேலை செய்வார்கள். அலுவலக நாற்காலியில் அமரும்போது பின்வருவனவற்றை நினைவில் கொள்க...

நாற்காலி முழுவதும் நன்கு தாராளமாக அமர வேண்டும்.

நாற்காலியை மேஜையின் உயரத்துக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும்.

முதுகுத்தண்டு நாற்காலியை ஒட்டியபடி நேராக அமர வேண்டும்.

நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்தையும் கோணத்தையும் சரியாக வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

கைகளை `எல்’ வடிவில் வைத்து கீபோர்டு, மவுஸைப் பயன்படுத்த வேண்டும். இது முழங்கைவலி வராமல் தவிர்க்க உதவும்.

நின்றுகொண்டே நாற்காலியில் சாய்ந்தபடி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கூடாது.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

கீபோர்டைப் பயன்படுத்தும்போது கைகள் எப்போதும் கீபோர்டைவிட்டு இரண்டு இன்ச் இடைவெளியில் உயர்ந்தே இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரின் மானிட்டரும் உங்கள் கண்ணும் ஒரே நேர்கோட்டுப் பார்வையில் இருக்கும்படி அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

அரைமணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம். எழுந்து நடக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.

20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடியில் உள்ள பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்கலாம். இது கண் தசைகளின் இயக்கத்துக்கு உதவும்.

தலையை நான்கு திசைகளிலும் திருப்பலாம். டெஸ்க் பயிற்சிகள் செய்யலாம். இது, உடல் புத்துணர்வு பெற உதவும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

வாகனம் ஓட்டும்போது...

வாகனங்களுடன் நேரத்தைப் போக்குவது பலருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் லாங் டிரைவ், இரவில் பைக்கில் தனியாகச் செல்வது எனக் குறைந்தபட்சம் நம் வாகனத்துடன் ஒரு நாளைக்கு நான்குமணி நேரம் செலவிடுகிறோம். அப்படி நாம் வாகனம் ஓட்டும்போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க பைக்கில் சரியான அமைப்பில் அமர்ந்து ஓட்டுவதே சிறந்த தீர்வு.

பைக்கின் இருக்கையை நம் வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.

நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபடி பைக் ஓட்ட வேண்டும்.

கைகளை `எல்’ வடிவில் வைத்து ஓட்ட வேண்டும்.

கைகளைக் குறுக்கி, உடலை முன்புறமாகச் சாய்த்து ஓட்டும்படியான வாகனங்களைத் தவிர்ப்பது நல்லது.

நம்முடைய முழு உடல் எடையையும் இருக்கை தாங்கும்படி உட்கார வேண்டும்.

தலையும் தோள்பட்டையும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

சரியாகத்தான் நிற்கிறோமா?

நாம் நிற்கப் பழகிய காலம் முதல் நிற்க முடியாமல் போகும் வரை ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிக்கொள்கிறோம். அது ஆரம்பம் மற்றும் இறுதிக்குப் பொருத்தமானது. இடையில், நாம் அப்படி எந்தப் பொருளின் மீதாவது அழுத்தம் கொடுத்து நிற்பது மிக மோசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சாதாரணமாக, நாம் நிற்கும்போதே ஒருபுறமாகச் சாய்ந்தபடி, அருகிலுள்ள மேஜை, நாற்காலியின் மீது சாய்ந்தபடி, சுவரில் சாய்ந்து, உடலைக் குறுக்கிக்கொண்டு எனப் பலவிதங்களில் நிற்போம். இவ்வாறு நிற்பது தவறான முறை. நிற்பதற்கான மிகச் சரியான முறை என வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுவது ராணுவ வீரர்கள் நிற்கும் தோரணைதான். பொதுவாக, நாம் நிற்கும்போது கால்களைச் சற்று அகற்றி நிற்பது, உடலின் சமநிலைத் தன்மையைச் சரிசெய்ய உதவும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

நிற்கும்போது தோள்பட்டைகள் நன்றாக விரியும்படி நிற்க வேண்டும். இது உடலின் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்வதுடன், நாம் சுவாசிக்கும் காற்று முதுகுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதிக்குச் செல்ல உதவும். ஆனால், நாம் நிற்கும்போது பெரும்பாலும் தோள்பட்டையை உட்புறமாகக் குறுக்கியே நிற்போம். இப்படி நிற்பதால், இதயத்துக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசத்தடை ஏற்படும். இதயம் சுருங்கி விரியும்போது வெளியேற்றப்படும், உள்ளே அனுப்பப்படும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், உடலின் உள் உறுப்புகளுக்குத் தேவையான அளவு ரத்தமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும். இதனால், நாம் சிறிது நேரம் நின்றாலும், கைகால்கள் மரத்துப்போகும். தசைகளில் வலி ஏற்படும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

ஒரு பொருளைக் கையாளும்போது...

அதிக எடையுள்ள ஒரு பொருளை நாம் தூக்கும்போதும் தூக்கிய பிறகும் தசைப்பிடிப்புகள் ஏற்படலாம். இதற்குக் காரணம் பொருளின் எடை என்று அனைவரும் சொல்வோம். உண்மையில், பொருளின் எடைக்கும் தசைப்பிடிப்புக்கும் சம்பந்தம் இல்லை. எவ்வளவு எடையுள்ள பொருளாக இருந்தாலும், அதை நாம் கையாளும் முறையே நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்பின் அளவைக் கணக்கிடும். கனமான ஒரு பொருளைத் தரையிலிருந்து தூக்கும்போது முதலில் அந்தப் பொருளுக்கு நேராக அமர்ந்து பொருளை எந்த இடத்தில் பிடித்தால் தூக்க எளிதாக இருக்கும் என்பதைக் கணக்கிட வேண்டும். பின்னர், பொருளைச் சற்று உயர்த்தியதும், பொருளுடன் சேர்ந்து நாமும் எழுந்திருக்க வேண்டும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

கீழே இருக்கும் பொருளை எடுக்கும்போது...

பொதுவாக நாம் கீழே கிடக்கும் பொருளை எடுக்கும்போது, நின்றபடி அப்படியே குனிந்து எடுக்க முயல்வோம். இதனால், கைகாலில் தசைப்பிடிப்பு, முதுகுப்பிடிப்பு, முதுகுவலி, இடுப்புவலி ஏற்படும். உண்மையில் சரியான முறை என்பது குழந்தை செயல்படும்விதம்தான். ஒரு குழந்தையிடம் கீழே கிடக்கும் பொருளை எடுக்கச் சொன்னால், குழந்தை முதலில் கீழே உட்காரும். பிறகு பொருளை எடுக்கும்போது பொருளுடன் சேர்ந்து தானும் எழும். இதேபோல், கீழே விழுந்த பொருளை எடுக்க முற்படும்போது, நின்றபடியே அமர்ந்து அதன் பிறகு பொருளை எடுக்க வேண்டும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

வெளியிடங்களில் மொபைல் பயன்பாடு

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினரிடம் கையோடு கையாக செல்போன் புதைந்துள்ளது. நாம் நடக்கும்போதும் நிற்கும்போதும் அதிகமாக செல்போனைப் பயன்படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும்போது, இரண்டு கைகளால் மொபைலைப் பிடித்துக்கொண்டு, குனிந்தபடியே பெரும்பாலும் இருக்கிறோம். இதனால், கழுத்து அளவுக்கும் அதிகமான வளைவுத் தன்மையை அடையும். கழுத்து எலும்பு பாதிப்படையும். கவனச்சிதறலை உண்டாக்கும். விபத்தும் காயமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சிலருக்கு நிற்கும்போதோ, நடக்கும்போதோ மொபைல் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதுபோன்ற சூழலில் சாலையிலோ, நடைபாதையிலோ நிற்காமல் ஓரமாக நின்று மொபைலைப் பயன்படுத்த வேண்டும். அதேநேரத்தில், நம் முகத்திலிருந்து ஒன்றரை அடி தொலைவில் நேராக வைத்துப் பயன்படுத்த வேண்டும். தலையைக் குனிந்தபடி மொபைலைப் பயன்படுத்தக் கூடாது. மொபைல் ஸ்க்ரீனின் ஒளி அளவை அட்ஜஸ்ட் செய்து பளிச்செனத் தெரியும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

உணவு தயாரித்தல்

உணவு தயாரித்தல் என்றால், சமையல் செய்பவர்களுக்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. சமையல் அறையை அவ்வப்போது எட்டிப் பார்ப்பவர்களுக்கும் இது பொருந்தும். உணவு சமைக்கும்போது நாம் செய்யும் சிறுசிறு தவறான செயல்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் விபத்துகள் நேரலாம். இது சமையல் செய்வதற்கான பொருள்களை வைத்திருக்கும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது. `ஸ்டவ்’ வைத்திருக்கும் இடம், உயரம், அகலம் என அனைத்தையும் நம் வசதிக்கேற்றாற்போல மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். `ஸ்டவ்’வில் வைத்துச் சமைக்கும் பாத்திரத்தின் உயரம் நம்முடைய உயரத்தைவிட கூடவோ, குறையவோ இருந்தால், தளத்தை வசதிக்கேற்ப மாற்றியமைக்கலாம். எட்டி நின்றோ, குனிந்தோ சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

வீட்டைச் சுத்தம் செய்தல்

வீட்டைச் சுத்தம் செய்யும்போது தகுந்த உபகரணங்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குனிந்து, நிமிர்ந்து வேலைசெய்யும்போது தசைப்பிடிப்புகள், சுளுக்கு ஏற்படலாம். ஆகவே, சரியான முறையிலும் கை, கால் விரல்கள், நகங்கள், மூட்டுகள் எந்த இடத்திலும் இடிக்காதபடி வேலை செய்ய வேண்டும். குறிப்பாக, அதிக எடையுள்ள பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. ஒரு பொருளைத் தூக்கும்போது வயிற்றிலோ, நெஞ்சுப்பகுதியிலோ அழுத்தம் கொடுத்து நிலைநிறுத்துவோம். அது வயிற்றுவலி, சுவாசப் பிரச்னை, உடல்வலியை ஏற்படுத்தும். தூக்கும் பொருள் கனமாக இருந்தால், அதைக் கையின் பலத்தைப் பயன்படுத்தித் தூக்க வேண்டும். உடலின் மேல் வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது. இப்படிக் கொடுக்கும் அழுத்தம் சில நேரங்களில் சீரான ரத்த ஓட்டத்தைத் தடைபடச் செய்யும்; உடல் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்; மயக்கத்தை உண்டாக்கும். அதேபோல், பாத்திரம் கழுவும்போது வாஷ்பேசின் நம் இடுப்புக்குக் கீழும் மேலும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அதை நம்முடைய உயரத்துக்கேற்ப மாற்றி அமைக்கும் வழியில் ஈடுபடலாம். குனிந்து அல்லது கைகளைத் தூக்கிப் பாத்திரங்களைக் கழுவுவதால், உடல்வலியும் குறிப்பிட்ட சில இடங்களில் தசை வலியும் ஏற்படும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

டி.வி பார்த்தல்

ஒரு நாளில் நான்குமணி நேரத்துக்கும் அதிகமாக டி.வி பார்க்கச் செலவிடுகிறோம். அதிலும், வீட்டில் உள்ள பெண்களுக்கு டி.வி ஒன்றே பொழுதுபோக்கு. அவர்கள் பல மணி நேரம் டி.வி பார்ப்பார்கள். டி.வி பார்க்கும்போது நாம் எப்படி அமர்கிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பெரும்பாலும், டி.வி பார்க்கும்போது நாம் கைகால்களை நீட்டி மேஜை, நாற்காலி என அருகில் இருக்கும் பொருள்களின் மீது வைப்போம். இரண்டு தலையணைகளை முதுகுப்பகுதியில் இதமாக வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட பாதி படுத்தநிலையில் கழுத்தை மட்டும் தூக்கியபடி டி.வி பார்ப்போம். இதனால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, தசைப்பிடிப்பு ஏற்படும். கால்களை நீட்டி அமர விரும்பினால், சோபாவில் பக்கவாட்டில் அமரலாம். மாறாக, தரையில் கால்களை நீட்டி உட்காரலாம். முழங்காலின் அடியில் மெல்லிய தலையணையை வைக்க வேண்டும். இது முதுகுவலியைக் குறைக்கும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

துணி துவைப்பது

இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கைகளால் துணி துவைப்பவர்கள் ஓர் அடி நீள மனைப்பலகை அல்லது முக்காலியைப் பயன்படுத்தலாம். வாஷிங் மெஷினைப் பயன்படுத்துபவர்கள், மெஷினிலிருந்து துணியை எடுக்கும்போது ஒரு கையை மெஷின் மீது வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மறு கையால் துணியை எடுக்க வேண்டும். இது மெஷினில் உள்ள பாகங்களில் நாம் இடிக்காமல் இருக்க உதவும். இப்படி அழுத்தம் கொடுப்பதால் தோள்பட்டை, முழங்கை மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பைத் தடுக்க முடியும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

விளையாட்டு

பெரும்பாலும் மாலை வேளைக்கான பொழுதுபோக்கே விளையாட்டுதான். விளையாடுவதால் ஏற்படும் உடல்வலியைத் தடுக்க `வார்ம் அப்’ செய்ய வேண்டியது அவசியம். இண்டோர், அவுட்டோர் என எங்கே இருந்தாலும், உடலைத் தளர்ச்சியாகவும் சமநிலையுடனும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் உள்ளன. இவற்றைச் செய்வதால் விளையாடும்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, சுளுக்கு, உடல்வலி போன்றவற்றைச் சரிசெய்யலாம். உடலை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வதுபோல, மன அமைதிக்கு யோகா, தியானம் செய்யலாம்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

புத்தகம் வாசித்தல்

புத்தகம் வாசிப்பவர்களில் பலர் சூழல் மறந்து புத்தகத்துக்குள் மூழ்கிவிடுவார்கள். நின்றுகொண்டும், நடந்துகொண்டும், படுத்துக்கொண்டும், அமர்ந்துகொண்டும் ஏதாவது ஒரு வேலையோடு சேர்த்துப் புத்தகம் வாசித்தலும் இடம்பெறும். புத்தகம் வாசிக்க விரும்புபவர்கள், சில செயல்களை முறைப்படுத்துவதன் மூலம் வாசிப்புக்குப் பின்னர் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

புத்தகம் வாசிக்கும் முன்னர், எந்த நிலையில் இருந்து புத்தகம் வாசிக்கப் போகிறோம் என்பதை முடிவுசெய்ய வேண்டும். பெரும்பாலும் படுத்துக்கொண்டு புத்தகம் வாசிப்பவர்களே அதிகம். ஆனால், அமர்ந்த நிலையில் புத்தகம் வாசிப்பதே சிறந்தது.

உட்கார்ந்து புத்தகம் வாசிப்பவர்கள், நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர வேண்டும். முதுகு வலி, இடுப்புவலி உள்ளவர்கள் முதுகுக்குப் பின்புறம் தலையணை வைத்துக்கொள்ளலாம்.

அமர்ந்தநிலையில் புத்தகம் படிக்கும்போது, உடலைக் குறுக்கி, தலையைக் குனிந்து, கைகளைத் தலைக்குமேல் வைத்து அழுத்தக் கூடாது.

படுத்துக்கொண்டு புத்தகம் வாசிக்க நினைப்பவர்கள் தலை, முதுகு, இடுப்பு போன்றவற்றில் தசைப்பிடிப்பு, வலி ஏற்படாமல் இருக்கத் தலையணையைப் பயன்படுத்தலாம்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

படி ஏறலாமா?

ஒரு படி விட்டு ஒரு படி, இரண்டு படி விட்டு இரண்டு படி... என நாம் பல முறைகளில் படி ஏறி, இறங்குவோம். இப்படிப் படி ஏறி இறங்கும்போது தடுமாறி விழுந்தால், லேசான காயம் முதல் உயிரிழப்பு வரை ஏற்படலாம். குழந்தைகள், வயதானவர்கள் படி ஏறி இறங்கச் சிரமப்படுவார்கள். இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் படி ஏறி இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆகவே, படி ஏறி இறங்குவதில் நாம் கவனிக்க வேண்டியவை பற்றிப் பார்க்கலாம்.

படியின் இரண்டு பக்கமும் கைப்பிடிகள் உறுதியாக உள்ளனவா என்பதை அறிந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

படி ஏறும்போதும் இறங்கும்போதும் படியை `ஸ்கிப்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உடலை ஒருபக்கமாகச் சாய்த்து ஒவ்வொரு படியாக ஏறி இறங்கலாம்.

ஏறும்போதும் இறங்கும்போதும் கால் முட்டிகளில் கைகளால் அழுத்தம் கொடுக்காமல் கைப்பிடிகளில் அழுத்தம் கொடுக்கலாம்.

மிக வேகமாகப் படி ஏறி இறங்கக் கூடாது.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

சாப்பிடும் முறை

பெரும்பாலும் நாற்காலி, சோபாவில் அமரும்போது கால்களைத் தொங்கவிட்டபடி இருப்போம். சாப்பிடும்போது டைனிங் டேபிள், கட்டில், நாற்காலியைப் பயன்படுத்தும்போதும் கால்களைத் தொங்கவிட்டிருப்போம். இப்படிக் கால்களைத் தொங்கவிட்டபடி அதிக நேரம் இருப்பதால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீரற்றதாக இருக்கும். இதயத்துக்குக் குறைவான ரத்தம் செல்லும். இது, இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதேநேரத்தில், இதயத்திலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் குறையும். இதனால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

வேலை நேரங்களைத் தவிர்த்து, சாப்பிடும்போது சப்பணமிட்டு அமர்வது நல்லது. காலைத் தொங்கவிட்டபடிச் சாப்பிடுவதால், வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் செல்லாமல் நேரடியாகக் காலுக்குச் செல்லும். இதனால் செரிமானமாகும் நேரம் அதிகமாகும். மாறாக, சப்பணமிட்டுச் சாப்பிடும்போது இதயத்திலிருந்து வரும் ரத்தம் நேரடியாக வயிற்றுப்பகுதிக்குச் செல்லும். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

சரியாக எழுதுவோம்

படிப்பதைப்போலவே எழுதும்போதும் பல்வேறு கோணங்களில் உடலை வைக்கிறோம். நாற்காலியில் நேராக உட்கார்ந்து எழுதுவது, படுத்துக்கொண்டு எழுதுவது, நின்றபடி மேஜையில் வைத்து எழுதுவது, சுவரில் வைத்து எழுதுவது... எனப் பல்வேறு நிலைகளில் நாம் எழுதும் பணியைச் செய்கிறோம். எழுதுவதற்கான சரியான அமைப்பு அமர்ந்து எழுதுவதே.

நாற்காலியில் அமர்ந்து எழுதுபவர்கள், நாற்காலியில் தாராளமாக அமர்ந்து, மேஜையில் எழுதும் பொருளை வைத்து எழுதலாம்.

தரையில் அமர்ந்து எழுத விரும்புபவர்கள், சுவரில் சாய்ந்து சப்பணமிட்ட நிலையில் எழுது பலகையைப் பயன்படுத்தி எழுதலாம்.

படுத்துக்கொண்டும் பாதி படுத்தநிலையிலும் பாதி அமர்ந்த நிலையிலும் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றால் தலை, முதுகு, இடுப்புப் பகுதிகளில் தசைப்பிடிப்பு, வலி ஏற்படும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

இதமான தூக்கத்துக்கு...

நாள் முழுவதும் நாம் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறோமோ அதே அளவு தூங்கும் நேரமும் முக்கியம். அதிலும் சரியான முறையில் தூங்கினால் காலையில் எழுந்ததும் ஏற்படும் உடல்வலியைத் தவிர்க்கலாம். தூங்கும்போது தலையணையில் தலையை மட்டும் வைத்து மல்லாந்து அல்லது ஒருபுறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும். தலையுடன் சேர்த்துத் தோள்பட்டையை வைக்கக் கூடாது. கால்களின் முட்டிக்குக் கீழே சிறிய, மெல்லிய தலையணையைப் பயன்படுத்தலாம். இதனால் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புவலி குறையும். தசைப்பிடிப்புகளைத் தடுக்கும். எலும்பு உராய்வைச் சரிசெய்யும். செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

டிப்ஸ்...

எந்த வேலையையும் செய்வதற்கு முன்னர் வேலை செய்யும் முறை, எப்படிச் செய்யலாம், எது தவறு, எந்தச் செயலால் உடலுக்குப் பாதிப்பு வராது என செய்யப் போகும் வேலையைப் பற்றி முழுமையாகச் சிந்திக்க வேண்டும்.

ஒரு வேலையைச் செய்யும்போது வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

வீட்டில் உள்ள மின்சாதனப் பொருள்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. தகுந்த ஏற்பாடுகளுடனும் உபகரணங்களுடனும் மின்சாதனப் பொருள்களைக் கையாள வேண்டும்.

சிறு வேலையாக இருந்தாலும் அவற்றை அலட்சியத்துடன் செய்யக் கூடாது.

வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதே வீட்டில் பல விபத்துகள் நடப்பதைத் தடுக்கும்.

மன அழுத்தம், கோபம், மனச்சோர்வு இருக்கும்போது அலட்சியத்துடன் அந்த வேலையைச் செய்யாமல் இருப்பது நல்லது. மாறாக வேலை செய்வதையே தவிர்த்துவிடலாம்.

* உடல் வலி, தசைவலி, தசைப்பிடிப்பு, சுளுக்கு இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- ச.மோகனப்பிரியா

நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.