Published:Updated:

ஏனோ வானிலை மாறுதே!

ஏனோ வானிலை மாறுதே!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏனோ வானிலை மாறுதே!

ஹெல்த்

``இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்”,  “அடுத்த இரண்டு நாள்கள் அக்னி வெயில் கொளுத்தும்”. இது போன்ற வானிலை அறிவிப்புகளைப் பார்த்தால் இனி இன்னொன்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியம். ஆமாம், வானிலை முன்னறிவிப்புகள் நம் ஆரோக்கியத்துக்குமான முன்னறிவிப்புகள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

ஏனோ வானிலை மாறுதே!

குளிர்காலம்: அமெரிக்க ஆய்வு ஒன்றின்படி குளிர்காலத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியை விட 18% அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் சராசரியைவிட 10-12% வரை குறைகிறது. குளிர்காலம் நம் ரத்த நாளங்களை அழுத்துவதால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள். குளிர்காலத்தில் காற்று நம் சருமத்திலிருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இதனால், சருமப்பகுதி சிவப்பாக மாறும். பல சருமப் பிரச்னைகள் வரக்கூடும். அதனால், குளிர் காலத்தில் நல்ல மாய்ஸ்சரைசர் க்ரீம் தடவலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏனோ வானிலை மாறுதே!
ஏனோ வானிலை மாறுதே!

வெயில்காலம்: வெயில்காலத்தில் நாம் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இல்லையேல், டீஹைட் ரேஷன் எனப்படும் நீர்வறட்சிப் பிரச்னை அதிகமாகும். இதனால் யூரிக் ஆசிட் சுரந்து எலும்புகளைத் தாக்கும். ஆங்காங்கே வீங்கிப் போகும்; வலி அதிகரிக்கும். உடலின் வெப்பநிலையில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரக்கூடும்.

ஏனோ வானிலை மாறுதே!

மழைக்காலம்: மழைக்காலத்தில் வளிமண்டல அழுத்தம் குறையும். இதனால் மூட்டுகளில் இருக்கும் திசுக்கள் விரிவடையும். இது நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், ஆர்த்ரைட்டிஸ் நோய் உடையவர்களுக்கு மழைக் காலத்தில் மூட்டு வலி அதிகரிக்கும்.

ஏனோ வானிலை மாறுதே!

இடி: ஆய்வுகளின் படி மின்னல் வெட்டும்போது தலைவலிக்கான வாய்ப்பு 28% அதிகரிப்பதாகத் தெரிகிறது. எலெக்ட்ரோ மேக்னெடிக் மாற்றங்களால் இது நிகழலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

- கார்க்கிபவா