Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

வீடியோ கேம் அடிக்‌ஷனும் ஒருவித மனநோயா?

லக சுகாதார நிறுவனத்தின் (WHO) வரைவுப் பட்டியலில் அளவுக்கு மீறி வீடியோ கேம் விளையாடுவதும்   ஒருவிதக் குறைபாடாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு காலம் வீடியோ கேம் போதைக்கு ஆட்பட்டிருந்தால் அது மனவியல் சிக்கலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வீடியோ கேம்ஸ் ஆடும் எல்லோருக்கும் இது பொருந்தாது என்றாலும், பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மையே.  

டாக்டர் நியூஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குழந்தைகளின் கற்றல் திறன், சமூகத்திறன், உடல்நலம் ஆகியவற்றில் வீடியோ கேம் போதையானது, அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என அமெரிக்கன் சைக்காலஜிகல் அசோசியேஷன் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. எனினும், வீடியோ கேம் ஆடும் குழந்தைகளுக்கு நினைவாற்றல், காரணம் அறிதல், உள்ளுணர்தல், இலக்கு நோக்கிச் செல்லுதல், கை-கண் ஒருங்கிணைப்பு போன்ற திறன்கள் அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இளமைக்காலத்தில் வீடியோ கேம்ஸ் ஆடிய குழந்தைகள் பிற்காலத்தில் சாஃப்ட்வேர் துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சில நிபுணர்கள் பாசிட்டிவ் பார்வையோடு கூறுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் போன்ற  ஆட்டங்கள், கலைச் செயல்பாடுகள், பாரம்பரியப் பொழுதுபோக்குகள் போன்றவற்றில் கிடைக்கும் நல்ல பலன்கள் வீடியோ கேம்ஸிலும் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்து. டிஸ்லெக்சியா பிரச்னை உடையவர்களுக்கு வீடியோ கேம்ஸ் மூலம் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.  

டாக்டர் நியூஸ்!

இருப்பினும், பல்லாண்டு கால ஆராய்ச்சி முடிவுகளின் படி, அளவுக்கு மீறிய வீடியோ கேம் ஆட்டம் ஒரு போதையாகவே மாறி மனச்சோர்வு, வெறி உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதையும் இந்த பாசிட்டிவ் நிபுணர்கள் மறுக்கவில்லை. ஒரு நல்ல பலனைப் பெறுவதற்காகப் பல கேடுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விதான் இப்போது எழுகிறது. இதற்கும் பதில் இருக்கிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு... அவ்வளவுதான்!

- ஸ்நேகா பாரதி