பிரீமியம் ஸ்டோரி

ண்கள் 60 வயதையும் பெண்கள் 58 வயதையும் அடைந்தாலே சீனியர் சிட்டிசன் என்ற அந்தஸ்தைப் பெற்று விடுவார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் முதியவர்களா? இல்லவே இல்லை என்கிறது ஒரு மானுடவியல் ஆய்வு.  

65வயது இளைஞர்கள் கவனத்திற்கு

பிரிட்டன் அரசின் ‘தி ஃப்ரெண்ட்லி சொசைட்டிஸ் ஆக்ட்’ 1875-ன் படி, முன்பு நீங்கள் 50 வயதைத் தாண்டியிருந்தாலே முதியவர் என்ற முத்திரை குத்தப்படும். ஆனால், ஐக்கிய நாடுகள் சபை அதை ஏற்கவில்லை. 60 வயதைத் தொட்டவர்கள் வேண்டுமானால் முதியவர் ஆகும் தருவாயில் இருப்பதாக ஏற்கலாம் என்ற வரையறையைக் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த இரண்டிலும் உடன்படா வண்ணம், உலகச் சுகாதார அமைப்பு (WHO), வேறொரு ‘வயது அட்டவணை’யைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,

65வயது இளைஞர்கள் கவனத்திற்கு0-17 வயது:
வயதுவந்தோர் (Underage)

18-65 வயது:
இளைஞர்கள் (Youth/Young People)

66-79 வயது: நடுத்தரவயது (Middle-Aged)

80-99 வயது: முதியவர்கள்/சீனியர் சிட்டிசன்ஸ் (Elderly/Senior)

100+ வயது: நீண்ட காலம் வாழ்ந்த வயதானவர் (Long-Lived Elderly)

1970-களில் தொடங்கப்பட்ட இந்த மானுடவியல் ஆய்வு, பின்வரும் மூன்று காரணிகளை அடிப்படையாகக்கொண்டது.

வயது வரிசை (Chronology)

சமூகச் செயல்பாட்டில் மாற்றம் (மாதவிடாய் மாற்றங்கள், செய்யும் பணியின் தன்மை மாற்றம், பெற்ற குழந்தைகளின் வயது)

திறன்களில் மாற்றம் (சொந்தப் பணிகளைக் கூடச் செய்ய முடியாத நிலை வருதல், முதுமை மற்றும் உடல் பண்புகளில் மாற்றம்)

இந்த மூன்றில், இரண்டாவது காரணியான சமூகத்தில் உங்கள் பங்குதான், மேற்கண்ட அட்டவணையில் நீங்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டப் பெரிதும் உதவுகிறது. இதன்படி, அமெரிக்காவில் 66 வயது, கனடாவில் 65 வயது என்று இருக்கும் ஓய்வு வயது தற்போது 67 வரை நீட்டிக்கப்பட உள்ளது.

* உலக வங்கியின் 2016-ம் ஆண்டின் தரவுகள் படி, உலக மக்கள் தொகையில், 65 வயதைத் தாண்டியவர்கள் வெறும் 8.5 சதவிகிதம் மட்டுமே. இது 2050-ம் ஆண்டின் போது இரட்டிப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் வயதானவர், முதியவர் என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒரு நிலையான, அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகள் இதுவரை எதுவும் கிடையாது. இது நாடுகளுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. ஆனால், உலகச் சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை, 65 வயதைத் தொட்டுவிட்டாலும், நீங்கள் இன்னமும் ஓர் இளைஞர்தான்!

-  ர.சீனிவாசன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு