Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

Published:Updated:
நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

னித குலம் தோன்றிய காலம் முதலே பயன்பாட்டில் உள்ளது இயற்கை மருத்துவத்தில் முக்கியமான  நீர் சிகிச்சை (Hydrotherapy). நோயின் தன்மைக்கேற்ப,  நீரைக் குளிரூட்டியோ, சூடுபடுத்தியோ இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிகிச்சை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்க,  துணியை நீரில் நனைத்துக் கட்டி சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்தச் சிகிச்சை, உடலில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். நோய்களுக்கு ஏற்ப, வெவ்வேறு  வெப்பநிலைகளில் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது உள்ளுறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி அமைதியான நிலையை ஏற்படுத்தும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

நீர் சிகிச்சையில் குளிர்ந்த நீர், சுடுநீர், வெதுவெதுப்பான நீர் போன்றவை பயன்படுத்தப்படும். குளிர்ந்த மற்றும் சூடான நீரைக் கொண்டு சிகிச்சை அளிக்கும்போது நரம்புகள் தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான ஹார்மோன்கள் தூண்டப்படும். இதனால், மன அழுத்தம் விலகுவதுடன் செரிமான சக்தி அதிகரிக்கும். நீர் சிகிச்சையைச் சரியான நேரத்தில், சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். உதாரணமாக, உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்குமுன் சாதாரண நீரை அருந்துவதால் வயிற்றில் அமிலம் சுரந்து நன்றாகப் பசியெடுக்கும். உணவு எளிதில் செரிமானமாகும். ஆனால், பெரும்பாலும் நாம் உணவு உண்ணும்போது நீர் அருந்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இது செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். இதேபோல்,  சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து வெந்நீர் குடிப்பதால் உணவு மிக எளிதாகச்  செரிமானமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

உடல் பருமனாக உள்ளவர்கள் உணவு உண்பதற்கு அரைமணி நேரத்துக்குமுன் வெந்நீர் குடித்தால் அமிலம் சுரப்பது குறைந்துவிடும். அதனால்,  அதிகமாக உணவு உண்ண முடியாமல் போவதால் சிறப்பாகப் பலனளிக்கும். தினந்தோறும் சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். காலையில் கண்விழித்ததும் இரண்டு டம்ளர் நீரை அருந்த வேண்டும். காலையில் நீர் அருந்துவது, மூளை சிறப்பாகச் செயல்படவும் சிந்தனை வளமாக அமையவும் உதவும். காலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை பெருங்குடல் அதிகச் செயல்பாட்டில் இருப்பதால், அந்த நேரத்தில் தண்ணீர்  அருந்துவது நல்லது.  மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் சூடான நீரைக் குடிப்பதன்மூலம் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.  டீ, காபி போன்றவற்றைச் சூடாக அருந்துவதால் நாளடைவில் குடலியக்கம் பாதிக்கப்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

நீர் சிகிச்சையில் எனிமா, பெருங்குடல் நீர் சிகிச்சை போன்ற உள் சிகிச்சைகளும், குளியல், ஷவர்பாத், பட்டி போடுதல், ஒத்தடம், ஆவிபிடித்தல் போன்ற வெளி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தசைநார் வீக்கம், தசை இறுகுதல், தசைப்பிடிப்பு, படபடப்பு ஆகிய பிரச்னைகளுக்கு  வெந்நீரில் ஷவர்பாத் எடுப்பதன்மூலம் நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக வலிகள் நீங்கும். தலை தவிர முழு உடலையும் நீரில் மூழ்க வைத்து

நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

‘அண்டர்வாட்டர் மசாஜ்’ செய்யப்படும். அதனால் ரத்த ஓட்டம் சீராகும். தசை இறுக்கம் நீங்கி இலகுவாகும். முழு உடலையும் மூழ்க வைத்து வேறுபட்ட வெப்பநிலையில் சிகிச்சை அளிப்பதால் சருமத்தின் திசுக்கள் தூண்டப்படும். உடல்பருமனைக் குறைக்க இது உதவும். சுடுநீரைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையால் வியர்வை அதிகமாக வெளியேறும். மூட்டு வாதம், முடக்கு வாதம் மற்றும் சீரற்ற ரத்த ஓட்டத்தைச் சரிசெய்ய இந்தச் சிகிச்சை உதவும். இடுப்பு மூழ்கும் அளவு நீரை ஊற்றி ‘இடுப்புக் குளியல்’ செய்வதால் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டுப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள், மெனோபாஸ் சிண்ட்ரோம் போன்றவை சரியாகும். சிறுநீர்த் தொற்று, புரோஸ்டேட் வீக்கம் மற்றும் ஆண்மைக்குறை போன்றவற்றைச் சரிசெய்யவும் இது உதவும். முதுகுத்தண்டு வளைந்தவர்களுக்கு ‘தண்டுவடக் குளியல்’ பலன் தரும். வேறுபட்ட வெப்பநிலையில் கை மற்றும் பாதக் குளியல் செய்வதால் ஒற்றைத் தலைவலி, பதற்றத்தால் வரும் தலைவலி, குதிகால் வலி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். இன்று, பலர் தினமும் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  அது தவறு. தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் உடல் சோர்வடையும். குளிர் காலத்தில், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. ஆனால் தொடர்ந்து செய்யக்கூடாது. சாதாரண நீரில் குளிப்பதே உடல் நலனுக்கு ஏற்றது.

அடுத்த இதழில் பெருங்குடல் நீர்சிகிச்சை பற்றிப் பார்ப்போம்.

- எம்.மரியபெல்சின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism