தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

மாற்றம்

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

‘`முப்பது வருஷங்களுக்கு முன்னாடி வெறும் 5 சதவிகித மக்களுக்கு, அதுவும் வயசானவங்களுக்குத்தான் நீரிழிவு இருந்தது. இன்னிக்கு அது 30 சதவிகிதத்தைத் தாண்டி போயிட்டிருக்கு. இளைஞர்களும் இந்தப் பட்டியலில் இணைஞ்சிருக்காங்க. மூன்று நீரிழிவுகாரர்கள்ல ஒருத்தர், மாரடைப்பிலோ, பக்கவாதத்திலோ இறக்கிறார். `நீரிழிவு பாதிப்புள்ளவங்க, தம் வாழ்நாள்ல 10 முதல் 19 வருடங்களை இழக்கிறாங்க’னு ஓர் ஆய்வு சொல்லுது. இதுக்கு ஒரே தீர்வு, உங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றுவது மட்டுமே. குறிப்பா, வீகன் உணவுப்பழக்கத்துக்கு மாறும்போது நீரிழிவை ரிவர்ஸ் பண்ண முடியும்’’ - உறுதியாகச் சொல்கிறார் நீலிமா ஸ்ரீராம்.

சென்னையின் முன்னணி ஃபுட் ஸ்டைலிஸ்ட், உணவு ஆர்வலர், சமையல்கலை நிபுணர், வீகன் என இவருக்கு நிறைய அடையாளங்கள். `மாஸ்டர் செஃப் இந்தியா சீஸன் 4’-ன் டாப் 30 போட்டியாளர்களில் ஒருவர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்!

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

``வீகன் உணவுப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்களுக்கு இல்லை. `அது ரொம்ப காஸ்ட்லி, பின்பற்றுவது கஷ்டம்’னு ஆளாளுக்கு எதையெல்லாமோ நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, நீங்க தினமும் சாப்பிடும் வழக்கமான உணவுகளைவிடவும் வீகன் உணவுகளுக்கான செலவு குறைவு. வீகன் உணவுத்திட்டத்துல பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்த்துட்டு, அதுக்கான மாற்று உணவுகளுக்கு மாறிடுவீங்க. அதுவே செலவைக் குறைக்கும்வழிதான். வீகனில் நீங்க சாப்பிடுறது எல்லாமே நார்ச்சத்துகளும் முழுமையான ஊட்டமும் நிறைந்த உணவுகள்தான். அதனால கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைஞ்சிடும். உதாரணத்துக்கு, வழக்கமா நீங்க சாப்பிடும் பாலிஷ் பண்ணின வெள்ளை அரிசிக்குப் பதிலா, வீகன்ல பாலிஷ் பண்ணாத சிவப்பரிசிக்கு மாறுவீங்க. வெள்ளைச்சாதம் அளவுக்கு சிவப்பரிசி சாதத்தைச் சாப்பிட முடியாது. தானா அளவு குறைஞ்சிடும். செலவும் அப்படித்தான்.

எந்தப் பிரச்னைக்கு என்ன சிகிச்சை எடுத்துக்கிட்டாலும் உங்களுடைய உணவுமுறை சரியா இல்லைன்னா, எந்த மருந்தும் வேலை செய்யாது. அதுவே முறையான உணவுகளைச் சாப்பிடும் போது மருந்துகளின் தேவையே இருக்காது. ஒரு மாசத்துக்கு மருந்துகளுக்காக நீங்க எவ்வளவு செலவு பண்றீங்கனு ஒரு கணக்கு எடுங்க. அப்புறம் வீகன் உணவு முறைக்கு மாறி, அதனால உங்க உடம்புல ஏற்படும் மாற்றங்களைப் பாருங்க. வீகன் உணவின் மகத்துவத்தை உணர்வீங்க’’ என்கிறவர் தன் உணவுக் கலையிலும் பயிற்சி வகுப்புகளிலும்கூட வீகன் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்.

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

``ரெஸ்டாரன்ட் பேனர் அல்லது மெனு கார்டிலோ, சமையல்கலைப் புத்தகத்திலோ, விளம்பரங்களிலோ நீங்க பார்க்கிற உணவுகளின் வாசனையையும் சுவையையும் உங்களால உணர முடியுதா? அதுதான் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டின் திறமை. உலகப் புகழ்பெற்ற ஃபுட் ஸ்டைலிஸ்ட் டெனிஸ் விவால்டோகிட்ட ஃபுட் ஸ்டைலிங் கத்துக்கிட்ட பெருமை எனக்குண்டு’’ - தன்னடக்கத்துடன் சொல்பவரின் தனித்துவம் நேச்சுரல் லைட்டில் ஸ்டைலிங் செய்வது.

நீலிமாவின் இன்னோர் ஆர்வமும் கவனிக்கவைக்கிறது. அது ஃபுட் கன்சல்டன்சி.

உணவின் மகத்துவத்தை உணருங்கள்! - நீலிமா ஸ்ரீராம்

``மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருந்தாங்க. செளத் இந்தியன் முதல் வெஸ்டர்ன் வெரைட்டி வரை எல்லாமே கிடைக்கும்னு அறிவிச்சாங்க. மெயின் கோர்ஸ் மெனுவில்   மட்டுமே நூற்றுக்கும் மேலான அயிட்டங்கள். அத்தனை அயிட்டங்களைப் பார்த்ததுமே ஆச்சர்யம் வரத்தானே செய்யும்! ஆனா, வாடிக்கையாளர்களுக்கு எதைச் சாப்பிடுறது, எதைத் தவிர்க்கிறதுங்கிற குழப்பம் அதிகமானது. ரெஸ்டாரன்ட் ஓனருக்கோ, நூற்றுக்கும் மேலான அயிட்டங்களை  ஸ்டாக் வைத்திருக்கவேண்டிய கட்டாயம். அத்தனையையும் சமைக்க ஆள்களைத் தக்க வெச்சுக்கிறது, வீணாகாம உணவைத் தயாரிக்கிறது, மீந்துபோகிற உணவுகளை என்ன செய்யறதுங்கிற தவிப்புனு தொடர் சிக்கலில் மாட்டிக்கிட்டாங்க. ஒரு கட்டத்துல ரெஸ்டாரன்ட்டை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில என்கிட்ட வந்தாங்க. அடிப்படையில அவங்க செய்த தவற்றை எடுத்துச் சொல்லி, மெனு ப்ளானிங்கை மாத்திக் கொடுத்தேன். அதுக்கான செஃப் ட்ரெய்னிங்கையும் கொடுத்தேன். இப்போ அந்த ரெஸ்டாரன்ட் நல்லபடியா நடந்திட்டிருக்கு’’ - ஐசியூ விலிருந்து மீட்டு உயிர்ப்பிக்கிற டாக்டர் வேலையைப்போலிருக்கிறது நீலிமாவின் அனுபவம்.

இன்ட்ரெஸ்ட்டிங்!

- சாஹா

படங்கள் : பா.கார்த்திகா