Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

தகவல்

Published:Updated:
டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!
டாக்டர் நியூஸ்!

சுத்தமாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கையைக் கழுவுகிறவரா நீங்கள்? அதன்மூலம் உங்களுடைய ஆரோக்கியம் குறையக்கூடும் என்கிறது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ்.

கையைக் கழுவினால் ஆரோக்கியம் கெட்டுப்போகுமா? அது எப்படி?

மனித உடலில் உள்ள செல்களில் பாதிதான் அவனுக்குச் சொந்தமாம், மீதமுள்ள அனைத்தும் பாக்டீரியா, பூஞ்சைகள், ப்ரோட்டோஜோன்கள், வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள். ஆனால், இதை எண்ணி மனிதன் பயந்து நடுங்க வேண்டியதில்லை, இவற்றில் பல நுண்ணுயிரிகள் ஆபத்தில்லாதவை; சில, மனிதர்களுக்கு நன்மை செய்கிறவை. இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் எல்லா நுண்ணுயிரிகளையும் அழிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டோம், மனிதனுக்குள் இருக்கும் நுண்ணுயிர்ப் பன்முகத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார்கள், சமீபகாலமாக நீரிழிவு, மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ் போன்ற நோய்கள் அதிகம் வருவதற்கு இது காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது, மனித உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளைப் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலுமா என்னும் ஆராய்ச்சிகள் தீவிரமாகியிருக்கின்றன.

‘கறை நல்லது’ என்று விளம்பரத்தில் சொல்வதுபோல், (சில) கிருமிகளும் நல்லவைதான்போல!

டாக்டர் நியூஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யூட்யூபில் ஒரு வீடியோ, அதில் தோன்றும் பெண் பெரிய மைக் வைத்திருக்கிறார். ஆனால், ‘எல்லாருக்கும் வணக்கம்’ என்று மென்மையான குரலில் கிசுகிசுக்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் ஒரு பிரஷ்ஷை எடுத்து, அந்த மைக்கை மெல்ல வருடுகிறார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து மெல்லத் தட்டுகிறார், சில நாணயங்களை ஒரு கிண்ணத்தில் போட்டு அசைக்கிறார்.

இவருக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று யோசிக்காதீர்கள், இப்படிப் பல நூறு வீடியோக்கள் இணையத்தில் இருக்கின்றன. இவற்றை ASMR வீடியோக்கள் என்கிறார்கள். அதாவது, ‘Autonomous Sensory Meridian Response’. அதாவது, குறிப்பிட்ட சில ஒலிகளைக் கேட்கும்போது, காட்சிகளைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு தூண்டுதல் நிகழ்கிறதாம், அதன்மூலம் நமக்குப் பல நன்மைகள் உண்டாம். அந்த நம்பிக்கையில்தான் இத்தனை வீடியோக்கள் பதிவாகியிருக்கின்றன, கோடிக்கணக்கில் பார்க்கப்படுகின்றன.

இந்த நம்பிக்கைக்கெல்லாம் இதுவரை சான்று இல்லாமலிருந்தது. சமீபத்தில் ஷெஃப்ஃபீல்ட் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஓர் ஆய்வில் ASMR வீடியோக்களைப் பார்க்கிறவர்களுடைய இதயத்துடிப்பு சீராவதும், நேர்வித உணர்வுகள் தூண்டப்படுவதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு மனம்சார்ந்த வேறு பிரச்னைகளையும் சரிசெய்ய இயலுமா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.

டாக்டர் நியூஸ்!

ரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறிய விஷயங்களைக்கூட அலட்சியப்படுத்தக்கூடாது. இப்போது சிறிதாகத் தோன்றுகிற சில பிரச்னைகள் பல ஆண்டுகளுக்குப்பிறகு மிகப்பெரிதாக வெளிப்படக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு 50 வயதில் உயர்ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், பின்னர் (சுமார் 75 வயதில்) அவருக்கு டிமென்ஷியா வரலாம் என்கிறது சமீபத்தில் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை. அதாவது, 50வயதில் 130mmHg ரத்த அழுத்தம் கொண்டிருந்தவர்களுக்குப் பின்னர் டிமென்ஷியா வரும் வாய்ப்பு 45% அதிகமாம்.

50 வயது ரத்த அழுத்தத்துக்கும், 75 வயதில் டிமென்ஷியா வருவதற்கும் என்ன தொடர்பு?

ரத்த அழுத்தம் தொடர்பான பெரும்பாலான பிரச்னைகள் அறிகுறிகளற்றவை. 50 வயதில் ரத்த அழுத்தப் பிரச்னை கொண்ட ஒருவருக்கு Silent Strokes எனப்படும் சிறிய, வெளியே தெரியாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும், அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்குப்பிறகு டிமென்ஷியாவாக வெளிப்படக்கூடும் என்கிறார்கள். ஆகவே, ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கவனித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதன் தாக்கங்கள் கால் நூற்றாண்டுக்குப் பிறகும் வெளிப்படலாம்!

ணி, தனிப்பட்ட காரணங்களால் பலரும் அழுத்தத்தைச் சந்திக்க நேர்கிறது. இதனால் மனம், உடல்சார்ந்த  பல பிரச்னைகள் வரக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பது, பார்வைக் குறைபாடுகள்.

மக்டெபர்க் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் ஆய்வின்படி, தொடர்ந்த மன அழுத்தத்தால் கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அதிகரிக்கிறது, இது மனிதனுடைய நரம்பு அமைப்புகளை பாதித்து மூளை, கண்ணுக்குப் பாதிப்புகளைக் கொண்டுவரக்கூடும். எடுத்துக்காட்டாக, க்ளக்கோமா, ஆப்டிக் நியூரோபதி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம், ஏற்கெனவே உள்ள பிரச்னைகள் பெரிதாகலாம், முழுமையான பார்வையிழப்புகூட ஏற்படலாம்.

மாறாக, மன அழுத்தத்தைக் குறைக்கும்போது பார்வைத்திறன் மேம்படுகிறது. இதற்குத் தியானம் போன்ற வழிமுறைகள் பயன்படுகின்றன. தேவைப்பட்டால், மனநல நிபுணர்களைச் சந்தித்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை பெறலாம்.

டாக்டர் நியூஸ்!

நீங்கள் ஹெலிகாப்டர் தந்தையா/தாயா?

ஹெலிகாப்டர் என்றவுடன் தோனியை நினைக்கவேண்டாம். இது குழந்தைவளர்ப்பு தொடர்பாகச் சமீபத்தில் பிரபலமாகிக்கொண்டிருக்கிற ஒரு பயன்பாடு. குழந்தையின் தலைக்குமேல் ஒரு ஹெலிகாப்டரைப்போல் எந்நேரமும் பறந்துகொண்டு, அவர்களுடைய செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டு, ‘இதை இப்படிச் செய்யணும்’ என்று திருத்திக்கொண்டிருக்கிற தந்தை, தாயைத்தான் ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’ என்கிறார்கள்.

பெற்றோர் இதை நல்ல எண்ணத்துடன்தான் செய்கிறார்கள். ஆனால், ‘ஹெலிகாப்டர் பெற்றோருடைய’ குழந்தைகளின் உணர்வுநலன் பாதிக்கப்படக்கூடும் என்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகம். அவர்கள் தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுவார்களாம், சமூகத்தில் பிறரோடு பழகுவதற்கும் தடுமாறுவார்களாம்.

இதனால், குழந்தைகளை அளவுக்கதிகமாகப் பாதுகாக்காமல், அவர்களுடைய சவால்களை அவர்களையே சமாளிக்கவிடுவது நல்லது என்கிறார்கள். இது அவர்களைப் பின்னாள்களில் நல்ல வெற்றியாளர்களாக்கும்!

ன்றைக்குப் பல நவீன மருத்துவமனைகள் வந்துவிட்டன, புதிய சிகிச்சைமுறைகள், ஆராய்ச்சிகள், மருந்துகள் என நோயாளிகளுக்கு உதவும் பல ஏற்பாடுகள் இருக்கின்றன.

ஆனால், நோய்கள் குறையவில்லை. நோயாளிகளும் விரைவாகக் குணமாவதாகத் தெரியவில்லை. என்ன காரணம்?

டெர்ரி ஹன்னன் என்ற மூத்த மருத்துவர் தன்னுடைய அனுபவக் குறிப்புகளாக எழுதியிருக்கும் ‘Bedside Stories: Learning to Listen’ என்ற சமீபத்திய நூலில் இதற்குப் பதில் சொல்கிறார்: மருத்துவர்கள் நோயாளிகளுடன் பேசவேண்டும், அவர்களுடைய நோய்க்கான சிகிச்சை வெறுமனே மருந்துகளில், அறுவை சிகிச்சையில் இல்லை, அவர்களுக்குள்தான் இருக்கிறது, அவர்கள் சொல்லும் பதில்களை ஊன்றிக் கவனித்தால் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்ளலாம், சரியான சிகிச்சையளித்து நோயை விரைவில் தீர்த்துவிடலாம்.

தொழில்நுட்பத்தை நம்பும் நவீன மருத்துவம், நோயாளிகளுடன் பேசுவதை ஊக்கப்படுத்துவதில்லை என்று வருந்துகிறார் டெர்ரி ஹன்னன். ‘நோயாளிகளுடன் நிதானமாகப் பேசுங்கள், அவர்களைப் பேச ஊக்கப்படுத்துங்கள், அதன்மூலம் சிகிச்சை மேம்படும், அவர்களுடைய பிரச்னைகள் விரைவில் தீரும்’ என மருத்துவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்.

- என்.ராஜேஷ்வர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism