Published:Updated:

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!
பிரீமியம் ஸ்டோரி
News
அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

நிவேதிதா மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

ருவில் உதித்த உயிரின் முதல் அசைவு, எந்தத் தாய்க்கும் மறக்க முடியாத ஆனந்த அனுபவம். குழந்தைக்கும் தாய்க்குமான உறவை வளர்ப்பதும் அந்த அசைவுகள்தான். குழந்தை தன் இருப்பையும் துடிப்பையும் தாய்க்கு உணர்த்துவதும் அந்த அசைவுகளின் மூலம்தான் என்பதால் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அம்மாக்களுக்கு அவசியமாகிறது. குழந்தையின் அசைவு எப்போதிலிருந்து ஆரம்பிக்கிறது? அசைவற்ற நிலை ஆபத்தின் அறிகுறியா? அறிந்துகொள்வோம்.

எப்போது, எப்படி?     

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

12 வாரங்களில்

குழந்தை அசையத் தொடங்கும். ஆனாலும், குழந்தையின் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும் என்பதால் அதன் அசைவைத் தாயால் துல்லியமாக உணர முடியாது.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

16 வாரங்களில்

பட்டாம்பூச்சி பறப்பது போன்றதோர் உணர்வு இது. மிக மெல்லிய உணர்வுதான் என்பதால் எல்லா அம்மாக்களாலும் உணர முடிவதில்லை.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

20 வாரங்களில்

குழந்தையின் அசைவுதான் என்று புரிந்துகொள்கிற அளவுக்கு இருக்கும். நெளிதல் போன்ற உணர்வு இது.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

24 வாரங்களில்

அடிக்கடி அசைவை உணர்வீர்கள். நீங்கள் தூங்கும்போதும் இந்த அசைவுகள் இருக்கும்.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

28 வாரங்களில்

குழந்தையின் உதையை பலமாகவே உணர்வீர்கள். திடீரென நிகழும் அந்த அசைவு உங்களைத் திடுக்கிடச் செய்யும். மாலை வேளைகளில் அசைவுகள் அதிகமாக இருக்கும். இந்த அசைவுகளை வைத்தே குழந்தை எப்போதெல்லாம் துடிப்பாக இருக்கிறது என்று தாயால் கணித்துவிட முடியும்.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

36 வாரங்களில்

குழந்தையின் வளர்ச்சி அதிகமான காரணத்தினால் அசைவில் மந்தநிலை ஏற்படலாம். குழந்தையின் தலை இருக்கும் இடத்தைக்கூட அம்மாவால் தொட்டுணர முடியும். குழந்தை தன் கைகளாலும் கால்களாலும் அதிகம் உதைப்பதை உணர்வார்கள். இந்தக் கட்டத்தில் குழந்தையின் அசைவு மிகவும் குறைந்துபோன மாதிரியோ, நின்றுவிட்டது போலவோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

எப்போது தொடங்கும்?

வயிற்றுக்குள் மெல்லியதோர் உணர்வை ஏழாவது வாரத்திலேயே உணர்ந்திருப்பீர்கள். ஆனால், குழந்தையின் முதல் உதையை உணர 16 வாரங்களைக் கடந்தாக வேண்டும். 22 வாரங்களில் அதை நன்றாகவே உணர முடியும்.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

இந்த அசைவானது ஒரே நாளில் பலமுறை நிகழலாம். அடுத்தநாள் அசைவே இல்லாமலும் இருக்கலாம். அதற்காகப் பயப்பட வேண்டாம். பெரிதாக உணர முடியாவிட்டாலும் குழந்தை உள்ளுக்குள் அசைந்துகொண்டுதான் இருக்கும். 6 மாதங்களைக் கடந்த நிலையில் அந்த அசைவு களை அழுத்தமாக உணரத் தொடங்குவார்கள் அம்மாக்கள். உங்கள் குழந்தையின் அசைவு அனுபவத்தை வேறு யாருடைய அனுபவத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது வேறுபடலாம். உங்கள் குழந்தையின் அசைவுகளில் திடீரென மந்தநிலை தெரிந்தால் மட்டும் மருத்துவரை அணுகினால் போதும். வழக்கம்போல இருக்கும்வரை பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!



கர்ப்பத்தின் 40-வது வாரம் வரை நஞ்சுக்கொடியின் செயல்பாடு இருக்கும். பிறகு அது குறைந்தோ, நின்றோ போகலாம். ஹார்மோன் கோளாறு உள்ள பெண்கள், `ஐவிஎஃப்’ முறையில் கருத்தரித்தவர்கள் ஹை ரிஸ்க் எனப்படுகிற பிரச்னைக்குரிய கர்ப்பம் சுமப்பவர்கள் ஆகியோருக்கு இந்த நஞ்சுக்கொடியின் செயல்பாடு, 40 வாரங்களுக்கு முன்பே நிற்கவோ, குறையவோ கூடும். அதனால் குழந்தையின் அசைவுகளில் மந்தத்தன்மை ஏற்படலாம்.

அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

அசைவை அறிய உதவும் சிம்பிள் டெஸ்ட்!

உணவு உண்ட ஒருமணி நேரம் கழித்து ஒருக்களித்துப் படுத்துக்கொள்ள வேண்டும். கையில் ஒரு நூலை வைத்துக்கொண்டு, சுமார் ஒருமணி நேரத்தில் அந்தப் பெண் உணர்கிற அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்து, ஒவ்வொன்றுக்கும் அந்த நூலில் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டே வர வேண்டும். தினமும்  மூன்று வேளைகள், ஒருமணி நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு வேளையும், ஒரு மணி நேரத்தில் 15 அசைவுகளையாவது அந்தப் பெண் உணர வேண்டும். சில நேரங்களில் குழந்தை உள்ளே தூங்கிக்கொண்டிருந்தால் அசைவு இருக்காது. அப்போது அந்தப் பெண் சிறிது நேரம் கழித்து இதைச் செய்யலாம். அல்லது குழந்தையைத் தட்டிக் கொடுத்து, விழிக்கச் செய்து பிறகு அசைவுகளைக் கண்காணிக்கலாம்.