Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

நிறைமாத கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்... அவற்றை இப்போதே சாப்பிடத் தொடங்க வேண்டுமா... குழந்தை பிறந்த பிறகு சாப்பிட்டால் போதுமா?

- சத்யா, சென்னை

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப்ப காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெற முடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உணவில் அதிக அளவு  இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஓட்ஸ் கஞ்சி, காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிடவேண்டியது அவசியம். ஒவ்வோர் இரண்டு, மூன்று மணி நேர இடைவெளிக்கும் நடுவே உணவு உட்கொள்ளலாம். இனிப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது, பால் அருந்துவது நல்லது. சுறா வகை மீன்களைச் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

- வினுதா அருணாசலம், மகப்பேறு மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

`வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் வாய்வுத் தொந்தரவு ஏற்படும்’ என்கிறார்களே... அது உண்மையா?

கன்சல்ட்டிங் ரூம்- ரங்கராஜன், வள்ளியூர்


இவை இரண்டும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் முக்கியமான உணவுகள். அதற்காக இதை ஒரு காரணமாகச் சொல்லி இவற்றைத் தவிர்க்கவேண்டியதில்லை. கீழ்க்காணும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் இவற்றைச் சாப்பிடலாம். பெரும்பாலும், வறுத்த கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சமைக்கும்போதே பூண்டு, பெருங்காயம் சேர்த்துக்கொண்டால், இந்தப் பிரச்னையை 80 சதவிகிதம் தடுத்துவிடலாம்.  சாப்பிட்டதும் சுடுநீரில் சீரகம் அல்லது சோம்பு சேர்த்துக் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது. இரவு நேரத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் வாழைக்காய், உருளைக்கிழங்கைச் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

- சௌமியா, ஊட்டச்சத்து நிபுணர்

கன்சல்ட்டிங் ரூம்

அரசு சுகாதார நிலையங்களில் ஊசியை மட்டுமே மாற்றுகிறார்கள். மருந்து இழுக்கும் டியூபை (சிரிஞ்ச்) மாற்றுவதே இல்லை. இதனால் நோய் பரவ வாய்ப்பிருக்கிறதா?

- ரா.சுரேஷ் தமிழன்,


உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனை மூலமாக மட்டுமல்லாமல், சிரிஞ்ச் மூலமாகவும் தொற்று பாதிப்புகள் நிச்சயம் பரவும். ஊசி போட்டவுடன், அதன் முனை எப்படி குப்பையில் வீசப்படுகிறதோ, அதேபோல சிரிஞ்ச் நுனியை வெட்டிவிடுவது நல்லது. அப்போதுதான் அடுத்த முறை அதைப் பயன்படுத்த முடியாது. ஒரே சிரிஞ்சை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், வைரஸ் தொற்றுகள் தொடங்கி ஹெச்.ஐ.வி போன்ற ரத்தம் மூலம் பரவும் நோய்கள்வரை பரவ வாய்ப்பிருக்கிறது. அதேபோல் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒரே சிரிஞ்ச் பயன்படுத்தினால், அது சட்டத்துக்குப் புறம்பானது. இது குறித்து 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது பொது சுகாதாரத் துறையின் 044-24350496, 24334811 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம். இந்த அனைத்து எண்களையுமே, 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் என்பதால், புகாரை தாமதிக்காமல் உடனடியாக நீங்கள் தெரிவிக்கலாம்.
இப்படியான பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக, பல அரசு மருத்துவமனைகளில் Needle Destroyer மற்றும் Auto-Disable Syringe வகைகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை புகார் இருப்பின், மேலே குறிப்பிட்ட எண்களுக்கு, உங்கள் புகாரைத் தெரிவிக்கவும்.

- பாலகிருஷ்ணன், தொற்றுநோயியல் மருத்துவர்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism