ஹெல்த்
Published:Updated:

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

கோபால கிருஷ்ணன், சிறுநீரகவியல் மருத்துவர்ஹெல்த்

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

தயம், மூளைக்கு இணையாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு சிறுநீரகம். உடலின் கழிவுநீக்கு மண்டலத்தில் முக்கியப் பங்காற்றும் இந்த உறுப்பில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க, சிறுநீரகவியல் மருத்துவர் கோபால கிருஷ்ணன் கூறும் 5 வழிமுறைகள்!

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்
சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

ரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவதும், சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பதும் முக்கியம். சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் தங்காமல் வெளியேற்றுவதுடன் தொற்று ஏற்படாமல் தவிர்க்கவும் இது உதவும். தண்ணீர் குறைவாக அருந்தினால், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுகள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

ஃபைன் கலந்த உணவுப் பொருள்கள்  சிறுநீரை அதிகமாக வெளியேற்றி, சிறுநீரகத்துக்கு அதிக வேலைப்பளுவைத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கு  சிறுநீர் மண்டலத்தில் கடுமையான சிறுநீரக நுண்குழல் அழற்சி (Acute Pyelonephritis) பிரச்னையையும் ஏற்படுத்தலாம்.

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்
சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

சிறுநீர்த்தாரையில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்துவதுடன் தொற்றையும் உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க, மருத்துவர் கூறும் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

ண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமமோ அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலோ ஏற்பட்டால் அது `புராஸ்டேட் கிளாண்ட் என்லார்ஜ்மென்ட்’ (Prostate Gland Enlargement) என்கிற பிரச்னையாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

சிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்

பிறப்புறுப்பில் சிறுநீர் வெளியேறும் இடத்தைச் சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் பராமரிக்க வேண்டும்.

- அம்ரித வர்ஷிணி ஸ்ரீ