ஹெல்த்
Published:Updated:

கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?

கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?

வசுமதி வேதாந்தம் விழித்திரை சிறப்பு மருத்துவர்ஹெல்த்

மீடியாவில் இருப்பவர்களும், நடிகைகளும், மாடல்களும் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிவதுண்டு. அது அவர்களுக்குத் தொழில் சார்ந்த தேவையாக இருக்கலாம். மற்றபடி தேவையே இல்லாமல் லென்ஸ் அணிவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.   

கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?

கான்டாக்ட் லென்ஸ் போட்டால் பார்வை கெட்டுப்போகும் என அர்த்தமில்லை. ஆனால், சில விஷயங்களைச் சரிவரப் பின்பற்றத் தவறினால், கண்களில் இன்ஃபெக்‌ஷன் உண்டாகி, அதன் காரணமாகப் பார்வைப் பிரச்னைகள் வரலாம். முக்கியமாக, லென்ஸை மிக ஜாக்கிரதையாக, முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?

லென்ஸ் போடுவதற்கு முன், கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். சரியாகச் சுத்தப்படுத் தாக லென்ஸினுள் தேவையற்ற புரோட்டீன் சேர்ந்துவிடும். அது நல்லதல்ல. லென்ஸை அதற்கான பிரத்யேகத் திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். சிலர் எச்சில் தொட்டு சுத்தம் செய்வார்கள். அது மிகமிக ஆபத்தானது. லென்ஸை அகற்றியதும், அதற்கான பெட்டியில் பத்திரமாக வைக்க வேண்டும். கண்ட இடங்களிலும் வைக்கக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் அவசியத்துக்கா? அழகுக்கா?



லென்ஸ் அணிகிறவர்களைப் பார்க்கும்போது  அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் கையில் வாங்கிப் பார்க்கப் பிறர் நினைப்பார்கள். லென்ஸை அப்படியெல்லாம் ஒவ்வொரு கையாக மாற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

முதலில் லென்ஸ் போட்டுக்கொண்டு, அதன் பிறகே மேக்கப் போட வேண்டும். லென்ஸை அகற்றிவிட்டே, மேக்கப்பை நீக்க வேண்டும்.

லென்ஸ் அணிந்துகொண்டு தூங்கக் கூடாது. குட்டித்தூக்கம் போடுவதானால்கூட லென்ஸை எடுத்துவிட்டே தூங்க வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை லென்ஸை மாற்றிவிட வேண்டும்.