Published:Updated:

ஒவ்வொரு பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

மருத்துவப் பரிசோதனைகள்
News
மருத்துவப் பரிசோதனைகள்

அனிதா சூர்யநாராயணன் நோய்க்குறியியல் மருத்துவர்

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

1. உடல் பருமன் குறியீட்டெண் பரிசோதனை (BMI - Body Mass Index)

ஒருவர் தன் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறியும் பரிசோதனை. உங்களின் உயரத்தை மீட்டரிலும், உடல் எடையை கிலோகிராமிலும் மாற்றிக்கொள்ளுங்கள். 
எடையை உயரத்தின் ஸ்கொயரால் அதாவது எடை÷ (உயரம் x உயரம்) வகுத்தால் கிடைப்பது உங்கள் பிஎம்ஐ.    

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிஎம்ஐ கணக்கு...

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்



குறைவான எடை: 18.5க்கு கீழ்
சரியான எடை: 18.5 - 24.9
அதிக எடை: 25-29.9
உடல் பருமன்: 30-க்கு மேல்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

2. ரத்தச்சோகை பரிசோதனை

ஒருவரின் உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர் ரத்தச்சோகையால் பாதிக்கப்படுவார். இதனால் ரத்தத்தில் குறைவான அளவே ஆக்சிஜன் உறிஞ்சப்பட்டு, உடல் பலவீனம் மற்றும் மயக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதால்.  இந்தப் பரிசோதனை அவசியம்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

3. வைட்டமின் குறைபாடு பரிசோதனை

இந்தியப் பெண்களிடம் வைட்டமின் D மற்றும் B12 குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. கருவுற நினைக்கும் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இது குழந்தைப்பேற்றில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். கால்சியம் உடல்சத்தைக் கிரகித்துக்கொள்ள வைட்டமின் D அவசியமானது.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

4. ரத்த அழுத்தப் பரிசோதனை

18 வயது ஆகிவிட்டால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்க வேண்டும். 120/80mmHg - இந்த அளவு சரியான ரத்த அழுத்தத்தைக் குறிக்கும். தொடர்ச்சியாக உயர் ரத்தஅழுத்தம் இருந்தால், ஒரு ஸ்ட்ரெஸ் டெஸ்ட் செய்யவும்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

5. சர்க்கரைப் பரிசோதனை

45 வயதைத் தொட்டுவிட்டாலே, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் சர்க்கரை நோய் மரபு இருப்பவர்கள், 30-களிலேயே பரிசோதனை செய்துகொள்ளவும்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

6. கொழுப்புப் பரிசோதனை

இதயநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கு, 25 வயதிலிருந்தே பெண்கள் கொழுப்பு அளவைச் சரிபார்க்கும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முடிவுகள் இயல்பாக இருக்கும்பட்சத்தில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

7. கர்ப்பப்பை வாய் பரிசோதனை மற்றும் இடுப்பு எலும்புப்பகுதி பரிசோதனை

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்



21 மற்றும் அதற்குக் குறைவான வயதில் உள்ள, உடலுறவில் அதிகம் ஈடுபடும் பெண்கள், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பப்பை
வாய் புற்றுநோய் என்பது பெண்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்க் காரணிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

8. மார்பகப் பரிசோதனைகள் மற்றும் மேமோகிராம்

20 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள பெண்களுக்கு, மார்பகங்களில் கட்டிகள் மற்றும் இயல்புக்கு மாறாக ஏதாவது உள்ளதா என்பதை ஒரு மருத்துவர் தொட்டுணர்ந்து பரிசோதிப்பார். 40 வயதை அடைந்தவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராம் எனும் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

9. எலும்பு அடர்த்திக்கான பரிசோதனை

65 வயதில் எலும்பு அடர்த்திக்கான பரிசோதனையுடன் எலும்புத்துளை நோய்ப் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். கால்சியம் குறைபாடு மற்றும் மரபுக் காரணிகள் உள்ளவர்கள் முன்னதாகவே செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு  பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

10. பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனை 50 வயதில் பெருங்குடல்

புற்றுநோய்க்கான பரிசோதனையைத் தொடங்கலாம். ரத்தச்சோகை, நீண்டநாள் வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு  இப்பரிசோதனை அவசியம். மேலும், 10 வருடங்களுக்கு ஒருமுறை கொலொனோஸ்கோபி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.