Published:Updated:

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

சரவணன் குழந்தைகளுக்கான சிறப்பு ஹோமியோபதி மருத்துவர்தகவல்

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

ருத்துவமே ஒரு காலத்தில் அற்புதம்தான். எதனால் நோய் வந்தது, அந்த நோய் எந்த உறுப்பைப் பாதிக்கும், எத்தனை நாள்களில் மரணம் நிகழும்? இப்படி எதுவுமே தெரியாமல் குத்துமதிப்பாக வைத்தியம் பார்த்த நாள்களில் எந்த நோயாளி பிழைத்தாலும் அது அதிசயம்தான். ஆனால், நோய்கள் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்கும் இன்றைய நிலையில் அதன் விளைவுகளை மருத்துவத்தால் உறுதியாகச் சொல்ல முடியும். இது இப்படித்தான் என்பதில் 99.99 சதவிகிதம் தவறு இருக்காது. மீதம் இருக்கும் 0.01 சதவிகிதத்துக்குப் பெயர்தான் ‘மெடிக்கல் மிராக்கிள்’. வாய்ப்பே இல்லை என நினைத்த விஷயம் அதிசயமாக நடக்கும். மருத்துவத்தால் விளக்கம் கொடுக்கவே முடியாத அதுபோன்ற அதிசயங்கள், ஒரு தனிநபரின் மன உறுதி, அவர் சொந்தங்களின் நம்பிக்கை, இயற்கையின் கருணை எனப் பல காரணங்களால் ஏற்படும். பயனடைந்தவரின் நம்பிக்கையைப் பொறுத்து அது கடவுளால்தான் என நம்பப்படுவதும் உண்டு. அப்படிச் சில அதிசயங்களையே நாம் பார்க்க இருக்கிறோம்.

1964-ல் crippling disease என்கிற கொடுமையான, உடலை உருக்கும் நோயினால் நார்மன் கஸின் என்பவர்  பாதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதம்தான் வாழ்க்கை என டாக்டர்கள் அவரிடம் சொல்லியிருந்தனர். கோபம், தன்னிரக்கம், மன அழுத்தம் எனப் பல்வேறு மனநிலைகளில் துடித்தவர், அதனால்தான் தன் நோய் மேலும் அதிகமாகிறது என்பதையும்  உணர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!கோபம் தன் பிரச்னையை அதிகமாக்கினால், அப்போது அதற்கு எதிராக ஏதாவது செய்தால் பிரச்னை குறையுமா என அவருக்கு ஓர் எண்ணம். அதனால் அதற்கு நேர் எதிரான விஷயமாக எல்லாவற்றுக்கும் சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்.  சினிமா, ஜோக்ஸ், நண்பர்கள் எனச் சிரிப்பதற்கு உண்டான அனைத்து வழிகளையும் தேடித் தேடிச் சிரித்தார். 20 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தபிறகு அவர் எழுதிய `Anatomy of an illness as perceived by the patient’  என்கிற புத்தகத்தில், “என்னுடைய அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டிருக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்தைத் தன் குடும்பத்தார்க்கும் சிரிப்புக்கும் அர்ப்பணித்தார். இவருடைய  வாழ்க்கை இன்றைக்கும் மெடிக்கல் தொடர்பான கான்ஃபரன்ஸ்களில் டிஸ்கஸ் செய்யப்படுகிறது.மனமே எல்லாவற்றுக்கும் காரணம். அது செம்மையாக இருந்தால் எந்த நோயில் இருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது இவருடைய கருத்து.

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

2005-ல் பீகாரின் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ‘கடவுளுக்கு’ ஆபரேஷன் பண்ணச் சொன்னார்கள் மருத்துவர்கள். ஆமாம் 8 கை, கால்களுடன் பிறந்த ‘துர்கா தேவி’ அவர். லக்ஷ்மி என்று பெயரிட்டுக் கிட்டத்தட்ட துர்கையின் அவதாரமாகவே வழிபட ஆரம்பித்தது அந்த ஊர். ஆனால், குழந்தை வளர வளர பிரச்னையின் விபரீதம் புரிய ஆரம்பிக்க, மருத்துவர்களின் சொல்லைக் கேட்டு ஆபரேஷனுக்குப் பெற்றோர் ஒப்புக்கொண்டார்கள் . 30 டாக்டர்கள் சேர்ந்து 27 மணி நேரம் நடந்த ஆபரேஷனில் கிட்டத்தட்ட பாதி உடம்பையும் உறுப்புகளையும் வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அத்தனையையும் தாங்கி அதிசயமாக உயிர் பிழைத்தாள் லக்ஷ்மி. Lakshmi Tatma-வின் பெயரில் உள்ள  யூடியூப், National Geography டாகுமென்டரி ஆகியவை இன்றும் இந்திய மருத்துவர்களின் சாதனையை உலகுக்குச் சொல்லி வருகின்றன.

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

தையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட கதை நாக்பூரில் வசித்த சஞ்சு பகத்தினுடையது. ஓர் ஆண் தன் 36 வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததெல்லாம் புராணத்தில் கூடப் பார்த்திராத அதிசயம் அல்லவா? சிறு வயதில் இருந்தே மிகப்பெரிய வயிற்றுடன் காணப்பட்ட சஞ்சுவை ஊரார் கிண்டல் செய்தாலும், அவர் மருத்துவரைப் பார்த்ததே இல்லை. 36 வயதில் மூச்சுவிட முடியாமல் வேறு வழியின்றி மருத்துவரைக் கண்டார். ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வயிற்றில் தலை இல்லாத, முழுதும் வளராத ‘36 வயதான குழந்தை’ உயிரோடு இருந்தது!

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

டிசம்பர் 2007-ல், நியூயார்க்கில் மாடி ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்த Alcides Moreno மற்றும் அவர் சகோதரர் Edgar ஆகிய இருவரும் 47-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்கள். Edgar ஸ்பாட்டில் இறந்துவிட, Moreno உயிர் பிழைத்ததே அதிசயம். அதன் பின்பு 16 ஆபரேஷன்களைத் தாங்கி ஜனவரியில் பேச ஆரம்பித்தது பேரதிசயம். மருத்துவர்கள் அதை முழு அதிசயமாகவும் ஆழ் மனதின் வாழும் ஆசை எனவும் வர்ணித்தனர்.

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!இன்னும் சில கதைகளை எப்படி நடந்தன என்று அறிவியலால் நிரூபிக்கக்கூட முடியாது. ஆனால், ஒவ்வோர் அதிசயமும் நிறைவாகச் சொல்வது மனித மனம் மிகப்பெரிய சக்தி வாய்ந்தது என்பதையே. மனதின் வேட்கை, ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள் என அனைத்தும் சேர்ந்து மனதின் ஞாபகங்களை அடுத்த பிறவிக்கும் கடத்திய வரலாறுகூட உண்டு. செம்மையான வாழ்வுக்குத் தேவை நேர்மறை எண்ணங்களே. முடியும் என்ற எண்ணத்துடன் அதிசய வாழ்வைச் சாத்தியமாக்குவோம்!