Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை
நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை

யோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

யற்கையின் சக்தியை அடக்கி மருத்துவ மாக்கப்பட்ட சிகிச்சைகளே `தெரபி’ என்ற பெயரில் இப்போது நவீன வடிவம் பெற்றுள்ளன. அந்தவகையில் நிறங்களை உள்ளடக்கிச் செய்யப்படும் நம் பழைமையான நிற சிகிச்சையே கலர் தெரபி, குரோமா தெரபி, கலராலஜி, லைட் தெரபி போன்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.  நெருப்பை அடிப்படையாகக் கொண்டது நிற சிகிச்சை. 

நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை

உடல், மனம், உணர்ச்சி என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட நிறங்கள் மிகவும் அவசியம். நிறங்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சிகிச்சையளிப்பதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்தமுடியும். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு தன்மை உண்டு.  `லைக்கோபீன்’ என்ற பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இருப்பதால் தக்காளி சிவப்பாக உள்ளது. இதனால் இது புத்துணர்ச்சி தருவதுடன் ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வெள்ளைப்பூண்டு, வெள்ளை வெங்காயத்தில் உள்ள `ஆந்த்ரோசைனன்’ என்ற சத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். கேரட், ஆரஞ்சு போன்ற ஆரஞ்சு வண்ண உணவுப்பொருள்களில் பீட்டாகரோட்டின், வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளன. அதனால் அவற்றைச் சாப்பிடுபவர்களுக்குப் பார்வைக் குறைபாடு நீங்கும். கொழுப்பின் அளவும் கட்டுப்படும்.

மஞ்சள் நிறக் காய்கறிகள், பழங்களில் கரோட்டினாய்டு சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தின்போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுவதால் பார்வையை மேம்படுத்த உதவும். துளசி, புதினா, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறத் தாவரங்களில் குளோரோபில் அதிகம் இருப்பதால் அவற்றைச் சாப்பிடும்போது கழிவுகள் எளிதாக வெளியேறும். இதுபோல் பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கள், கனிகளுக்குப் பல தனித்தன்மைகள் உள்ளன. 

நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சைஉடலில் கழிவுகள் அதிகரித்தால் சூடு அதிகரிக்கும்; அதைத்தான் காய்ச்சல் என்கிறோம். ரத்தச்சோகை இருந்தால் சிவப்பணுக்கள் குறைந்து அவர்களின் நாக்கு, கண், நகம் போன்றவை வெளிறிக் காணப்படும். மஞ்சள்காமாலை நோய் பாதித்தவர்களின் சில உறுப்புகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். சிறுநீர்கூட மஞ்சள் நிறத்தில் வெளியேறும். நாக்கு, முகம், நகத்தைக்  கண்காணிப்பதன்மூலம் என்ன நோய் பாதித்திருக்கிறது என்று சொல்லிவிடலாம். நிற சிகிச்சையின் அடிப்படை இந்த அறிகுறிகள்தாம்.

நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை

நிற சிகிச்சையில் சூரிய சக்தி பயன்படுத்தப் படுகிறது. பல்வேறு வண்ணங்களைக்கொண்ட கண்ணாடி பாட்டில்களில் நீரை நிரப்பி சூரிய ஒளி படும்படி வைப்பார்கள். சூரிய சக்தி பாய்ந்த அந்த பாட்டில்களின் நிறத்துக்கு ஏற்ப தண்ணீரின் தன்மை மாறுபடும். சிவப்பு நிற பாட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீரைக் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் உடல் வலி நீங்கும். நீல நிற பாட்டில் தண்ணீரைக் குடித்தால் ரத்த அழுத்தம் சீராகும். இதுபோல் ஒவ்வொரு பாட்டிலின் நிறத்துக்கேற்ப அதன் தன்மையும் குணப்படுத்தும் திறனும் மாறுபடும்.

நிறம் பொருந்திய பாட்டில்களில் எண்ணெயை ஊற்றி சூரியஒளி படும்படி வைத்து, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வலி, வீக்கம் விலகும். ஒற்றைத் தலைவலி வந்தவர்களுக்கு நாடி பிடித்துப் பார்த்து அதற்கேற்ற நிறங்களைப் பார்க்கச் சொல்வோம். நிற சக்ரா தியானமும் நோய்களில் இருந்து விடுதலை தரும். நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். அதில் யாருக்கு எந்த  நிறம் பொருந்துகிறதோ அதன்மூலம் அவர்களது பிரச்னையைச் சரி செய்வோம். நிற சிகிச்சையில் மனோரீதியாகவும் அவர்களது நேர்மறை, எதிர்மறைக் குணங்களைக் கண்டறிந்து, கலர் கவுன்சலிங் கொடுப்போம். இதைத்தவிர கலர் மெடிடேஷன், கலர் சுவாசப்பயிற்சி போன்றவற்றின்  மூலமும் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.

- எம்.மரியபெல்சின், படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு