ஹெல்த்
Published:Updated:

காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!

காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!

கோவர்த்தினி, ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

காலை உணவைத் தட்டிக்கழிப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி.

காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!

1. காலை உணவு, அன்றைய நாளுக்கான ஆற்றலைத் தரும். பசியின்மைப் பிரச்னை இருப்பவர்கள், காலையில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!2. காலை உணவை நேரம் கழித்துச் சாப்பிட்டால், உடலின் வளர்சிதை மாற்றங்களில் பிரச்னை ஏற்படக்கூடும். மேலும், கெட்ட கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னைகள் ஏற்படலாம். சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் இவற்றைத் தவிர்க்கலாம்.

3. காலை உணவு, மூளையின் செயல்பாடுகளை அதிகளவு தூண்டும்.

4. உடல் எடை சீராகும். பருமனாக இருப்பவர்களுக்கு, எடை குறையத் தொடங்கும். மனம் அமைதியடைந்து, கவனச்சிதறல் நீங்கும்.

காலை உணவைக் கட்டாயமாக்குங்கள்!

5. காலை உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால், பக்கவாதம் போன்ற  பல நோய்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக, டைப் 2 சர்க்கரைநோயைத் தடுக்க முடியும்.

- ஜெ.நிவேதா