Published:Updated:

பெண்களின் வலி போக்கும் பிரண்டை

பெண்களின் வலி போக்கும் பிரண்டை
பிரீமியம் ஸ்டோரி
பெண்களின் வலி போக்கும் பிரண்டை

மு.கார்த்திகேயன், சித்த மருத்துவர்ஹெல்த்

பெண்களின் வலி போக்கும் பிரண்டை

மு.கார்த்திகேயன், சித்த மருத்துவர்ஹெல்த்

Published:Updated:
பெண்களின் வலி போக்கும் பிரண்டை
பிரீமியம் ஸ்டோரி
பெண்களின் வலி போக்கும் பிரண்டை

ந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று உடலை வலிமையாக்கும் வல்லமை பிரண்டைக்கு உண்டு என்பதால், இதை ‘வஜ்ஜிரவல்லி’ என்றும் சொல்வார்கள். பிரண்டை, வெப்ப மண்டலங்களில் ஏராளமாக வளரக்கூடியது. கார்ப்புச் சுவையைப் பிரதானமாகக்கொண்ட இது உடலைத் தேற்றி, பசியைத் தூண்டும் தன்மையுடையது. 

பெண்களின் வலி போக்கும் பிரண்டை

பிரண்டையைத் தோல் உரித்து நறுக்கி, நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டு நன்றாக வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம். இதனால் உடலுக்குச் சுறுசுறுப்பும் மூளைக்கு பலமும் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்களின் வலி போக்கும் பிரண்டை



இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து ‘ஸ்கர்வி’ (Scurvy) நோய்க்கு மிகச் சிறந்த தீர்வு தரும்.

பிரண்டையை மோரில் ஊறவைத்து, உலர்த்தி நெய் அல்லது நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு நீங்கும்.

வாய்வுக் கோளாறு, மூட்டுவலி, கீல் வாயு போன்றவற்றைத் தீர்க்க வாரம் ஒரு முறை பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிடலாம்.

பெண்களின் வலி போக்கும் பிரண்டை

பிரண்டையை வேருடன் எடுத்து உலர்த்திப் பொடித்து, இரண்டு கிராம் வீதம் சாப்பிட்டால், முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்; மூட்டுகளில் ஏற்படும் வலிகளையும் போக்கும்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் சேர்த்து உலர்த்திப் பொடித்து, அதில் சிறிது சுக்கு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். ரத்த மூலம் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட  நல்ல தீர்வு கிடைக்கும்.

பிரண்டைச் சாற்றுடன் உப்பு சேர்த்துச் செய்யப்படும் பிரண்டை உப்பு வயிற்றுக் கழிச்சலைப் போக்கும்; பெண்களின் மாதவிடாய்க்கால வலியைப் போக்கும்.

-  எம்.மரியபெல்சின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism