Published:Updated:

கணினி... கண்மணி!

கணினி... கண்மணி!

கணினி... கண்மணி!

கணினி... கண்மணி!

Published:Updated:
கணினி... கண்மணி!

ந்தியாவில் 1.2 கோடி முதல் 1.8 கோடி பேர் பார்வைக் குறைபாட்டுடன் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு கண்புரை பிரச்னை. இவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் நல்ல பார்வை கிடைக்கச் செய்யலாம். ஆனால், போதுமான விழிப்பு உணர்வு இன்மையால் தொடர்ந்து பார்வைக் குறைபாட்டுடன் இவர்கள் வாழ்கின்றனர். கண் பரிசோதனை என்றால், மருத்துவமனையில் ஏ,பி,சி,டி என எழுதிவைத்திருப்பார்கள். அதைப் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு எப்படிப் படிக்கத் தெரியும், தங்களுக்குள்ள குறைகளை எப்படிச் சொல்ல முடியும் என்ற பெற்றோர்களின் அறியாமையாலேயே நிறைய குழந்தைகள் பார்வைக் குறைபாட்டுடன் இருக்கின்றனர். கண்ணில் பிரச்னை உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு வரும்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும். இது தேவையற்றது. பெரியவர்களுக்கு மட்டுமே கண் பரிசோதனை என்று இல்லை. பிறந்த குழந்தைக்குக்கூட கண் பரிசோதனை செய்யலாம்.

40 வயதுக்கு மேல் படிப்பதில் பிரச்னை வரும். அது எல்லாருக்கும் வரக்கூடிய பிரச்னைதான். கண்ணாடி அணிவதன் மூலம் சரி செய்துவிடலாம். நீரிழிவு நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வதுடன், விழித்திரைப் பரிசோதனையும் தவறாமல் செய்ய வேண்டும். ஏனெனில், நரம்பில் பிரச்னை ஏற்படுவது ஆரம்பத்தில் தெரியாது. பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்ட பிறகு வருவதைக் காட்டிலும் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் இத்தகைய பிரச்னையைத் தவிர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணினி... கண்மணி!
##~##

கண் அழுத்த நோய், 40 வயதுக்கு மேல் வரக் கூடிய பிரச்னை.  கண் அழுத்தம் மற்றும் சில பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அதை தவிர்க்கலாம். சிலருக்கு கண்ணில் பூச்சி பறப்பதுபோல இருக்கும். சிலருக்கு கண்ணில் மின்னல் அடிப்பதுபோல இருக்கும். அப்படி இருந்தால் உடனே கண் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்ற புதிய பிரச்னை வந்துள்ளது. அதாவது, கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் உலரும் பிரச்னை வரலாம். ஒரு நிமிடத்தில் 16 முதல் 18 முறை கண் சிமிட்ட வேண்டும். கணினியையே பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் அளவு அவர்களை அறியாமலேயே குறைந்துவிடுகிறது.

உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன் செல்கிறது. ஆனால், கருவிழிக்கு ரத்த விநியோகம் கிடையாது. கண்கள் இந்தக் கண்ணீரில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. கணினியைப் பார்க்கும்போது, கண்ணீர் அளவு குறைந்து, உலர்ந்துபோகிறது. கருவிழிக்கு செல்லும் ஆக்சிஜன் குறைகிறது, இதனால் எரிச்சல், மணல் போட்டு அறுப்பது போன்ற வலி இருக்கும். கண்ணில் தண்ணீர் வழிந்துகொண்டு இருக்கும். கணினியில் வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, கணினியில் வேலை பார்ப்பவர்கள், கண்ணின் மட்டத்துக்குக் குறைவாக கணினித் திரையை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்கு கருவிழி மீது இமை படிந்து பாதுகாப்பை அளிக்கும். கணினியைப் பயன்படுத்தும்போது உபயோகிப்பதற்காக சிறப்புக் கண்ணாடிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். முன்னெச்செரிக்கையாக இருப்பதன் மூலம் பார்வைக் குறைபாடு வருவதைத் தவிர்க்க முடியும்!

தொகுப்பு: பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism