Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

தகவல்

Published:Updated:
டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

குழந்தைகள் அடம்பிடிப்பது ஏன்?

ரு குழந்தை சமூகத்தில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தீர்மானிப்பது எது? சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அடம்பிடிப்பது, எதிலும் ஆவேசத்துடன் ஈடுபடுவது, பிறர் மீது அக்கறையில்லாததுபோல் இருப்பது என்று நடந்துகொள்கின்றனர். சில குழந்தைகள் இதற்கு நேரெதிராக எல்லோர் மீதும் அன்புடன் பழகுகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மரபணுக்கள்தாம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சியொன்றில், பெற்றோரின் வளர்ப்பும் இதில் முக்கியப் பங்காற்றுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

டாக்டர் நியூஸ்!

இது தொடர்பாக 227 இரட்டைக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள் ஆய்வாளர்கள். அந்தக் குழந்தைகளின் டிஎன்ஏ (DNA) ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களை வளர்ப்பதில் அவர்களின் பெற்றோர் தங்களையும் அறியாமல் சில வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய அந்த வேறுபாடுகள் அந்தக் குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்களைக் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பது தெரியவந்திருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பெற்றோரால் நன்றாக அரவணைக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தை, சமூகத்துடன் இணைந்து பழகக் கற்றுக்கொள்கிறது. அதட்டி, மிரட்டி வளர்க்கப்படும் குழந்தை பிறரிடம் அதேபோல் நடந்துகொள்ள முனைகிறது என்பதே உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`

டாக்டர் நியூஸ்!

வைட்டமின் ஏ’ அதிகரித்தால் ஆபத்து!

`வை
ட்டமின் ஏ’ நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. வளர்ச்சி, பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, உறுப்புகளின் செயல்பாடு போன்றவற்றுக்குப் பலவிதங்களில் பயன்படுகிறது. ஆகவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூலம் இந்த வைட்டமினைப் பெற்றுக்கொள்வது நல்லது. அதே நேரம், இந்த வைட்டமின் அளவுக்கு அதிகமாகிவிட்டால், எலும்புகளின் தடிமன் குறையக்கூடும். இதனால் எலும்புகள் பலவீனமாகி எளிதில் உடையக்கூடும் என்ற தகவல் புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வைட்டமின் குறைபாட்டுக்காகப் பல்வேறுவிதமான துணைப் பொருள்களை உட்கொள்ளும் பழக்கம் இன்றைக்கு அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தங்களை அறியாமலேயே தங்களின் உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரித்துக்கொள்ளும் சூழல் ஏற்படும்.

‘பெரும்பாலான சூழலில் சரிவிகித உணவின் மூலம் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும்’ என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய கோதென்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் உல்ஃப் லெர்னெர். ஆகவே, அவசியப்பட்டால் மட்டும் வைட்டமின் துணைப் பொருள்களை உட்கொள்ளலாம். அப்போதும் வைட்டமின் ஏ அளவைத் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும்.

டாக்டர் நியூஸ்!

மூளையில் ஒளிந்திருக்கும் தூக்கம்!

`தூ
ங்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால், தூக்கம் வரவில்லையே’ என்று புலம்புவோர் உண்டு. உலகெங்கும் தூக்கமின்மையால் மருத்துவர்களைத் தேடி வருபவர்கள் ஏராளம். அமெரிக்காவைச் சேர்ந்த `பெத் இஸ்ரேல் டிகோனெஸ்’ மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மூளையில் தூக்கத்தைத் தூண்டும் பகுதி எது என்று கண்டறிந்தனர். மூளையிலுள்ள குறிப்பிட்ட செல்கள் தூண்டப்பட்டதும், அவற்றுள் இருக்கும் ரசாயனம் செயல்படத் தொடங்கி, மூளையின் மற்ற பகுதிகளுக்குச் சென்று, ‘இது தூங்கவேண்டிய நேரம்’ என்று அறிவிக்குமாம். குறிப்பாக, கதகதப்பான வெப்பநிலை இந்த ரசாயனத்துக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். இதனால்தான் சிலர் போர்வையைப் போர்த்தினால்தான் தூக்கம் வரும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்போல!

மூளையில் தூக்கம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிட்டார்கள்; அதை நினைத்த நேரத்தில் தூண்டிவிட்டு, தூக்கத்தை வரவழைப்பது எப்படி என்பதையும் கண்டுபிடித்துவிட்டால் பலரது கனவு நனவாகும்!

டாக்டர் நியூஸ்!

உடற்பயிற்சி மூளையைக் கூர்மையாக்கும்!

ருவர் ஒரு புத்தகத்தை நின்றுகொண்டே படிக்கிறார், இன்னொருவர் அதே புத்தகத்தை அமர்ந்தநிலையில் படிக்கிறார், மூன்றாமவர் படுத்துக்கொண்டே படிக்கிறார். இவர்களில் யார் அந்த விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் நியூஸ்!



புத்தகம் ஒன்றுதான்... நின்றபடி, அமர்ந்துகொண்டு, படுத்துக்கொண்டு என வெவ்வேறு நிலைகளில் படிப்பது அறிவை பாதிக்குமா என்ன? `நிச்சயமாக பாதிக்கும்’ என்கிறார்கள் முனிச் பல்கலைக்கழக நிபுணர்கள். உடல் செயல்படும்விதத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய சமீபத்தில் இவர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் சிலருக்கும், நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், ஓய்வெடுக்கும் நிலையில் உள்ள சிலருக்கும் காட்சி சார்ந்த நினைவாற்றல் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் உடற்பயிற்சி செய்பவர்களும் நின்றுகொண்டிருந்தவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர். இதன் மூலம் நிற்பது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது நம் மூளையைக் கூர்மையுடன் இயங்கச்செய்கின்றன என்பது தெரியவந்தது. ஒருவேளை நாள் முழுவதும் நாற்காலியில் அமரவேண்டிய வேலை நமக்கு வாய்த்தால், அவ்வப்போது சிறிது தூரம் எழுந்து நடந்துவிட்டு வரலாம். இது உடலுக்கும் நல்லது, மூளைக்கும் நல்லது.

டாக்டர் நியூஸ்!

மருந்தாகும் ஆரோக்கிய உணவுகள்!

னம் சார்ந்த பல்வேறு குறைபாடுகளில் முக்கியமானது ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ (Bipolar Disorder) எனப்படும் இருதுருவக் குறைபாடு. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் திடீரென்று மிகுந்த மனச்சோர்வுடன் காணப்படுவார்கள். அதன் பிறகு வேறு சூழலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இப்படி இரு முனைகளுக்கும் இடையே மாறிக்கொண்டே இருப்பார்கள். `இத்தகைய இருதுருவக் குறைபாடு உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையுடன் ஆரோக்கியமான, சமநிலையான பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவு மருத்துவத்தைப் பின்பற்றலாம்’ என்கிறது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீகின் பல்கலைக்கழகம். 

டாக்டர் நியூஸ்!



‘இந்தக் குறைபாட்டுடன் எங்களிடம் வருபவர்கள் ஆரோக்கியமாகச் சாப்பிட்டு, தங்கள் எடையை கவனமாகப் பார்த்துக்கொண்டால், அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது’ என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை நிபுணரான மெலானி ஆஷ்டன். `மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை சரியாகப் பலன் தருவதில்லை’ என்று கூறப்படுகிறது. ஆகவேதான் இருதுருவக் குறைபாடு கொண்டவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பரிந்துரைப்பதாக டீகின் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறது.

- என்.ராஜேஷ்வர், படங்கள்: மதன்சுந்தர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism