``மூன்று மாதங்களாக வாக்கிங் போகிறேன்... தொப்பை ஒரு இன்ச் கூடக் குறையலை...’’

``தினமும் ரன்னிங் போகிறேன்... மூட்டுவலிதான் மிச்சம். ஒரு பலனும் கிடைக்கலை.’’

``ஆறு மாதங்களாக சைக்கிளிங் செய்கிறேன்... எடை குறையவேயில்லை...’’

இப்படிப்பட்ட புலம்பல்கள் வொர்க் அவுட் வாழ்க்கையில் சாதாரணம். அதிலும், வாக்கிங் போகிறவர்கள் மத்தியில்தான் இப்படிப்பட்ட புலம்பல்கள் ஒலிக்கும். ‘ரிசல்ட் கிடைக்கவில்லையே’ என்கிற ஏக்கத்தில் வொர்க் அவுட் மீதே வெறுப்பு வந்து அதிலிருந்து வெளியேறி விடுவார்கள். அதுதானே நியாயம்? ஒன்றுமே ஆகவில்லையென்றால் அதை ஏன் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டும்? உடற்பயிற்சி செய்தால், உடல் கட்டுக்கோப்பாக மாறி, மனம் மகிழ்ந்து, சிக்ஸ்பேக் தோன்றி, ஆரோக்கியம் மேம்பட்டு, பளபளப்புக் கூடி, தொப்பை குறைந்து, நான்கு பேர் மெச்சி... எல்லாம் ஆகவேண்டும் தானே? ஆனால், ஏன் எல்லோருக்கும் அப்படி ஆவதில்லை?

மாரத்தான் போட்டிகளுக்குச் சென்று பாருங்கள். ஆயிரம் பேர் ஓடினாலும் ஐந்து பேர்தான் பார்க்கக் கச்சிதமான உடலோடு வசீகரமாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம், நோஞ்சான்களாகவோ, வெண்தொப்பை வேந்தர்களாகவோ இருக்க என்ன காரணம்? சைக்கிளிங் போகிறவர்களுக்கும் இதேநிலைதான். ஜிம்மிலேயே கிடந்தாலும் எடை குறைவதில்லையே, ஏன்? உடற்பயிற்சியின் பலன்கள் ஏன் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது?

முதல் காரணம், இலக்குகள் இல்லாமல் இருப்பது.

உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்கும்போதே எதற்காக, எதை நோக்கி இந்தப் பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். நம் நோக்கம் எடைக்குறைப்பா, மன நிம்மதியா, ஆரோக்கியமா, தொப்பை நீக்கமா, முகப்பொலிவா, மனமகிழ்ச்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு ஏற்றபடி நம்முடைய உடற்பயிற்சிகளை வடிவமைத்துக்கொள்ள முடியும். பயிற்சியாளரும் அதற்கேற்றபடி நமக்கான பயிற்சிகளை உருவாக்கித் தருவார்.

தொப்பையைக் குறைக்கவோ எடையைக் குறைக்கவோ வாக்கிங் மட்டுமே தீர்வில்லை. வாக்கிங் போனாலே தொப்பை குறைந்துவிடும் என்றால் நம் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் பல ஆண்டுகளாக வாக்கிங் போகிறவர்களுக்கு ஏன் பெரிய தொப்பை இருக்கிறது? யோகா பயிற்சியாளர் பாபா ராம்தேவுக்கு ஏன் சிக்ஸ்பேக் இல்லை? சிக்ஸ்பேக் வேண்டும் என்றால் அதற்குரிய பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்று கடுமையாகச் செய்யவேண்டும். யோகா அதற்கான இடமல்ல. அல்லது யோகாவிலேயே அட்வான்ஸ் லெவலுக்குச் செல்ல வேண்டும். இலக்கைத் தீர்மானித்து விட்டீர்கள். உடல் எடையைக் குறைக்க வேண்டும், அல்லது உடல் எடையைக் கூட்ட வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி நமக்கான சரியான உடற்பயிற்சியைத் தீர்மானிப்பது?

எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மூன்று விஷயங்கள் மிக முக்கியம். ஆரோக்கியம், மனமகிழ்ச்சி, உடல் கட்டமைப்பு. இந்த மூன்று அம்சங்களிலும் பலன் கொடுத்தால்தான் அது நல்ல உடற்பயிற்சி. இந்த மூன்றையும் தருகிற உடற்பயிற்சியைக் கண்டுபிடிக்க எட்டு படிகளைக் கொண்ட வழிமுறை ஒன்று இருக்கிறது. அது அடுத்த வாரம்..

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ, படம்: மதன்சுந்தர்