Published:Updated:

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

ஹெல்த்

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

ஹெல்த்

Published:Updated:
தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

தீபாவளி என்றாலே புத்தாடைகளும் பட்டாசுகளும் இனிப்புகளும்தாம் நம் நினைவில் வரும். அதிலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வது இனிப்புகளைத்தான். அந்த வகையில் இனிப்புகளுக்கு தீபாவளியில் அதிக முக்கியத்துவம் உண்டு. ‘பண்டிகைக் காலத்தில் அதிக இனிப்பு சாப்பிடக் கூடாது, டயட்டில் இருக்க வேண்டும்’ என்று சிலர் வைராக்கியமாக இருந்தாலும்கூட, அழையா விருந்தாளியாக இனிப்பு டப்பாக்கள் வீட்டுக்குள் வந்துவிடும். அப்படி வந்த இனிப்புகளின் நிறத்திலும் சுவையிலும் நாம் மயங்கிவிடுவோம். பிறகென்ன, இனிப்புகள் வாயை நிறைப்பதுடன் எச்சிலில் கரைந்துவிடும். இப்படி ஒரே நேரத்தில் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். கலோரி அதிகரிப்பதால், உடலில் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்.  அதிக கலோரிகள்கொண்ட தீபாவளி இனிப்புகளைச் சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க சில ஆலோசனைகள் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணன்.

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

இனிப்பு ஓகே, கொழுப்புக்கு நோ!

அனைத்து இனிப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ரசகுல்லா போன்றவற்றில் இனிப்பு அதிகமாக இருக்கும். குலாப் ஜாமூன் போன்ற இனிப்புகளில் இனிப்புச்சுவை மட்டுமன்றி கொழுப்புச்சத்தும் அதிகமாக இருக்கும். அனைத்து வகை இனிப்புகளும் தவிர்க்கவேண்டியுவைதாம் என்றாலும், கொழுப்புச்சத்து அதிகமில்லாத இனிப்புகளை, ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!



 கலோரிகளைக் கணக்கிடுங்கள்!

குறைந்த கொழுப்புச்சத்து உள்ள இனிப்புகள் என்பதற்காக அவை குறைவான கலோரிகளைக்கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. இனிப்பு எப்போதுமே இனிப்புச்சுவையைத் தவிர வேறு சுவையைத் தராது என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகவே, இனிப்புகளை வாங்குவதற்கு முன்னர், டப்பாவிலுள்ள லேபிளில் ஊட்டச்சத்து விவரங்களை அவசியம் பாருங்கள். கலோரிகளின் அளவைப் பார்த்து, அந்த இனிப்பைச் சாப்பிடுவதா வேண்டாமா என்று  முடிவு செய்துகொள்ளுங்கள்.

 உலர் பழங்களைத் தேர்ந்தெடுங்கள்!

நோய்களை வாரி வழங்கும் இனிப்புகளுக்கு மாற்றாக உலர் பழங்களைச் சாப்பிடலாம். கைப்பிடி அளவுள்ள உலர் பழங்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஃபிரெஷ் பழ வகைகளையும் சாப்பிடலாம்.

 நீங்களே தயாரிக்கலாம்!

உங்கள் வீடு, உங்கள் அதிகாரம். எனவே, குடும்பத்தினருக்கும் விருந்தினருக்கும் ஆரோக்கியமான இனிப்பு வகைகளை நீங்களே தயாரித்துக் கொடுக்கலாம். நெய், எண்ணெயைக் குறைத்துப் பலகாரம் செய்யுங்கள். மேலும், பண்டிகைக் காலங்களில் அன்பளிப்பாக வரும் இனிப்பு டப்பாக்களை குடும்ப சகிதம் உட்கார்ந்து சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. வண்ணமயமான தீபாவளியைக் கொண்டாட முடியாத எளியவர்களுக்கு அந்த இனிப்புகளை அன்பளிப்பாக வழங்கி, தித்திக்கும் தீபாவளியாக்கலாம்.

 உடற்பயிற்சி செய்யுங்கள்!

தவிர்க்க முடியாமல் அதிகக் கொழுப்பு, கலோரிகள்கொண்ட இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டால், உடலுழைப்பு மூலம் அதைக் கரைக்க முயற்சிசெய்யுங்கள். நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

 நீர்ச்சத்து அவசியம்!


இனிப்புகள் சாப்பிட்டாலும், அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். எலுமிச்சைப் பழச்சாறு, இளநீர் ஆகியவற்றையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

 ஆழ்ந்த உறக்கம் தேவை!

உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்கப் போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைப்பதிலும் தூக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குங்கள்.

- அதிரா

தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism