Published:Updated:

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

ஹெல்த்

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

ஹெல்த்

Published:Updated:
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

டல்ரீதியாக எந்தக் குறையும் இல்லையென்றாலும் சில தம்பதிகளுக்குக் குழந்தைச் செல்வம் தாமதமாகலாம். காரணம், அவர்களின் தாம்பத்யம் சரியான நாளில் நிகழாமல் போவதால் இருக்கலாம். பொதுவாக, பெண்ணுக்குக் கருமுட்டை வெளிப்படும் நாளில் உறவுகொள்ளும்போதே, விந்து கருமுட்டையுடன் இணைந்து உயிர் ஜனிக்கும்.சரி, கருமுட்டை வெளிப்படும் நாளை எப்படி அறிவது? இதோ அதற்கான வழிகள்...

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14-வது நாளில்..! 

மாதவிடாய் ஆரம்பித்த நாளிலிருந்து 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும். அந்த நாளில் உறவுகொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

உடம்பு சூடாகிறதா?

மாதவிடாய் முடிந்த பிறகு வரும் நாள்களில் உடலின் வெப்பம் எந்நாளில் அதிகமாக இருக்கிறதோ, அன்று கருமுட்டை வெளிவருவதற்கு வாய்ப்புள்ள நாள். உங்கள் குழந்தை ஜனிக்கிற நாளாகவும் அது இருக்கலாம்.

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

அடிவயிற்றில் வலி எடுக்கிறதா?

அடிவயிறு முறுக்கி வலிப்பதுபோல இருந்தாலோ அல்லது வயிறு இழுத்துப் பிடிப்பதுபோல வலித்தாலோ, அதைச் சினைப்பை கருமுட்டையை வெளிவிடப் போவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

கண்டறியும் கிட்!

‘லூட்டினைஸிங்’ (Luteinizing) என்ற ஹார்மோனானது கருமுட்டை வெளிப்படப்போகிற இரண்டு நாள்களுக்கு முன்னர் சிறுநீரில் அதிகமாக வெளியேறும். மெடிக்கல் ஷாப்பில் Ovulation Predictor Kit வாங்கி, அதிலுள்ள பரிசோதனை உபகரணத்தின் முனையில், சாம்பிள் சிறுநீரை விட்டால், லூட்டினைஸிங் ஹார்மோன் சிறுநீரில் அதிகமாக இருக்கிறதா (கிட்டில் இருக்கிற குறிப்புகள் மூலமாக) என்பதைத்  தெரிந்துகொள்ளலாம்.

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

வெள்ளைப்படுகிறதா?

சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளிப்படப் போகிறது என்றால், பிறப்புறுப்பில் முட்டையின் வெள்ளைக்கருவைப் போன்ற கசிவு ஏற்படும். தவிர, இந்த நேரத்தில் கருப்பையின் வாயும் மெத்தென்று உயிரணு செல்வதற்கு ஏற்றபடி இருக்கும்.

- ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism