ஹெல்த்
Published:Updated:

தொண்டைவலி போக்கும் துளசி

தொண்டைவலி போக்கும் துளசி
பிரீமியம் ஸ்டோரி
News
தொண்டைவலி போக்கும் துளசி

எட்வர்டு பெரியநாயகம், இயற்கை மருத்துவர்ஹெல்த்

சித்த மருத்துவத்தில், ‘தெய்வ மூலிகை’ என்று போற்றப்படுவது துளசி. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என இதில் பல வகைகள் உள்ளன.  இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.

தொண்டைவலி போக்கும் துளசி

துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் அருந்தி வந்தால் சருமச் சுருக்கம் மறையும். பார்வைக் குறைபாடுகள் நீங்கும்.

தொண்டைவலி போக்கும் துளசி



துளசிச் சாற்றை உடலில் தேய்த்துக்கொண்டால் கொசுக்கள் நம்மை நெருங்காது. யூகலிப்டஸ் தைலத்துடன் துளசி இலையை அரைத்து சேர்த்து, வீட்டில் தெளித்தால் கொசுக்கள் உள்ளே வராது.

துளசி இலைகளை வெறுமனே சாப்பிடக் கூடாது. அவற்றுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால்தான் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

மாதவிடாய்கால வயிற்றுவலிக்கு துளசி அருமருந்து. நான்கைந்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் வலி நீங்கும். 

உலர்ந்த துளசியைப் பொடியாக்கி, அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் ஆக்கி ஈறுகளில் தடவி வந்தால் வாய் நாற்றம், ஈறுகளில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.

தொண்டைவலி போக்கும் துளசி

துளசி விதைகளை சுமார் 30 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

ஓமவல்லி, தூதுவளை, துளசி இலைகளுடன்  மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் சளித்தொந்தரவு, தொண்டை வலி, மூக்கடைப்பு விலகும்.

- எம்.மரிய பெல்சின்