Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

``எனக்கு வயது 27. எப்போதும் உடல் சோர்வாகவும், சுறுசுறுப்பில்லாமலும், உடல் வலியோடும் இருக்கிறேன். உடல் எடை குறைந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே எனக்கு டயாபட்டீஸ் உள்ளது. சர்க்கரை அளவை அதிகரிக்காமல் எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது? உடல் எடையைக் கூட்ட என்ன செய்யலாம்?’’

- க.சுகன்யா, கடையநல்லூர்.

கன்சல்ட்டிங் ரூம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``சிறுவயதிலிருந்தே டயாபட்டீஸ் (சர்க்கரைக் குறைபாடு) உள்ளவர்கள், பொதுவாக உடல் எடை குறைந்தே காணப்படுவார்கள். நீண்டகாலமாக, அதாவது பத்து வருடங்களுக்கு மேலாகச் சர்க்கரைக் குறைபாடு இருந்தால், அவர்களுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். அப்படி நரம்புகள் அல்லது பிற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடல் சோர்வும் வலியும் ஏற்படும். உடல்வலி ஏற்படுவதற்கும், சுறுசுறுப்பில்லாமல் இருப்பதற்கும் சத்துக்குறைபாடும் ஒரு காரணம். உடல் வலிமை பெறுவதற்கு புரோட்டீன் அதிகமுள்ள உணவுப் பொருள்களான பயறு வகைகள், பீன்ஸ், முட்டை போன்றவற்றையும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும், பழங்களையும் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு குறைவதும் உடல்வலிக்குக் காரணமாகலாம். உடல் எடை குறைவாக இருப்பது ஆரோக்கியமின்மை ஆகாது. உயரத்துக்கேற்ற சரியான எடையே போதுமானது. சரியான மருந்துகள், முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவை நிச்சயம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையானவை. இவைதான் உடலைப் புத்துணர்வுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். நீங்கள் மாதந்தோறும் தவறாமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரைநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.’’

எனக்கு 36 வயது.  கீரை சாப்பிட்டால் இரண்டு நாள்களுக்கு மேல் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? இதை எப்படிச் சரி செய்வது?

- மணிமேகலை, சிவகிரி. 

கன்சல்ட்டிங் ரூம்

``கீரையில் வைட்டமின் சத்துகளும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.  சிறந்த மலமிளக் கியாகச் செயல் படும். குடல் அலர்ஜி, அல்சர், செரிமான மண்டலத்தில் கோளாறு உள்ளவர்களுக்குக் கீரையில் உள்ள நார்ச்சத்து, குடலைச் சென்றடையும் போது ஒவ்வாமையை உண்டாக்கும். அதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும். வயிற்றுப்போக்கு உண்டாகும்.  சில வகையான கீரைகள், பருவகாலத்தைப் பொறுத்து அவற்றின் செயல்பாடுகளில் மாற்றத்தை உண்டாக்கும். அதேபோல், வெறும் வயிற்றில் கீரை சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்தும் மாறுபடும். உணவு முறை, வாழ்வியல் மாற்றங்களை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படும். பொதுவாக, உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் கீரை வகைகளைக் கண்டறிந்து தவிர்ப்பது நல்லது.’’

``எனக்கு வயது 30. அடிக்கடி வாயில் புண் வருகிறது. இதைப் `புற்றுநோயின் அறிகுறி’ என்றும், `அல்சர் காரணமாக வந்திருக்கலாம்’ என்றும் சிலர் சொல்கிறார்கள். இதனால் மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். இதற்குத் தீர்வு சொல்லுங்களேன்...’’

- ராணி, மேடவாக்கம்.  

கன்சல்ட்டிங் ரூம்

``புற்றுநோய், அல்சரால் மட்டும் வாய்ப்புண் ஏற்படுவதில்லை.இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வைட்டமின் குறைபாட்டால் வாயில் புண்கள் ஏற்படலாம். அதிக மன அழுத்தம், ஒவ்வாமை தரக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றாலும் ஏற்படும். 

கன்சல்ட்டிங் ரூம்உங்களுடைய வயது குறைவாக இருப்பதால், புற்றுநோய் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை. அல்சர் காரணமாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. மேலும், அல்சர் தொந்தரவு இருக்கும் அனைவருக்கும் இது ஏற்படுவதில்லை. இதைத் தவிர்க்க நமது அன்றாட உணவில் போதுமான அளவு ரிபோஃப்ளேவின் (Riboflavin), மெக்கோபாலமின் (Mecobalamin) போன்ற வைட்டமின் சத்துகள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள், பச்சை காய்கறிகள், முட்டை, ஈரல், இறைச்சி, வெண்ணெய், நெய் போன்ற உணவுகளில் இந்த வைட்டமின்கள் நிறைந்துள்ளன.  அடிக்கடி டீ, காபி , குளிர்பானங்கள் அருந்துவது, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைச் சாப்பிடுவது, எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோசோடியம் குளூட்டமேட் சேர்த்த உணவுகளை உண்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வாய்ப்புண் வருகிறதென்றால், குடல் நோய் சிறப்பு மருத்துவரைச் சந்தித்துத் தகுந்த ஆலோசனை பெற்றுக்கொள்வதுதான் நல்லது.’’

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:  கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.