Published:Updated:

குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்
குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்

ப்ரியா பிரபாகர் பல் மற்றும் ஈறு சிகிச்சை நிபுணர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

நாம் சிந்தும் புன்னகையைவிட எந்த நகையும் உயர்ந்ததல்ல. மோனாலிசாவின் புன்னகை உலகத் தையே மயக்கியது. சிரிப்பு, நோய் போக்குகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. கவலையைக் களைகிறது. களைப்பைத் துரத்துகிறது.  

குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்

அழகான சிரிப்புக்கு அடிப்படை முத்துப் போன்ற பற்கள்தான். பற்களைப் பார்த்தே எதிரில் இருப்பவரின் ‘பல்ஸ்’ என்னவென்று கூறிவிடலாம். ஆனால், அந்தப் பற்களுக்கு அடித்தளம் என்னவென்று பலரும் அறிந்து கொள்வதில்லை.

நார்கள் எப்படிப் பூவைத் தொடுக்கின்றனவோ அப்படித்தான் ஈறுகள் பற்களைப் பிடித்து நிற்கின்றன. இந்த ஈறுகளைப் பாதுகாப்பது மிகமிக முக்கியம். ஈறுகள் உறுதித்தன்மையோடும் உரிய நிறத்தோடும் இருக்க வேண்டும். அழுக்குகள் படியாமல் காக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஈறுகளில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காரணங்களையும் தீர்வுகளையும் பார்ப்போமா?

குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்ஈறுகளின் பாதிப்புக்கு மூலக்காரணம் ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள். இவை உடலில் அதிகரிக்கும்போதும் குறையும் போதும் ஈறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பெண்களுக்குப் பூப்பெய்தும் பருவம், மாதவிடாய், கருவுறும் காலம், மாதவிடாய் நிற்கும் காலகட்டங்களில் ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால் அவை ஈறுகளில் பிரதிபலிக்கின்றன.

பூப்பெய்தும் பருவம்

ஈறுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் ‘டென்டல் பிளேக்’ (Dental Plaque) எனப்படும் மெல்லிய படலம் தோன்றும். பூப்பெய்தும் பருவத்தில் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் இந்தப் பிரச்னை தீவிரமாகும். இதை அப்படியே விட்டுவிட்டால் காரையாகப் படிந்துவிடும். அதனால் ஈறுகளில் வீங்கி, சிவப்பு நிறமாக மாறத் தொடங்கும். ரத்தக்கசிவும் உண்டாகும். மாதவிடாய் தொடங்கும் நாள்களில் ஈறுகளில் காணப்படும் இந்தப் பிரச்னை மாதவிடாய் நின்றவுடன் தானாகவே சரியாகிவிடும். சரியாகாவிட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

கருவுறும் காலம்

குறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்

கருவுற்ற தாய்மார்களுக்கு இரண்டு அல்லது 3-வது மாதங்களில் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு 8-வது மாதம் வரை படிப்படியாக அதிகரிக்கும். பிரசவத்துக்குப் பின் இரண்டு மாதங்களில் எவ்விதச் சிகிச்சையும் தேவைப்படாமல் தானாகவே குணமாகிவிடும். பற்களை இருமுறை துலக்க வேண்டும். ஒவ்வொருமுறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிக்க வேண்டும். பற்களில் உணவுத் துணுக்குகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 4-வது மாதத்திலும் 6-வது மாதத்திலும் மருத்துவரை அணுகிப் பற்களைச் சுத்தம் செய்தால் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

மெனோபாஸ் பருவம்


மாதவிடாய் நிற்கும் 47 முதல் 55 வயது வரையிலான காலகட்டத்தில் ஹார்மோன் சுரப்பு குறையத் தொடங்கும். இதன் காரணமாக ஈறுகளில் வீக்கம், எரிச்சல், சுவையறிதலில் மாறுதல், வாய் உலர்தல், ஈறுகளில் அழற்சி ஆகியவை ஏற்படும். ஈறுகளில் ஒருவித மினுமினுப்புத் தன்மை காணப்படும். ரத்தம் கசியத் தொடங்கும்; உமிழ்நீர் சுரப்பது குறையும், இவையெல்லாம் சிறுசிறு பிரச்னைகள்தான். இவற்றை எளிதாகச் சரிசெய்து விட முடியும். வலி அல்லது பிரச்னை அதிகமாகும் போது மட்டும் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகவும்


கருவுற்ற பெண்களுக்கு பெரிடாண்ட்டைஸ் (Periodontitis) பிரச்னையால் ஈறுகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள எலும்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் குறைப்பிரசவம் ஆகவும், குழந்தை எடை குறைவாகப் பிறக்கவும் கூட வாய்ப்புண்டு. ஈறுகளில் ஏற்படும் பாதிப்பை உடனடியாகக் கவனிக்காவிட்டால் எலும்புகளையும் சிதைக்கும். கருவுற்ற தாய்மார்கள் பற்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது. பற்களும் ஈறுகளுமே முழுமையான ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி யாகும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு