Published:Updated:

கண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)
கண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)

அச்சம் தவிர்

பிரீமியம் ஸ்டோரி

து செல்ஃபிக்களின் காலம். ஒவ்வொரு மொபைலிலும் தினம் 10 செல்ஃபிக்களாவது எடுக்கப்டுகின்றன. செல்ஃபியின் முன்னோடி என்ன தெரியுமா? கண்ணாடி. நம்மை நாமே ரசித்து ரசித்துப் பார்க்க உதவும் கண்ணாடிதான். ஆனால், அந்தக் கண்ணாடியைப் பார்த்தாலே பதறுகிறவர்களும் இந்தப் பூமியில் உண்டு. காரணம் காட்டோப்ட்ரோபோபியா (Catoptrophobia)  

கண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)

உலகம் ஒருவரை அவரின் உருவத்தை வைத்தே மதிக்கிறது. கண்ணாடி ஒருவரை அப்படியே பிரதிபலிக்கும். இதனால்தான் வெளியே கிளம்புவதற்கு முன்  கண்ணாடியைப் பார்ப்பது வழக்கம். ஆனால், காட்டோப்ட்ரோபோபியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணாடியைப் பார்க்க அச்சப்படுவார். அச்சம் என்பதைவிட கண்ணாடி யைத் தவிர்த்தல் எனப் பொருள் கொள்ளலாம். அழகு மற்றும் உடலின் தோற்றத்தை அதிகம் கருத்தில் கொள்பவர்கள், குண்டாக அல்லது உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் கண்ணாடியைப் பார்ப்பதில்லை. மேலும் புகைப்படத்திற்கு நிற்பதையும் தவிர்க்கின்றனர்.

காரணங்கள்

இதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களின் கடந்த காலத்தில் நடந்த மோசமான சம்பவங்கள்தான். அடுத்த முக்கியமான காரணம், அவர்கள் வளரும் சூழல். சிலரின் கலாசாரத்தில் கண்ணாடியைப் பார்ப்பது, புகைப்படம் எடுத்துக் கொள்வது ஆகியவை கூடாத விஷயங்களாகப் பார்க்கப்படும். அப்படி வளர்ந்தவர்களுக்குக் கண்ணாடி என்பது அச்சம் தரக்கூடிய விஷயம். மருத்துவரீதியாகப் பார்த்தால் ஸ்கீஸோபெர்னியா மற்றும் அட்ரீனல் சுரப்புப் பற்றாக்குறைகூட காட்டோப்ட்ரோபோபியா ஏற்பட ஒரு காரணம். 

கண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)



இந்தப் பயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடியைப் பற்றி நினைக்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ நடுங்குவர். இறக்கும் எண்ணம் மனதில் ஏற்படும். எகிறும் இதயத்துடிப்பு, சுவாசம் பாதிப்பு, அதிகப்படியான வியர்வை போன்றவையும் இருக்கும்.

சிகிச்சை

Gradual exposure therapy:  (மெதுவாகப் பயத்தைப் போக்குவது) பாதிக்கப்பட்டவரைக் கண்ணாடியைப் பற்றி முதலில் நினைக்க வைத்து, பிறகு கண்ணாடியைப் பார்ப்பதாக நினைத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். அதன்பின் பயத்தை நீக்கிக் கண்ணாடியைப் பார்க்கச் செய்ய வேண்டும்.

பயத்தின் காரணத்தைக் கண்டறிய பேச்சு சிகிச்சை சிறந்ததாகக் கருதப்படுகிறது. பயத்திற்கு ஆட்பட்டவரை கேலி செய்வதைவிடக் குடும்பத்தினர், நண்பர்கள் அளிக்கும் ஆதரவுதான் முக்கியமான சிகிச்சை.

- இ.நிவேதா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு