சோற்றுக்கற்றாழைக்கு `குமரி’, `கன்னி’ போன்ற வேறு பெயர்களும் உண்டு. பெண்களை பாதிக்கும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்வதால், இந்த மூலிகையை `மருத்துவ உலகின் ராணி’ என்கிறார்கள்.

*சிலருக்குத் தூங்கி எழுந்ததும், பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததைப்போல எரிச்சல் இருக்கும். கற்றாழையின் ஜெல் பகுதியை பாதத்தில் பூசிவிட்டு உறங்கினால், இது சரியாகும்.

*கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்துக்குப் பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கக் கற்றாழை ஜெல்லைத் தடவலாம்.

*நீர்க்கடுப்பு, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், உடல் சூடு போன்றவற்றையும் சோற்றுக்கற்றாழை குணப்படுத்தும். இதன் உள்ளே நுங்குபோலக் காணப்படும் சதைப் பகுதியை எடுத்து, நீரில் நன்றாக அலசி, பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

*கற்றாழை மடலைக் கீறி, அதில் வடியும் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாதம் வெயிலில்வைத்து எடுக்க வேண்டும். அதைத் தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

*கண் எரிச்சல், கண்கள் சிவந்துபோவது போன்ற பிரச்னைகளுக்கு, கற்றாழையின் ஜெல் பகுதியைக் கண்களின் மீது வைத்து ஓய்வெடுக்கலாம். இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் இதைச் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்; கண் தொடர்பான பிரச்னைகளும் சரியாகும்.

*கற்றாழை ஜெல்லுடன் இஞ்சி, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்ட வேண்டும். அதோடு தேன், பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலையில் அருந்தினால் மூலநோய், வெள்ளைப்படுதல் நீங்கும். இனிப்பு சேர்க்காமல் இதைச் சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுப்படும்.

- எம்.மரிய பெல்சின்