`ஆடாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்...’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.

இதன் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் `ஆடு தொடா இலை’ என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் ஆடாதொடையாக மருவிவிட்டது.

பழுப்பு நிறத்தில் இருக்கும் உலர்ந்த இலைகளுக்குத் தேயிலை மணம் இருந்தாலும், சுவை கசப்பாக இருக்கும். ஆடாதொடை, இதய நோய்களுக்கு நல்ல மருந்து. கிருமிநாசினியாகவும் பயன்படும்.

ஆடாதொடை இலையை நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து குடித்துவந்தால் சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா குணமாகும்.

ஆடாதொடை இலைச்சாற்றுடன் இரண்டு டீஸ்பூன் எருமைப்பால் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, ரத்தபேதி குணமாகும்.

பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்கு ஆடாதொடை இலையை மென்று துப்புவது தீர்வு தரும்.

நுரையீரல் கோளாறுகள் நீங்க, ஆடாதொடை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினம் நான்கு வேளை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஐந்து சொட்டு, சிறுவர்களுக்கு 10 சொட்டுகள், பெரியவர்களுக்கு 15 சொட்டுகள் கொடுக்க வேண்டும்.

ஆடாதொடை இலைகள் ஐந்து எடுத்து, 250 மி.லி நீர்விட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அதில் 10 மி.லி அளவு எடுத்து சம அளவு தேன் கலந்து, காலை, மாலை என 40 நாள்கள் குடித்துவந்தால் காசநோய் கட்டுப்படும்.

ஆடாதொடை வேருடன் சம அளவு கண்டங்கத்திரி வேர் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் முகவாதம், நரம்பு இழுப்பு, ஜன்னி, சுவாசக் கோளாறு, இருமல் குணமாகும்.

- எம்.மரிய பெல்சின்