Published:Updated:

துளித் துளியாய்...

படங்கள் : பா.காயத்ரி அகல்யா, கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

துளித் துளியாய்...

படங்கள் : பா.காயத்ரி அகல்யா, கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

Published:Updated:

புத்துணர்வு

துளித் துளியாய்...

முதுமைச் சிறப்பு மருத்துவர் நடராஜன் தன்னைச் சந்திக்க வரும் நோயாளிகளிடம் இப்போதெல்லாம் தவறாது சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. ''கோயில் யானைகளுக்கு முதுமலையில் புத்துணர்வு முகாம் நடக்கிறது. புது இடம், புது காற்று, புது சூழல்.... இதெல்லாம் யானைகளுக்கே முக்கியம் என்றால் மனிதர்களுக்கு? அதனால்தான், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், வெள்ளிக்கிழமையே 'ஹாலிடே’ மூடுக்கு வந்துவிடுகிறார்கள். தேவையில்லாத பல விஷயங்களை மேலை நாடுகளில் பார்த்துக் காப்பி அடிக்கும் நாம், இந்த நல்ல விஷயத்தை அவர்களிடம் இருந்து ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? வீட்டுக்கு உள்ளேயே டி.வி., கணினி எனப் பொழுதைக் கழிப்பது கூடாது. குடும்பத்துடன் வெளி இடங்களுக்குச் செல்வது டென்ஷனைக் குறைக்கும். புதிய காற்றும் சூழலும் புத்துணர்வை ஏற்படுத்தும். குழந்தைகளை உற்சாகமாக்கும்'' என்று சொல்லிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்பிரிக்க சிறுமலரை மீட்ட மலர்!

துளித் துளியாய்...

லகின் அதிநவீன மருத்துவமனைகள் உதடு பிதுக்கிக் கைவிரித்த ஒரு சிகிச்சையை சவாலாக எடுத்துக்கொண்டு சாதித்துக் காட்டி இருக்கிறது சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை. ஆப்பிரிக்க நாடான காங்கோவைச் சேர்ந்த முபென்சி என்ற 8 வயது சிறுவனுக்கு பல ஆண்டுகளாக தீராத தலைவலி. திடீரென்று வலது கண் பார்வையும் பறிபோய்விட்டது. ''மூளையின் சிக்கலானப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் இருந்த கட்டியே பார்வை பறிபோனதற்குக் காரணம். எண்டோஸ்கோப்பி கருவியை மூக்குத் துவாரம் வழியே செலுத்தி, ஆறு மணி நேரத்தில் ஓர் அறுவைச் சிகிச்சையும் தலையின் கபாலம் வழியே எட்டு மணி நேரத்தில் மற்றோர் அறுவைச் சிகிச்சையும் செய்து கட்டி அகற்றப்பட்டது. அந்த ஆப்பிரிக்கச் சிறுமலரின் பார்வையை மீட்டது எங்கள் மலர்!'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்வர பிரசன்னா பெருமிதத்தோடு!

அந்த நாள் ஞாபகம்...

துளித் துளியாய்...

சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் (1961 மற்றும் 1971-ம் ஆண்டு பேட்ச்கள்) சமீபத்தில் மறுகூடல் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அவர்கள் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே இந்தச் சந்திப்பு நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூத்த மருத்துவ நிபுணர்களாகக் கோலோச்சும் பலரையும், நரைத்த முடி மாணவர்களாக வகுப்பறை மேஜைகளில் பார்த்தபோது நெகிழ்வாக இருந்தது. அவர்களில் சிலர் பத்மஸ்ரீ விருது, பி.சி.ராய் விருதுகளைப் பெற்றவர்கள். ஆனால், ''என்ன மாப்ளே... எப்படிடா இருக்கே... பேரப் பிள்ளைகள் என்ன பண்றாங்க'' என்று எந்த வேறுபாடுகளும் இன்றி உரையாடிக்கொண்டிருந்தனர். அந்தாக்ஷரி, விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா என இரண்டு நாட்களைக் கழித்தவர்கள் பிரிந்தபோது, ஒவ்வொருவர் கண்களிலும் நீர்த்துளிகள்!

'ட்ராகுலா தெரபி!'

துளித் துளியாய்...

'எக்லிப்ஸ்’, 'நியூமூன்’, 'ட்வைலைட்’, 'பிரேக்கிங் டான்’- இவை சமீபத்திய ஹாலிவுட் ஹிட் டிராகுலா திரைப்படங்கள். இதில் 'ரத்த’ வேட்டை நாயகனாக காதல் மொழி பேசும் சாக்லெட் பாய் ராபர்ட் பேட்டிசன்தான் இங்கிலாந்து இளம் பெண்களின் லேட்டஸ்ட் இதய துடிப்பு! வெல்வெட் கன்னத்துக்குச் சொந்தக்காரரான ராபர்ட் மீது பைத்தியமாகக் கிடக்குது யூத் ஏரியா. 'ராபர்ட்டின் ரோஜா கன்னத்து ரகசியம், ஸ்டிமூலேடட் செல்ஃப் சீரம் ஸ்கின் தெரபி!’ என்று ஒரு டாக்டர் இணையத்தில் பற்ற வைத்துவிட, இங்கிலாந்து இளசுகள் கூட்டம் அந்தச் சிகிச்சைக்காக வரிசை கட்டி நிற்கிறது. அப்படி என்ன சிகிச்சை அது? கையில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களையும், சீரத்தையும், ரத்தத்தட்டுகளையும் தனியாகப் பிரித்து எடுத்து, அதன் பின் சீரத்தில் செறிவூட்டப்பட்ட வைட்டமின்களையும் அமினோ அமிலத்தையும் கலந்து முகத்தில் இன்ஜெக்ட் செய்வதே அது! இதற்கு அந்த டாக்டர் கொடுத்திருக்கும் பெயர் 'ட்ராகுலா தெரபி’. இது எப்படி இருக்கு!  

ஐந்து ஊசியா? ஒரே ஊசியா?

துளித் துளியாய்...

ந்து முக்கிய நோய்களில் இருந்து பச்சிளங்குழந்தைகளைக் காக்க பல ஊசிகள் போடப்படுகின்றன. இதற்குப் பதில், ஒரே ஊசியில் அந்த ஐந்து நோய்களும் வராமல் தடுக்கும் 'பெண்டாவேலன்ட்’ என்ற தடுப்பூசி தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த ஊசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். 'நம் நாட்டில் முறையான தடுப்பூசிக் கொள்கை இல்லை, தற்போதுள்ள திட்டம் வர்த்தக நலனைச் சார்ந்ததாக இருக்கிறது. இந்த ஊசி போட்டால் குழந்தைகளுக்கு மரணம்கூட ஏற்படலாம்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கும் அவர், 'ஏற்கெனவே இந்தப் புதிய தடுப்பூசிமுறையை ஜப்பான் நிறுத்திவிட்டது' என்றும் கூறுகிறார். விளக்கம்கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கு டெல்லி உயர் நீதிமன்றம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism