Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்டிங் ரூம்

கணேசன், தஞ்சாவூர்.  

''காஸ்மெட்டிக் சர்ஜரியில், உதிர்ந்த முடி மீண்டும் முளைக்கவைக்கும் ட்ரீட்மென்ட் உள்ளது என்கிறார்களே... அது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும்?'' 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்டிங் ரூம்

டாக்டர் கே.ராமச்சந்திரன்,
சீனியர் கன்சல்டன்ட், காஸ்மெட்டிக் சர்ஜரி,
அப்போலோ மருத்துவமனை.

''நிச்சயமாக இது பயனுள்ள தொழில்நுட்பம். இந்தச் சிகிச்சையால் முடி கொட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியாது. விழுந்த இடத்தில்தான் முடியை முளைக்கவைக்க முடியும். நல்ல ரிசல்ட் என்பது, நபருக்கு நபர் வேறுபடும். பின் மண்டையில் எவ்வளவு முடி உள்ளது? அதன் அடர்த்தி என்ன என்பதைப் பொறுத்து இந்த ரிசல்ட் அமையும். அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே, கவுன்சிலிங் மூலம் சர்ஜரிக்குப் பிறகு எவ்வளவு முடி இருக்கும், அதன் அடர்த்தி எவ்வளவு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுவோம். இதனால், இந்தச் சிகிச்சை தேவையா, இல்லையா என்பதை அவர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். தலைப் பகுதி தோல் மரத்துப்போக மருந்து கொடுத்துவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வோம்.

பின் மண்டையில் இருப்பது நல்ல ஆரோக்கியமான முடி. இதற்கு ஆயுளும் அதிகம் என்பதால், அங்கே இருந்து முடியை எடுத்து முன்பக்கத்தில் பொருத்துவோம். இந்த அறுவைச் சிகிச்சை மூன்று முதல் ஆறு மணி நேரத்துக்கு நடக்கும். அறுவைச் சிகிச்சை முடிந்த மூன்று வாரத்தில் முன் பக்கத்தில் வைக்கப்பட்ட முடி கொட்டிவிடும். பிறகு அந்த வேரில் இருந்து புதிய முடி முளைக்கும். இந்த அறுவைச் சிகிச்சையால் முன்பக்கத்தில் தழும்பு இருக்காது. ஆனால், பின்பக்கத்தில் முடி எடுக்கப்பட்ட இடத்தில் தழும்பு இருக்கும். இருந்தாலும், நாளடைவில் முடிக்குள் தழும்பு மறைந்துவிடும்!'

தாமரைச்செல்வி, மதுரை.

'எனது மார்பகங்கள் இயல்பைவிட சற்றுப் பெரிதாக இருக்கின்றன. மார்பகங்கள் பெரிதாக இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக ஒரு இதழில் படித்தேன். மார்பகப் புற்றுநோய் எதனால் வருகிறது டாக்டர்?' 

கன்சல்டிங் ரூம்

டாக்டர் ராஜா,
புற்றுநோய் மருத்துவர்,
அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை.

''இது மிகவும் தவறான கருத்து. மார்பகம் பெரிதாக இருப்பதற்கும், மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புற்றுநோய் வருவதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. உடல் பருமன், உணவு, வாழ்க்கை முறை, குழந்தையின்மை, குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது போன்றவற்றால் புற்றுநோய் வரலாம். இதைத் தவிர்க்கக் கூடிய காரணிகள் என்று கூறுவோம். ஆனால், மரபியல்ரீதியாக வரும் புற்றுநோய்கள் நம்மால் தவிர்க்க முடியாதவை. மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையாக்கப்பட்ட பரிசோதனை முறைகள் வந்துவிட்டன. முதலாவது, சுயபரிசோதனை செய்து கொள்ளுதல், இரண்டாவது 'மேமோகிராஃபி’ என்ற செலவு குறைவான பரிசோதனை. ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம், எளிதில் குணப்படுத்திவிட முடியும்!''

மூர்த்தி, சேலம்.

''35 வயதிலேயே சின்னச் சின்ன விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல், திண்டாடிவரும் இளைஞன் நான். அலமாரியில் வைத்திருக்கும் செல்போனை எடுப்பதற்காக அறைக்குள் செல்கிறேன். அங்கு சென்ற பிறகு, 'எதற்காக இங்கே வந்தோம்?’ என்ற கேள்வியோடு நெற்றியைச் சுருக்கியவாறு யோசிக்கிறேன். இது ஏதாவது நோயா? ஞாபகத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்லப்படும் மருந்து மாத்திரைகள் இதற்குப் பயன் தருமா?'' 

கன்சல்டிங் ரூம்

டாக்டர் கே.செந்தில்வேலன், மனநல மருத்துவர், கரூர்.

''உங்களுக்கு இருப்பது டிமென்ஷியா (Dementia)எனப்படும் ஞாபக மறதி நோய் இல்லை. அது 35 வயதில் எல்லாம் வராது. டிமென்ஷியா வந்தால் உங்கள் தினசரி வாழ்க்கையையே நடத்த முடியாத நிலை இருக்கும். ஆனால், உங்கள் பிரச்னை அது இல்லை. 35 வயதில் இப்படி ஞாபக மறதி வரப் பல காரணங்கள் உள்ளன. நிறைய வேலைப் பளு இருந்தால், ஞாபக மறதி இருக்கும். பதற்றமும் மிக முக்கியமான ஒரு காரணம். கவனம் குறைவதால் மறதி ஏற்படலாம். காரணம்,  பதற்றமாக இருக்கும் நேரத்தில் மூளையில் பல விஷயங்கள் பதிவாகாது. அதனால்,  அது மீண்டும் நினைவுக்கு வராது. நீங்கள் சாலையில் செல்லும்போது பல காட்சிகளைக் காண்கிறீர்கள். ஆனால், அவை அனைத்தும் உங்கள் மூளையில் பதிவாகாது. அவற்றில் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்களோ, அவை மட்டுமே  பதிகின்றன. சில மாணவர்கள் சினிமா பார்த்தால் சீன் பை

##~##
சீன் சொல்வார்கள். ஆனால், பாடப் புத்தகத்தில் உள்ளதைக் கேட்டால், எதுவுமே ஞாபகம் இருக்காது. பதற்றமாக இருக்கும்போதும், பல சிந்தனைகளோடு இருக்கும் போதும்... குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. மனப் பதற்றத்தைத் தணிக்க மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் முன்னேற்றம் காணலாம். இந்த மறதியைப் போக்க சில எளிய பயிற்சிகளை வீட்டில் செய்யுங்கள். முதல் பயிற்சி : சப்-கான்ஷியஸாக எதையும் செய்யாமல், பல் துலக்குவது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது, குளிப்பது, சாப்பிடுவது, டிரெஸ் போட்டுக்கொள்வது... என்று எதைச் செய்தாலும் கூடுமானவரை  கான்ஷியஸாகவே செய்யுங்கள். தினமும் வீட்டைவிட்டுக் கிளம்பும் முன்,  இன்று என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று மனசுக்குள் ஒரு பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுப் புறப்படுங்கள். இரவு தூங்கப்போகும் போதும் அந்தப் பட்டியலை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டுவந்து, 'எதை எல்லாம் செய்தோம்’ என்று சுய ஆய்வு நடத்தினாலே இந்தப் பிரச்னையை சுலபமாக வென்றுவிடலாம்!''
கன்சல்டிங் ரூம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism