ஹெல்த்
Published:Updated:

மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி

மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி

ஹெல்த்

ந்த ஒரு புதிய செயலும் பொருளும் முதலில் நம்மை அதிகமாக குஷிப்படுத்தும். அதுவே பழகப் பழகப் புளித்துப் போய்விடும். முதன்முறையாக நீங்கள் ஒரு கார் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். சில நாள்களுக்கு கார் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.  அதில் பயணம் செய்யும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கத் தொடங்குவீர்கள். அதைக் கண்ணும் கருத்துமாக கவனத்தோடு கையாள்வீர்கள். 

மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி

சில மாதங்கள் கழித்தும் அந்த நிலை நீடிக்குமா? நீடிக்காது. அப்போது உங்களுக்கு அது வெறும் கார் என்றுதான் தோன்றும். அதேபோல் ஓர் உணவை முதன்முறையாக உண்ணும்போது ஏற்படும் வியப்பும் உற்சாகமும் சில வாரங்களிலோ மாதங்களிலோ குறைந்துவிடும். இந்த நிலை மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி சாதாரணமாக நாம் உண்ணும் உணவுகளை வித்தியாசமான முறைகளில் உட்கொண்டால், நமக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொல்கின்றன `Personality and Social Psychology Bulletin’ என்ற அறிவியல் பத்திரிகை மேற்கொண்ட  தொடர்ச்சியான ஆய்வுகள். நம்மை மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய, இது போன்ற மாற்றங்களை `ஹிடானிக் அடாப்டேஷன்’ (Hedonic Adaptation) என்கிறார்கள்.

ஓர் ஆய்வில் 68 பங்கேற்பாளர்களை பாப்கார்ன் சாப்பிடச் செய்தனர். பாதி பங்கேற்பாளர்கள் சாதாரண முறையிலும், மீதமுள்ளவர்கள் சாப்ஸ்டிக்கைப் (Chopstick) பயன்படுத்தியும் சாப்பிட்டனர். சாப் ஸ்டிக்கைப் பயன்படுத்தியவர்கள் மட்டும் மிகவும் ரசித்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள் என்பது கண்டறியப்பட்டது.

ஆக, வித்தியாசமான பொருள்களை மாற்றி, வேறு பொருள் வாங்குவதற்கு பதிலாக, அந்தப் பொருளையே வழக்கத்துக்கு மாறான வகையில் உபயோகித்தால் முன்னர் கிடைத்த மகிழ்ச்சியைப்போலவே எப்போதும் மகிழ்ச்சி தொடரும் என்கிறது அந்த ஆய்வு.

 வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட,  எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம். உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் சலிப்பை ஏற்படுத்தினால் பொருளை அல்ல, செயலை மாற்றுங்கள்.

- இ.நிவேதா