Published:Updated:

இன்சுலின் A to Z

இன்சுலின் A to Z
பிரீமியம் ஸ்டோரி
News
இன்சுலின் A to Z

இன்சுலின் A to Z

இன்சுலின் A to Z
இன்சுலின் A to Z
இன்சுலின் A to Z

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்சுலின் A to Z
இன்சுலின் A to Z

ஜனவரி 11, 1922 இல், டொரொன்டோ பொது மருத்துவமனையில் 14 வயதான `லியோனார்ட் தாம்சன்' என்ற சிறுவனுக்குத் தான் உலகில் முதல்முறையாக  இன்சுலின்  ஊசி கொடுக்கப்படடது.

எண்ணங்களும் உண்மைகளும்

இன்சுலின் போடாமலே தடுத்துவிட வேண்டும். ஒருவேளை போடத் தொடங்கிவிட்டால், அதற்குப் பிறகு வாழ்க்கை முழுக்கச் செலுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்?

 இது பெரும்பாலான மக்களிடையே காணப்படும் மிகப்பெரிய தவறான எண்ணம்.  இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளுக்குத் தான் இன்சுலின் போடுவதில் அதிகப் பிரச்னை. இந்த வகை சர்க்கரைநோய், இன்சுலின் சுரப்புக் குறைவாலும், இன்சுலின் செயல்பட முடியாத காரணத்தாலும் ஏற்படுகிறது.

இன்சுலின் செயல்பட முடியாமல் இருப்பதற்கும், பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கவைக்கவும் நாம் மருந்துகள் கொடுக்கலாம். சில மருந்துகளால், உணவின் மூலம் பெறப்படும் குளுக்கோஸை ரத்த ஓட்டத்தில் சேராமல் தடுக்க முடியும். அதேபோல், இன்சுலின் செயல்படாத தன்மையையும் குறைக்க முடியும். இன்சுலின் சுரப்பு மிகக் குறைவாக இருந்தாலோ, சுரப்பே இல்லாமல் இருந்தாலோ என்ன செய்வது? அதற்கு இன்சுலின் கொடுத்தால்தானே முழுமையான சிகிச்சையாக அமையும்?

இரண்டாவது வகை சர்க்கரை பிரச்னைக்காகக் கொடுக்கப்படும் மருந்துகள் சில, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால், பீட்டா செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும். ஒரு கட்டத்துக்குப் பிறகு, பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தநிலையில், இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதற்கான மருந்துகளைக் கொடுத்தாலும் இன்சுலின் சுரக்காது. அப்போது, இன்சுலின்  மருந்தை அவசியம்  கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. இப்படி, மருந்துகளால் இன்சுலினைச் சுரக்கத் தூண்ட முடியாத நிலையில், கண்டிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்சுலின் பயன்படுத்துவதால் ஊசி போடுவதுபோல வலி ஏற்படும்?


இன்சுலினை ஊசியாகப் போடவேண்டிய சூழ்நிலை இருக்கிறபோதும், அது மிகவும் நுட்பமான ஊசியாகவே இருப்பதால் வலியே தெரிவதில்லை. பேனா, பம்ப்களில் பயன்படுத்தும் ஊசிகளை, நோயாளிகளே எந்த வித வலியும் உணராமல் போட்டுக்கொள்ளலாம் / பொருத்திக் கொள்ளலாம்.

இன்சுலின் பயன்படுத்துவதால் செலவு அதிகமாகும்?

இன்று, அதிகமான ரத்த குளுக்கோஸின் அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் பல்வேறு மருந்துகளுக்கு ஆகும் செலவைவிட, இன்சுலின் மருந்துக்கு ஆகும் செலவு மிகவும் குறைவுதான். அதுவும் அரசாங்க மருத்துவமனைகளில்கூட கிடைக்கிறது.

இன்சுலின் பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படும்?

இன்சுலின் மருந்தினால் ஒவ்வாமை ஏற்படுவது மிகவும் அபூர்வம். இப்போது தயாரிக்கப்படும் இன்சுலின் மருந்துகள், புதிய தொழில்நுட்பத்துடன் (Recombinant technology) மனித செல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப் படுகின்றன. அதனால் பெரும்பாலும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. இது குறித்துச் சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகலாம். அவர் உங்களைப் பரிசோதித்து, உங்களுக்கு இன்சுலினால் ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது பிற காரணங்களால் ஏற்பட்டதா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்.

இன்சுலினால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து மயக்கம், சோர்வு ஏற்படும்?


இப்படிப் பயப்படத் தேவையில்லை. சர்க்கரை நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்ளும் நிலையில், சரியாகச் சாப்பிடாமல் இருந்தால்கூட ரத்த குளுக்கோஸின் அளவு குறைந்து பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் மருந்தின் அளவை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து, கணக்கிட்டு செலுத்திக் கொண்டால் பயப்படத் தேவையில்லை. அனலாக் இன்சுலின் மருந்து என்றால், சாப்பிடுவதற்கு 10 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னர் போட்டுக்கொள்ள வேண்டும். அனலாக் அல்லாத பிறவகை இன்சுலின் மருந்து என்றால், சாப்பிடுவற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால், ரத்த குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

இன்சுலினால் உடல் கெட்டுவிடும்?

ஊசியை உடலில் ஒரே இடத்தில் போட்டுக்கொண்டிருப்பார்கள். அதுவும் ஏற்கெனவே போட்ட அதே புள்ளியிலேயே போடுவார்கள். இது தவறு. உடலில் இன்சுலினைப் பல இடங்களில் போட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரே இடத்தில் போடாமல், வெவ்வேறு இடங்களில் இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு,  சென்ற  மாதம் முழுவதும் வலது தொடையில் ஊசி போட்டுக்கொண்டிருந் தால், இந்த மாதம் இடது தொடையில் போட்டுக்கொள்ளலாம். பிறகு, வயிற்றுப்பகுதியில் போட்டுக்கொள்ளலாம். இப்படி இடங்களை மாற்றிக்கொண்டிருந்தால் வீக்கம் ஏற்படாது. உடல்நலமும் பாதிக்கப்படாது.

இன்சுலின் A to Z

இன்சுலின் தேவையைத் தீர்மானிக்கும் விஷயங்கள்

சர்க்கரை நோயின் வகை,அதன் நிலை,உடல் பருமன்,(BMI- பிஎம்ஐ)இன்சுலின் செயல்படாத தன்மை,- இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance), உட்கொள்ளும் உணவு, உடற்பயிற்சி,ரத்த குளுக்கோஸின் அளவு,உட்கொள்ளும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள்/பிற மருந்துகள்,உடலிலுள்ள பிற நோய்கள்,என இவற்றை பொறுத்து,தேவைப்படும் இன்சுலின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.வேறுபடும்.