உடல்நலத்தோடு மனநலமும் முக்கியம் என்கிற விழிப்பு உணர்வு அதிகமாகிவரும் காலம் இது. எவையெல்லாம் மனநலத்துக்குப் பிரச்னையைத் தருகின்றன என்று கவனித்து, அவற்றைச் சரிசெய்யும் முனைப்பில் இருக்கிறார்கள் மக்கள். அண்மையில் அயர்லாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில், மனநலத்தை பாதிக்கும் பத்து விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை கிட்டத்தட்ட உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன:

* பணப் பிரச்னைகள்

* தூக்கமின்மை

* அதிக எடை

* உடற்பயிற்சியின்மை

* பணிச்சூழல்

* சமூக ஊடகங்கள்

* வேலைப்பளு காரணமாகத் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த இயலாமலிருத்தல்

* துணைவருடன் நல்லுறவு இல்லாமை

* மதுப்பழக்கம்

* தன்னால் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்ய இயலுமா என்கிற பதற்றம்

பிரச்னையை மட்டும் சொன்னால் எப்படி... தீர்வையும் சொல்ல வேண்டாமா? அதையும் இதே கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது: உடற்பயிற்சி, இசை, நண்பர்களுடன் உரையாடுதல், தொலைக்காட்சி, புத்தகங்கள், உடலுறவு, மனமுழுமைப் பயிற்சிகள்.

இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்குகளில் ஒன்று, வீடியோ கேம்ஸ். ஆனால், பெரும்பாலானோர் அதை நேர விரயமாகவே நினைக்கிறார்கள். குழந்தைகள் வீடியோ கேம் விளையாடினால், ‘கண்ணைக் கெடுத்துக்காதே, ஒழுங்கா எதையாவது படி’ என்று அதட்டுகிறார்கள் பெற்றோர்.

`வீடியோ கேம்ஸ் என்பவை வெறும் விளையாட்டுகளல்ல, அவற்றைப் பயன்படுத்திச் சில முக்கியமான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க இயலும்’ என்று கண்டறிந்திருக்கிறது சிட்னி பல்கலைக்கழகம். இதற்காக, அவர்கள் முதுகுவலியால் அவதிப்பட்ட 60 பேரை அழைத்தார்கள். அவர்களிடம் ஒரு வீடியோ கேமைக் கொடுத்து, `Nintendo’ என்ற வீடியோ கேம் சாதனத்தில் அதை ‘விளையாட’ச் சொன்னார்கள்.

உண்மையில் இந்த நோயாளிகள் விளையாடியது சாதாரண வீடியோ கேம் அல்ல; முதுகுவலிப் பிரச்னை இருப்பவர்களுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தருகிற பயிற்சிகளைத்தான் வீடியோ கேமாக உருவாக்கியிருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அதை விளையாட்டாக எண்ணி விளையாடினார்கள். ஆனால், உண்மையில் அது அவர்களுடைய முதுகுவலியின் பாதிப்புகளைக் குறைத்து, பயன் தந்தது.

இந்த ஆராய்ச்சியின் முடிவு பலவிதங்களில் முக்கியமானது. பிசியோதெரபிஸ்ட்டுகள் போதுமான அளவில் இல்லை; அவர்களுடைய கட்டணமும் அதிகம்; பல இடங்களுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் சென்று சிகிச்சை தர இயலாத சூழ்நிலை... இவற்றுக்கெல்லாம் வீடியோ கேம்ஸ் தீர்வாகக்கூடும் என்பது புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.

`தினமும் நடக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், உடல் பருமனைக் குறைக்கலாம்’ என்பார்கள். அந்தப் பழக்கத்தால் இன்னொரு மிகப் பெரிய நன்மை இருப்பதை ஆய்வொன்று கண்டறிந்திருக்கிறது.

கோதென்பெர்க் பல்கலைக்கழகத்தைச் (University of Gothenburg) சேர்ந்த ஆய்வாளர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரை ஆராய்ந்தார்கள். அதில் வாரத்துக்கு சுமார் நான்கு மணி நேரம் நடப்பது, நீச்சலடிப்பது, ஓடுவது போன்ற பழக்கங்களைக்கொண்டவர்களுக்குப் பக்கவாதத்தின் தாக்கம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆக, நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவை உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், மூளை, நரம்புமண்டலத்தோடு தொடர்புடைய பிரச்னைகளைக் கட்டுப்படுத்தவும் உதவலாம். அந்தக் காரணங்களை அடுத்தடுத்த ஆய்வுகள் இன்னும் நுணுக்கமாக வெளிப்படுத்தும் என நம்பலாம்.

உலகெங்கும் லட்சக்கணக்கானோர் பக்கவாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதற்கான வாய்ப்புகளைக் குறைக்க இயலும் என்பது மிக நல்ல செய்தி. எல்லாவற்றுக்கும் வாகனத்தைத் தேடாமல், இயன்றபோதெல்லாம் நடக்கப் பழகினால் நல்லது!

போலி மருந்துகளைப் பற்றிய அதிர்ச்சியளிக்கும் செய்திகள் அன்றாடம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளைப்போலவே தோன்றுகிற, ஆனால் வேறு உட்பொருள்களைக் கொண்ட இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்துவதில்லை, சில நேரங்களில் நோயாளிகளுக்கு வேறு ஆபத்துகளைக்கூட வரவழைத்துவிடுகின்றன. ஆனால், இந்த மருந்துகளை பொதுமக்கள் அடையாளம் காண்பது சிரமம். மேலோட்டமாகப் பார்த்தால் எது போலி என்பது தெரியாது; அவற்றிலுள்ள வேதிப்பொருள்களையும் அவர்களால் ஆராய இயலாது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஓர் இசைக்கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆம், இசைக்கருவிதான்; இதில் இருக்கும் குழாயில் ஏதேனும் (உண்மையான) மருந்தை ஊற்றிவிட்டு இசைத்துப் பார்த்தால் ஒருவிதமான ஒலி கேட்கும்; அதே இடத்தில் போலியான மருந்தை ஊற்றிவிட்டு இசைத்தால் வேறுவிதமான ஒலி கேட்கும்; அந்த வேறுபாட்டைவைத்து ஒரு மருந்து போலியானது என்பதைக் கண்டறிந்துவிடலாமாம்.

‘இந்தக் கருவியை உருவாக்குவதற்குப் பெரிய செலவாகாது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் வீட்டிலிருக்கும் பழைய பொருள்களைக்கொண்டே இதை உருவாக்கிவிடலாம். இது போன்ற எளிய, பயனுள்ள கருவிகளை உலகம் முழுக்கக் கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒவ்வொரு நாளும் சரியாக ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்கிறவர்கள் உண்டு; அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்துவிடுகிறவர்களும் உண்டு. இந்த இரண்டிலும் சேராமல் நினைத்த நேரத்தில் தூங்கி, நினைத்த நேரத்தில் எழுகிறவர்களும் இருக்கிறார்கள்.

`இந்த நேரத்தில் தூங்குவது, இந்த நேரத்தில் எழுவது என்கிற ஒழுங்கைப் பின்பற்றுவது உடலுக்கு மிகவும் நல்லது’ என்கிறது ஓர் ஆய்வு. டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் நடத்தியிருக்கும் இந்த ஆய்வின்படி, ஒழுங்கான நேரத்தில் தூங்கி எழுகிறவர்களின் எடை ஆரோக்கியமாக இருக்குமாம்; ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பாக இருக்குமாம்; அவர்களுக்கு இதய அதிர்ச்சி, பக்கவாதம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாம். தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள் போன்றவை மக்களின் தூக்கத்தைக் கணிசமாகப் பாதித்துக்கொண்டிருக்கிற இன்றையச் சூழ்நிலையில், `எல்லாரும் வேளா வேளைக்கு ஒழுங்காத் தூங்குங்கய்யா' என்கிறது இந்த ஆய்வு!

`மருத்துவமனை’ என்றவுடன், பெரும்பாலானோருக்கு இனம் புரியாத நிம்மதியும் ஏற்படும்; இன்னொரு பக்கம் அச்சமும் தோன்றும். அதாவது, மருத்துவர்களின் திறமையை நினைத்து நிம்மதி; சிகிச்சைகளுக்கான பில்களை நினைத்து அச்சம்.

இயல்பாகவே, `மருத்துவமனைகளில் கட்டணம் அதிகம்’ என்கிற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. `போதாக்குறைக்கு, அந்தக் கட்டணப் பட்டியலில் சிறிதும் எதிர்பாராத விஷயங்கள் நுழைக்கப்படுகின்றன, சாதாரண விஷயங்களுக்குக்கூடப் பெரிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்கிற எண்ணமும் இருக்கிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 57 சதவிகித மக்கள் தங்கள் மருத்துவச் சிகிச்சைக்கான பில்களைப் படித்து, அதிர்ந்துபோகிறார்களாம். இதற்கு முக்கியக் காரணங்கள், மருத்துவருக்கான ஆலோசனைக் கட்டணம், மருத்துவப் பரிசோதனைக்கான அதீத கட்டணங்கள். மருத்துவமும் ஒரு தொழிலாக இருக்கிற சூழ்நிலையில் கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று நோயாளிகள் எதிர்பார்ப்பது நியாயம்தானே!

- என்.ராஜேஷ்வர், படம்: மதன்சுந்தர்