பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கடந்த ஐந்து வருடங்களாக, தினமும் காலையில் ஜிம்முக்குப் போய் `வொர்க்-அவுட்’ செய்கிறேன். தற்போது, பணி நிமித்தமாக சில வருடங்கள் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு ஜிம் வசதி கிடையாது. ஜிம்மில் செய்யும் அன்றாட உடற்பயிற்சியைத் தொடராவிட்டால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? வீட்டிலிருந்தே பயிற்சி செய்யலாம் என்றால், தேவையான உபகரணங்கள் என்னிடம் இல்லை. வீட்டிலேயே உபகரணம் தேவைப்படாதப் பயிற்சிகள் ஏதாவது இருந்தால் பரிந்துரைக்கவும்.

- மணிகண்டன், தென்காசி

கன்சல்ட்டிங் ரூம்

ஜிம் `வொர்க்-அவுட்’ செய்யும் பலரும், அதை விட்டுவிடலாம் என்று நினைக்கும்போது அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமோ என நினைத்துப் பயப்படுவதுண்டு. குறிப்பாக, உடல் எடை கூடும் என நினைத்துப்

கன்சல்ட்டிங் ரூம்

பயப்படுவார்கள். இது தேவையில்லாத பயமாகும். உங்களுடைய உணவுமுறை, வாழ்க்கை முறையை மாறாமல் பார்த்துக்கொண்டாலே, எவ்விதப் பிரச்னையும் ஏற்படாது. உங்களுக்கான `ஜிம்’ நேரத்தை `உடற்பயிற்சி’ செய்வதற்கான நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஃப்ளோர் எக்ஸர்சைஸ், ஹார்ம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் (Hamstring Stretching), ஆங்க்கிள் எக்ஸர்சைஸ் (Ankle Exercise), அப்டாமன் எக்ஸர்சைஸ் (Abdomen Exercise), வயிற்றுப் பகுதியை உள்ளிழுத்து வெளிவிடுவது, மூச்சுப்பயிற்சி, தோள் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கானப் பயிற்சிகள் போன்று உபகரணங்கள் தேவைப்படாத எளிய பயிற்சிகளைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தேரா பேண்டு (Thera Band) போன்ற எலாஸ்டிக் (Elastic) பேண்டு பயிற்சிகளைக்கூடச் செய்யலாம்.

- கோதண்டன், பிசியோதெரபிஸ்ட்.

என் அம்மாவுக்குக் கால் மூட்டு வலி அதிகமாகி சமீபகாலமாக நடக்கவே சிரமப்படுகிறார். மருத்துவர்கள், யூரிக் அமிலம்  அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எதனால் ஏற்படுகிறது? யூரிக் அமிலம் அளவைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்யவேண்டும்?

- பிரேமா, துறையூர்

கன்சல்ட்டிங் ரூம்

சில உணவுகள் யூரிக்  அமிலத்தை அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவர்கள், அத்தகைய உணவுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும். யூரிக்  அமிலம் அதிகமாகும்போது, கட்டைவிரலில் வலி அதிகமாக இருந்தால், அதை ‘கௌட்டி ஆர்த்ரைட்டிஸ்’ (Gouty Arthritis) என்று குறிப்பிடுவோம்.  கௌட்டி பாதிப்பு உள்ளவர்கள் அனைவருக்கும் யூரிக்  அமிலம் அதிகமாக இருப்பதில்லை.  யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்குக் கோடை காலத்தில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடலில் டீஹைட்ரேஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே, இப்பிரச்னைக்கான சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு, ஆன்டி-யூரிக் அமில மாத்திரைகள் வழங்கப்படும். இரண்டு வருடங்களுக்குச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

- கோசிகன், பொது மருத்துவர்.

என்னுடைய 12 வயது மகன் அடிக்கடி பல் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகிறான். இரண்டுமுறை டூத் பேஸ்ட் மாற்றிப் பார்த்துவிட்டேன். இருந்தாலும், பல் சொத்தை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. பல் பராமரிப்புக்கு என்ன செய்வது? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்யவேண்டும்?

- சத்யா, நெய்வேலி

கன்சல்ட்டிங் ரூம்

குழந்தை பல் துலக்கும்போது, உடனிருங்கள். வாயின் அனைத்து இடங்களிலும் தேய்க்கிறானா என்று கவனியுங்கள். டூத் ப்ரஷ் தேர்வு செய்வதில் கவனம் தேவை. டூத் பேஸ்ட் வாய்க்கு எரிச்சல் ஏற்படுத்தாத பட்சத்தில், அடிக்கடி  மாற்ற வேண்டிய அவசியமில்லை. தினமும் காலை மாலை இரண்டுவேளையும், பல் துலக்கக் குழந்தையைப் பழக்கப்படுத்துவது நல்லது. குழந்தை இனிப்புப் பொருள்கள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள். முடியாவிட்டால், இனிப்பு சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கவேண்டும் என அறிவுரை கூறுங்கள். வெள்ளரிக்காய், தேங்காய், கேரட் போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிடச் சொல்லுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். மேற்கூறிய அறிவுரைகளைப் பின்தொடரும் பட்சத்தில், பற்களைச் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது.

- சுரேஷ், பல் மருத்துவர்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு