Published:Updated:

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

லதா, புற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

லதா, புற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

Published:Updated:
மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

``உணவுப்பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, சீரற்ற ஹார்மோன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை யாரை வேண்டுமானாலும் புற்றுநோய் பாதிக்கலாம். முப்பது வயதைக் கடந்த பெண்கள் மார்பகம், கர்ப்பப்பைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆண்களுக்கும் மார்பகப்புற்று வர வாய்ப்பிருப்பதால், விழிப்பு உணர்வு அவசியம்’’ என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கே.வி.எஸ்.லதா. புற்றுநோய் என்றால் என்ன? அது ஏற்பட என்ன காரணம்? குணப்படுத்தக்கூடிய, குணப்படுத்த முடியாத புற்றுநோய்கள் எவை? விரிவாக விளக்குகிறார் மருத்துவர் லதா.

``மனித உடல் செல்களால் ஆனது. செல்கள் அணுக்களால் ஆனவை. உடலின் ஒவ்வோர் இயக்கத்துக்கும் செல்களிலிருக்கும் மரபணுக்களே உதவுகின்றன. செல்கள் உருவாகி, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் துணைபுரிந்து, அவை சில நாள்களில் அழிந்துபோய், மீண்டும் புதிய செல்கள் உருவாக வேண்டும். இந்தச் செயல்பாட்டைத்தான் `வளர்சிதை மாற்றம்’ என்பார்கள். ஆனால், இதற்கென உள்ள காலஅளவைத் தாண்டி, செல்கள் சீரற்ற நிலையில் வளர்ந்தால், நாளடைவில் அவை கட்டிகளாக மாறிவிடும். அதற்குப் `புற்றுநோய்’ என்று பெயர்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணங்கள்

மரபணுக்கள்: பிறக்கும்போது, உடலிலுள்ள மரபணுக்கள் முறையாக இல்லாமல், குறைபாட்டுடன் இருப்பதுதான் புற்றுநோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணம். அப்படிப் பிறக்கும் குழந்தையின் உடலில் குறைபாட்டோடிருக்கும் மரபணுக்களைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் அழிக்காவிட்டால் அது புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் பெற்றோர், மூதாதையருக்கு இல்லாவிட்டாலும்கூடப் பிறக்கும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வரலாம். நூறில் ஒருவருக்கு மட்டுமே பரம்பரையாக வருகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேடு: அதிக வெப்பம், அதிகக் குளிர், மாசடைந்த காற்று எனத் தட்பவெப்பநிலை மாற்றங்களாலும் புற்றுநோய் உண்டாகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!


உணவுப் பழக்கவழக்கங்கள்:
துரித உணவுகள், மேலைநாட்டு உணவுக் கலாசாரம், ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது, அதிக நிறமூட்டிகள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப்பழக்கங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம்.

சீரற்ற ஹார்மோன் வளர்ச்சி:
உடலில் நடக்கும் வேதிவினை மாற்றங்கள் காரணமாக ஹார்மோன் வளர்ச்சி சீரற்ற நிலையிலிருந்தால் புற்றுநோய் உண்டாகும்.

வைரஸ் தொற்று:
ஹெச்.பி.வி (Human Papilloma Virus), ஹெச்.எஸ்.வி (Herpes Simplex Virus), ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் (Hepatitis B Virus) , ஹெச்.சி.வி (Hepatitis C Virus), ஹெச்.ஐ.வி (Human Immunodeficiency Virus ) போன்ற வைரஸ் தொற்றுகளும் புற்றுநோய்க்குக் காரணமாகலாம்.

குணப்படுத்த முடியாதவை


தசை நரம்புகள், ரத்த நாளங்களில் உண்டாகும் புற்றுநோயைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும்; குணப்படுத்த முடியாது. ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்களைத் தாக்கும் லுக்கேமியா (Leukemia) வகைப் புற்றுநோaய் குழந்தைகளைத் தாக்கினால் குணப்படுத்த முடியாது.

சிவப்பணுக்களில் வரும் பாலிசைதீமியாவுக்கு (Polycythemia) சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தட்டணுக்களில் வரும் பர்புரா (Purpura) வகைப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். எந்த வகை ரத்தப் புற்றுநோயையும் கட்டுப்படுத்த முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. எலும்பு மஜ்ஜைகளிலிருக்கும் அணுக்களில் உண்டாகும் `மல்டிபிள் மையலோமா’ (Multiple Myeloma) வகைப் புற்றுநோயையும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

குணப்படுத்தக்கூடியவை

குடல் புற்று, மார்பகப் புற்று, தொண்டைப் புற்று, நுரையீரல் புற்று மற்றும் வாய்ப் புற்றுநோய் போன்ற உடலின் உள்ளுறுப்புகள், வெளி உறுப்புகளில் உருவாகும் `கார்சினோமா’

(Carcinoma) வகைப் புற்றுநோய்களை முழுமையாகக் குணப்படுத்தலாம். உடலில் நிறமிகளை உண்டாக்கக்கூடிய செல்களில் உருவாகும் மெலனோமா வகைப் புற்றுநோய்களைக்

(Melanoma Cancer) குணப்படுத்தலாம். உடலில் சிறிய மரு போன்று உருவாகி, அது பின்னர் புற்றுநோய்க் கட்டியாக மாறும். இதுவும் கார்சினோமா வகைப் புற்றுநோய்தான்.

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் குணப்படுத்திவிட முடியும். இந்த வகைப் புற்றுநோய்களை

`ஸ்டேஜ் 1’ மற்றும் `ஸ்டேஜ் 2’ நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் மிக விரைவாகக் குணப்படுத்திவிடலாம். `ஸ்டேஜ் 3’ நிலை என்றால் ஓரளவு சமாளிக்கலாம். `ஸ்டேஜ் 4’ நிலையில் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியாது.

தற்காப்பு நடவடிக்கைகள்

புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வாய்ப் புற்றுநோய் வராமல் பார்த்துக்கொள்ளலாம். சுகாதாரமற்ற முறையில் பாலுறவு, தொடர்ச்சியான மகப்பேறு, சுகாதாரமற்ற நாப்கின்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் உண்டாகிறது. மாதவிடாய்க் காலங்களில் பெண்களில் சிலர் பயன்படுத்துகிற துணியைச் சரியாகத் துவைத்துக் காயவைக்காவிட்டால், வைரஸ் தொற்று ஏற்படலாம். அந்தத் துணியைப் பயன்படுத்தினால் பிறப்புறுப்பில் புண்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

மார்பகத்தை அழகுபடுத்தச் செய்யப்படும் சிகிச்சை, கர்ப்பத்தைத் தள்ளிப் போடுவதற்காகச் சாப்பிடும் மாத்திரைகள் போன்றவற்றால் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு மார்பகப் புற்றுநோய் ஏற்படும். எனவே, மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மூளைக்கட்டிகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடனும் பதற்றமில்லாமலும் இருக்கவேண்டும். ஹெச்.பி.வி, ஹெச்.எஸ்.வி, ஹெப்படைட்டிஸ் பி வைரஸ், ஹெச்.சி.வி போன்ற வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் புற்றுநோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் உள்ளன. குழந்தைகளுக்கு மற்ற தடுப்பு மருந்துகளைக் கொடுக்கும்போது இவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை: நோய் பாதிப்பு `ஸ்டேஜ் 1’, `ஸ்டேஜ் 2’ நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

கீமோ தெரபி:
`ஸ்டேஜ் 3’ நிலையில் உள்ளவர்களுக்கு ஊசியின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை இது.

ரேடியோ தெரபி: கதிர்வீச்சுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரிசெய்யும் முறை.

ஹார்மோன் தெரபி:
ஹார்மோன் மாத்திரை, மருந்துகள் மூலம் புற்றுநோயைச் சரிசெய்யும் முறை.

கவனம்!


* பெண்கள், 30 வயதைக் கடந்ததும், மகளிர் நல மருத்துவரைச் சந்தித்து மார்பகம், கர்ப்பப்பை பரிசோதனை செய்ய வேண்டும். `மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

* ஆண்களுக்கு வாய், பிறப்புறுப்பு பகுதிகளில் தொடர்ச்சியாகப் புண்கள் வந்தால் அவசியம் மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற வேண்டும். ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் மார்பகத்தில் ஏதாவது வேறுபாடு தெரிந்தாலும் சிகிச்சை அவசியம்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

* அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் பாதிப்புகள் ஏற்பட்டால் வயிறு மற்றும் குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

* அடிக்கடி இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சளிப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

* அடிக்கடி தலைவலி, வாந்தி, கண்கள் மங்கலாகத் தெரிவது போன்றவை மூளைக்கட்டியின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புண்டு. சாதாரணத் தலைவலிதானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

* வெயிலில் வெளியே செல்லும்போது குடை பிடித்துக்கொள்ள வேண்டும். சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும்.

* ஏ.சி-யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு உடலுக்கு ஆபத்து. இதுதவிர, புதிய காற்று வரக்கூடிய பாதைகளை அது அடைத்துவிடுவதால், மறு சுழற்சியான காற்றையே மீண்டும் சுவாசிக்க நேரிடும். இதனால் நுரையீரல் புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு. அதனால், எப்போதும் ஏ.சி-யில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* அதிக வெப்பத்தில் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட், கிரில்டு சிக்கன், தந்தூரி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களையும், காய்கறிகளையும் வாங்கிப் பயன்படுத்துவதைத் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

* பால் மற்றும் சமைத்த உணவுப்பொருள்களை  ஃபிரிட்ஜில் வைத்துக் குளிர்வித்துப் பிறகு மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது.

* பேக்கரி, ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாகப் புகையில் நிற்கக் கூடாது. கைகால் மற்றும் முகத்துக்குப் பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* புற்றுநோயை உண்டாக்கும் பாமாயில், மோனோசோடியம் குளூட்டமேட் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

* அதிகமான கதிர்வீச்சுக்களை வெளியிடக் கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கையுறை, காலுறை பயன்படுத்த வேண்டும். ஆண்டுக்கொரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள் ளவேண்டும்.

* அமோனியா போன்ற கெமிக்கல் அதிகமாக உள்ள `ஹேர்-டை’ பயன்படுத்துவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே,  கெமிக்கல்கள் அதிகம் நிறைந்த `ஹேர்-டை’ பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* சிமென்ட் தொழிற்சாலைகள், வெல்டிங் செய்யும் இடங்கள் போன்று அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்வோருக்கு, வெப்பக் கதிர்வீச்சுகள் சருமத்தில் படிந்து, ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தத்தில் கலந்து புற்றுநோய் உண்டாகும்.

* சூரியஒளியில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களின் மூலம் `மெலனோமா’ வகை புற்றுநோய் வரக்கூடும். வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் நேரங்களில் வெளியே செல்லவேண்டாம்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளின் தன்மைகளைப் பற்றி விளக்குகிறார், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன்.

``புற்றுநோய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகளால் பக்கவிளைவுகள் உண்டாகும். அவற்றில் சில தற்காலிகமானவை தான். புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு முடி உதிர வாய்ப்பு உள்ளது. இதைக்கண்டு பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. மூன்று மாதங்களில் மீண்டும் முடி வளர்ந்துவிடும்.

மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் பாதித்த செல்கள் அழிவதுடன் ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத் தட்டுகள் (Platelets) ஆகியவை குறைய வாய்ப்புள்ளது. ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்தால் ரத்தச்சோகையும், வெள்ளையணுக்கள் குறைந்தால் நோய்த்தொற்றுகளும், பிளேட்லெட்ஸ் குறைந்தால் ரத்தக்கசிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, கால்களில் முள் குத்துவது போன்ற தன்மையை உணரலாம். உடலில் சோடியம், பொட்டாசியம் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. அதனால், கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், சீரான இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும். ஆண்களில் சிலருக்கு விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், சிகிச்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே விந்தணுக்களைச் சேகரிக்கும் நடைமுறை இருக்கிறது. அதுபோல, குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு இதயம், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன் அதுதொடர்பான பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.

வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு, வாய்ப்புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல், எதையும் விழுங்க முடியாமல் போகலாம். புண், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் குறையும்.

அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு கைவீக்கம் உண்டாக வாய்ப்புள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டால் புற்றுநோய் பாதித்த இடங்களில் வலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த பாதிப்புகள் ஆறு மாதத்தில் சரியாகிவிடும்.”

- இரா.செந்தில்குமார்

வகைகள்

* ரத்த அணுக்களில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் (Blood Cancer).

* எலும்பு மஜ்ஜைகளிலிருக்கும் அணுக்களில் உருவாகும் புற்றுநோய் (Multiple Myeloma).

* தசை நரம்புகள், ரத்த நாளங்களில் உண்டாகும் புற்றுநோய் (Sarcoma).

* உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் (Carcinoma).

* மூளைக்கட்டி (Brain Tumor).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism