Published:Updated:

மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்

மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்

அருணாசலம் பொதுநல மருத்துவர்ஹெல்த்

`மரணம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது’ என்று காவல்துறை கூறியபிறகே மருத்துவர் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதன்மூலம் மருத்துவர்கள்  தேவையில்லாத, சட்டரீதியான பிரச்னைகளைச் சந்திக்கும் சூழல் தவிர்க்கப்படும். மேலும் யாரோ செய்த குற்றத்துக்கு மருத்துவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்படாமல் இருக்கும்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாசலம். இறப்புச் சான்றிதழ் உட்பட மருத்துவச் சான்றிதழ்கள் வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். 

மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்

``இன்றைய சூழலில் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் மருத்துவச் சான்றிதழ்கள் தேவையாக இருக்கின்றன. இந்தச் சான்றிதழ்களைத் தருவதற்கான சட்டரீதியான அங்கீகாரம், அலோபதி மருத்துவர்களுக்கு மட்டுமே உண்டு. பிறப்புச் சான்றிதழ் பதிவது மிக எளிமையாக்கப்பட்டு விட்டது. பிரசவம் நடக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்தே நேரடியாகப் பிறப்புப் பதிவு செய்யப்படும். ஆனால், இறப்புச் சான்றிதழ் பெறுவதில் நிறைய பிரச்னைகள் தொடர்கின்றன.

‘கடைசி ஆறு மாதங்களாகத் தன்னிடம் வைத்தியம் செய்துகொள்ளாத ஒருவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கக் கூடாது’ என்று மருத்துவர்களை இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கிறது. ஆனால் சிலர், சில வாரங்களோ, சில நாள்களோ சிகிச்சை எடுத்து, நோயாளி இறந்துவிடும் பட்சத்தில் இறப்புச் சான்றிதழ் கேட்டு வற்புறுத்துகிறார்கள். இறப்புச் சான்றிதழ்களுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. அதைச் சுட்டிக்காட்டி,  யார் என்றே தெரியாதவருக்குக்கூட மருத்துவச் சான்றிதழ் தரும்படி மக்கள் வலியுறுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

கிளினிக் அல்லது மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறாமல் ஒருவர் இறக்கும்போது அந்த மருத்துவர்தான் இறப்புச் சான்றிதழ்  தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஒருவர் இறந்துவிட்டால், அதற்கான காரணம் தெரியாமல் மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்பட்டால் டாக்டரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி சிறைக்கு அனுப்பிவிடுவார்கள்.  மருத்துவ அங்கீகாரத்தையும் ரத்து செய்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நிறைய நிகழ்வுகள் உண்டு. பொதுவாக இறப்புத் தொடர்பான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமானால் குடும்பத்தினர் முதலில் இறப்புப் பற்றிக் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். காவல்துறை ஆராய்ந்து விசாரித்து அந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என்று சொன்னபிறகே எல்லா மரணங்களுக்கும் மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் வராதவரை அப்பாவி மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது தொடரும்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்களைக் குடும்பநல மருத்துவராக அங்கீகரித்து அவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பெரிய பெரிய மருத்துவமனையில் வைத்தியம் செய்பவர்களும்கூட அவ்வப்போது அருகிலுள்ள மருத்துவரிடம் காட்ட வேண்டும். மருத்துவ ஆவணங்களைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கிறார் (Live Certificate) என்பதற்காக வழங்கப்படும் சான்றிதழ்கள் தருவது எளிதானது. இப்போது கைபேசியிலேயே போட்டோ எடுக்க முடியுமென்பதால் வீட்டில் இருப்பதுபோல் படுக்கையில் இருக்கும் நோயாளிகளையும் போட்டோ அல்லது வீடியோ எடுத்து இணைத்து மருத்துவச் சான்றிதழ்கள் கொடுக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அந்தந்த மருத்துவ வல்லுநர்களால் மட்டுமே தரப்படும் என்பதால் அவற்றில் குழப்பம் வர வாய்ப்பில்லை. ஆதார் கார்டு, குடும்ப அட்டை  மற்றும் நோயாளிகளின் புகைப்படத்துடன் இருப்பதால் போலிச் சான்றிதழ்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் இது தொடர்பான வல்லுநர்கள் மருத்துவ உலகத் தரமிக்க பரிந்துரைகளால் வழி நடத்தப்படுவதால் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

கல்வி, வேலைவாய்ப்பு மருத்துவ ஃபிட்னஸ் சான்றிதழைக் (fitness certificate) கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் நிர்ணயிக்கும் பரிசோதனைகளின் மூலமே மருத்துவர்கள் வழங்குகின்றனர். இல்லாதபட்சத்தில் மருத்துவர்கள் தாமாக நிர்ணயிக்கும் பரிசோதனை மூலம் வழங்குகின்றனர். இதைத்தவிர குடும்பநல மருத்துவர் என்ற முறையில் வெறும் மருத்துவச் சான்றிதழ் வழங்கும்போது மருத்துவர்கள் தன்னுடைய நோயாளி அல்லாதவர்க்குச் சான்றிதழ்களை விற்கக் கூடாது. அதேவேளையில் நோயாளிகளும் தன்னுடைய மருத்துவர் அல்லாதவர்களிடம் உறவினர், நண்பர்களுக்கு இந்தச் சான்றிதழ்களை வாங்கிக்கொடுக்கக் கூடாது. நோயாளிகள் அவரவர் மருத்துவரிடமே வாங்க முற்படுவது நல்லது.

மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்மருத்துவர்களுக்குத் தெரிந்தே சான்றிதழ்கள் தரப்படும் என்பதால் உண்மையான நோயாளிகளுக்குச் சான்றிதழ் தருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நோயால் பாதிக்கப்படாத உறவினர் இறந்துபோனாலோ, திருமணம் மற்றும் விழாக்களில் பங்கேற்கச் செல்வதற்காகவோ எடுக்கும் விடுப்புகளுக்கு பள்ளிக் குழந்தைகள் முதல் அரசு அதிகாரிகள் வரை மருத்துவச் சான்றிதழ் கேட்டுவந்து நிற்பார்கள். இவற்றுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாது என்பதால் குடும்பநல மருத்துவர்கள் நோய் விடுப்புச் சான்றிதழ் கொடுப்பது உயர் கல்வி பெற்ற மருத்துவர்களின் மனசாட்சியை வருத்தும் நிமிடங்களாகும்.

சான்றிதழ் கொடுக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் மனம் அல்லாடும் நொடிகள் அவை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கும்கூட ஒருநாள் விடுப்புக்கே நோய் விடுப்புச் சான்றிதழ் கேட்பதும் அதற்கு வேறு வழியில்லாமல் மருத்துவரைச் சான்றிதழ் வழங்க வைப்பதும் நடக்கிறது. பெற்றோரும் கல்வியாளர்களும் கட்டணம் கொடுத்துப் போலிச் சான்றிதழ் பெறுவது எப்படி எனச் சொல்லித்தரும் அவலமான நிலையல்லவா இது?

மருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்

நோய் விடுப்பு மருத்துவச் சான்றிதழ் வழங்க மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியிருக்கும் பரிந்துரைகள்:

* பதினைந்து நாள்களுக்கு மேல் நோய் விடுப்பு பரிந்துரைக்கக் கூடாது.

* பதினைந்து நாள்களுக்குப் பிறகு, நோயாளியை மறுபடியும் பார்த்த பிறகே நோய் விடுப்பு நீட்டிப்புச் செய்யலாம்.

* மீண்டும் கொடுக்கப்படும் நோய் விடுப்புச் சான்றிதழுக்கு நோயாளியின் புகைப்படம், அடையாள அட்டையைச் சரிபார்த்து வழங்க வேண்டும். நோயாளியின் உறவினர்களிடம் வழங்கக் கூடாது.

* மருத்துவர்கள் தம் துறை சார்ந்த நோய்களுக்கு மட்டும் மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கலாம்.

* உடல்திறன் குறைவு பற்றி மருத்துவ அட்டவணைக்குள் எழுத முடியாத பட்சத்தில் உடல் திறன் குறையைத் தெளிவாக எழுதலாம்.

* மிக முக்கியமாக இது ஒரு சட்ட ஆவணம் (Legal document) ஆகும்.

* நோய் விடுப்புச் சான்றிதழ் தலைமை ஆசிரியர், முதல்வர் அல்லது வேலை கொடுப்பவர் குறிப்பிட்ட ஒருவருக்கு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வுக்குத் தேதி குறிப்பிட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டாம். வரப்போகும் நாள்களில் வரும் நோய் எனக் குறிப்பிட்டுச் சான்றிதழ் வழங்கக் கூடாது.

* விடுப்பு எடுத்த நாள், தேதியைக் குறிப்பிட்டு மருத்துவச் சான்றிதழ் வழங்கக் கூடாது.

* மற்றொரு மருத்துவர் வழங்கிய ஓய்வு காலத்துக்கு வேலை செய்ய அனுமதி வழங்கிச் சான்றிதழ் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

* நோயாளியின் உடனிருந்து வைத்தியம் செய்வோர்க்கு மனிதாபிமான அடிப்படையில் இரண்டு நாள்களுக்கு அனுமதி தரலாம் - உறுதி செய்யப்பட்ட பின்.

* நோயாளி கையெழுத்திட்ட பிறகே நோயாளியின் முன் சான்றிதழ் வழங்கலாம். இல்லை என்றால் நாட்டிலோ உலகிலோ இல்லாதவர்க்குச் சான்றிதழ் கொடுக்க நேரும்.

* மருத்துவர்கள் முக்கியமானவர்கள் (gazattled officer) என்பதால் நோயாளியின் இறப்பு, நோயாளியின் வருகைப்பதிவேடு போன்றவற்றுக்குச் சான்றிதழ் வழங்குவதால் பொறுப்பாக இருப்பது அவசியம்.