ஹெல்த்
Published:Updated:

உறக்கத்துக்கு உத்தரவாதம்!

உறக்கத்துக்கு உத்தரவாதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உறக்கத்துக்கு உத்தரவாதம்!

ஹெல்த்

நிம்மதியான உறக்கம்தான் அடுத்த நாள் நம் இயக்கத்துக்கான உந்துசக்தி. அதற்கு உதவுபவை, தூக்கத்தைக் கெடுப்பவை என்னென்ன என்று பார்க்கலாம்.

உறக்கத்துக்கு உத்தரவாதம்!

1. அடுத்த நாள் செய்யவேண்டிய பணிகளை உறங்குவதற்கு முன்னர் ஒரு தாளில் எழுதி வையுங்கள். அடுத்த நாளுக்கான டைம்டேபிள் 15 நிமிடங்கள் கூடுதலான தூக்கத்தைக் கொடுக்கும்.

2. டீ, காபியில் உள்ள கஃபைன், தூக்கத்தைக் கெடுத்து, விழிப்புநிலையை அதிகரிக்கும். அதற்கு பதில் பாலைத் தேர்ந்தெடுங்கள்.

உறக்கத்துக்கு உத்தரவாதம்!3. செல்போன் சிணுங்கல் உறக்கத்தைக் கெடுக்கும். அதை அணைத்துவிட்டு அல்லது சைலன்ட்மோடில் போட்டுவிட்டால் ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்.

4. உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டுமே நிம்மதியான தூக்கத்துக்கு நெருங்கிய உறவினர்கள்.

5. புகைபிடிப்பவர்களுக்கு தூக்கமின்மைக் குறைபாடான ‘இன்சோம்னியா’ பாதிக்க 30 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

6. உங்கள் வீட்டின் செல்ல நாய், இரவு படுக்கை அறையில் இருந்தால் ஒருவித பாதுகாப்பையும் ஆறுதலையும் உணர முடியுமாம்.

7. ஏசி அறைகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைப்பதில்லை. அதை ஈடுசெய்வதற்கு இளம் வெயிலில் காய்ந்தால், 46 நிமிடங்கள் கூடுதலாகத் தூங்க முடியுமாம்.

8. மக்னீசியம் சத்துள்ள கீரை, வாழைப்பழம், அத்திப்பழம், கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், பட்டாணி, புரோக்கோலி, முட்டைகோஸ், டார்க் சாக்லேட் போன்றவற்றை உட்கொண்டால், ஆழ்ந்த, நீண்ட நேர உறக்கம் கியாரண்டி.

9. இரவு அதிக முறை சிறுநீர் கழிக்கச் செல்வது ஆழ்ந்த உறக்கத்தை பாதிக்கும்.உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னரே தண்ணீர், ஜூஸ், பால் போன்ற நீராகாரங்களைக் குடித்துவிடுங்கள்.

- ஜெனி ஃப்ரீடா