Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை

புதிய பகுதி! ஹெல்த்யோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

ஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்  போன்றவற்றால் இயங்கக்கூடியது இந்த உலகம். அதன்படியே மனித உடலும் இயங்குகிறது. ஆகவே, அவற்றைக்கொண்டே மனிதனுக்கு வரும் நோய்களைத் தீர்க்க முடியும். உதாரணமாக, பஞ்ச மகா பூதங்களில் ஒன்றான நிலத்தில் உள்ள மண்ணைக்கொண்டு மண் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. நீரை அடிப்படியாகக் கொண்டு, வாட்டர் தெரபி என்ற சிகிச்சை முறை இருக்கிறது. காற்றை அடிப்படையாகக்கொண்டு பிராணயாமம், நெருப்பை அடிப்படையாகக் கொண்டு சூரிய சிகிச்சை, நிற சிகிச்சை, நீராவிக் குளியல் சிகிச்சை போன்றவை அளிக்கப் படுகின்றன. ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்டு, உபவாசம் போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. இது உடல் கழிவுகளை அகற்ற உதவும். யோகாவும் ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்டதே.  இயற்கையின் மூலம் அளிக்கப்படும் இத்தகைய சிகிச்சைகளால் பக்க விளைவுகள் இல்லாமல் நோய்களைக்  குணப்படுத்த முடியும். 

நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை

இந்தத் தொடர் அதுபோன்ற இயற்கை வழி சிகிச்சைகளைப் பற்றியதுதான்.

பஞ்ச மகா பூதங்களில் முதலிடம் வகிப்பது நிலம். மண்ணுக்கு உயிர் உண்டு. கண்ணுக்குத் தெரியாத பல ஆயிரம் உயிர்களை மண் உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து தருகிறது. மண்ணைக்கொண்டு தீராத நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

இயற்கை மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்ரட்டீஸ், ஒருமுறை கீழே விழுந்து விட்டார்.  அவருடைய கை உடைந்து விட்டது. உடனே அவர் அவர் இருந்த இடத்தில் உள்ள மண்ணை ஈரமாக்கி, உடைந்த கையின்மீது தடவினார். கை அசையாமல் பார்த்துக் கொண்டார். ஆச்சர்யப்படத்தக்கவகையில்  குணம் பெற்றார். மண்ணின் மகத்துவத்தைக் கண்டறிந்தவர் அதையே ஒரு சிகிச்சை முறையாக்கினார். அந்தக் காலத்தில் கீழே விழுந்து அடிபட்டு வீக்கம் ஏற்பட்டாலோ,  எலும்பு உடைந்தாலோ அந்த இடத்தில் மண்ணை எடுத்துப் பூசுவார்கள். இன்றைக்கும் சில கிராமங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சைவயல்வெளியில் விவசாயிகள் செருப்பு அணிந்து நடப்பதில்லை. வெறும் காலுடன் நடப்பதால்தான் அவர்கள் பெரிதாக நோய் பாதிப்புக்கு உள்ளாவதில்லை என்கின்றன ஆய்வுகள். மண், பொதுவாகக் கழிவுகளை அகற்றும்; உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும். அதன் அடிப்படையில் நோய் பாதித்தவர்களை ஆறு, கடற்கரை மணலில் கழுத்தளவுக்குப் புதைத்து வைப்பார்கள். போலியோ நோய் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை பலனளித்திருக்கிறது.

 களிமண், செம்மண், கரிசல் மண், வண்டல் மண் எனப் பல வகையான மண் வகைகளை எடுத்துச் சிகிச்சை அளிக்கிறார்கள் மருத்துவர்கள். மண்ணில் இயற்கையிலேயே தாதுக்கள் நிறைந்துள்ளன. அவற்றைக் கைகள், கால்கள், முகம், கழுத்து, வயிறு என நோய்க்குத் தகுந்தவாறு பூசுவார்கள். உடலில் மிகப்பெரிய உறுப்பு, தோல். கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியைத் தோல் செய்கிறது. வியர்வை வழியாக வெளியேறும் கழிவுகள் தோலில் தங்குவதால் அரிப்பு, ஊறல், புண் ஆகியவை உண்டாகும். கொழுப்புப் படிவதால் உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் தண்ணீர் ஒழுங்காக வெளியேறாமல் உடலில் தேங்குவதாலும் பல நோய்கள் உண்டாகின்றன.  

நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய்களின் பட்டியல் மிகப் பெரிதாக நீள்கிறது.  அவற்றையெல்லாம் போக்க மண் குளியல் சிகிச்சை உதவும். மண் குளியல் சிகிச்சையை நேரடி சிகிச்சை, மறைமுகச் சிகிச்சை என இரண்டு வழிகளில் தருகிறோம். உடல் முழுவதும் மண் பூசுவது நேரடி சிகிச்சையாகும். துணியில் மண்ணை வைத்து `பேக்’ செய்து வயிறு, கண் போன்ற இடங்களில் வைப்பது மறைமுகச் சிகிச்சை. மண்ணில் உள்ள தாதுக்களை  சூரியனில் உள்ள நிறங்கள் உட்கிரகித்து நோய்களைக் குணப்படுத்துகின்றன.

நிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சைதோல், மனித உடலின் சிறந்த கழிவுநீக்கி. தோலில் மண் சிகிச்சை அளிப்பதால் நோய்கள் குணமாவது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன் சுரக்கச் செய்யும்; உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும்; காயங்களை ஆற்றும்;  உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும் நல்ல தீர்வு தரும்; மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, நம் உடலைப் பக்குவப்படுத்தும். ஈஸ்ட்ரோஜென் (estrogen), புரொஜெஸ்ட்ரோன் (progesterone) ஹார்மோன்கள் ஒழுங்காகச் சுரக்க உதவுவதால், மாதவிடாய்ப் பிரச்னைகள் சரியாகும். குழந்தையின்மை பிரச்னைக்கும் மண் குளியல் சிகிச்சை தீர்வு தரும். எக்ஸீமா, சோரியாசிஸ் போன்ற தீவிரத் தோல் நோய்களும் குணமாகும். முகப்பரு, கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம், தோல் சுருக்கம் நீங்க உதவும். மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றைக் குணப்படுத்துவதால் இதை ஓர் இயற்கை வலி நிவாரணி என்றும் சொல்லலாம்.

மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, பசியின்மை, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைத் தீர்க்கும் ஆற்றலும் மண் குளியல் சிகிச்சைக்கு உண்டு. காய்ச்சல், நிமோனியா போன்றவற்றையும் குணப்படுத்தும் இந்தச் சிகிச்சையை, சளி பாதிப்பு இருக்கும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், மற்ற நேரங்களில் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஒரு சிகிச்சையாக எடுத்துக் கொள்ளலாம். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

தொகுப்பு: எம். மரிய பெல்சின்