Published:Updated:

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்
பிரீமியம் ஸ்டோரி
தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

எஸ்.கோகுலகிருஷ்ணன், இயற்கை மருத்துவ நிபுணர்ஹெல்த்

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

எஸ்.கோகுலகிருஷ்ணன், இயற்கை மருத்துவ நிபுணர்ஹெல்த்

Published:Updated:
தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்
பிரீமியம் ஸ்டோரி
தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

முருங்கை மரத்தில் செயல்திறன்மிக்க வேதிப்பொருள்களும், அமினோ அமிலங்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக, முருங்கைப் பிசின். மரத்தில் இருந்து திரவமாக வடிந்து இறுகிப்போகும் பொருளே முருங்கைப் பிசின். இது  மருத்துவ மகத்துவம் கொண்டது.

 முருங்கைப் பிசினில் சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், புரதம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இரும்புச்சத்தும் அபரிமிதமாக உள்ளது.

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

*  முருங்கைப் பிசின்  விந்தணுக்களை அதிகரிக்கும் ஆற்றல் படைத்தது. உடலை வலுப்படுத்திக் கட்டுக்கோப்பாக இருக்கவும் உதவும்.

*  முருங்கைப் பிசினில் உள்ள பாலிசாக்கரைடு (Polysaccharide) மருந்துப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

*  சிறுநீர் நன்றாக வெளியேறவும், காய்ச்சல், பேதி, ஆஸ்துமா போன்றவற்றுக்கும் முருங்கைப் பிசின் அருமையான மருந்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்

*  முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர்விட்டு புதுப்பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

தலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்


*   முருங்கைப் பிசினைப் பாலுடன் கலந்து கெட்டியாக கன்னங்களில் பூசினால் விரைவில் தலைவலி தணியும். நெறிக்கட்டிகளின் மீது பூசினாலும் வீக்கம், வலி குணமாகும்.

*  முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி நெய்யில் வறுத்துத் தூளாக்கி இரவில் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிட வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டிக் குடித்து வந்தால் உடல் வலுப்பெறும்.

*  வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைப் பிசின் தீர்வு தரும்.

- எம்.மரியபெல்சின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism