Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

தகவல்

Published:Updated:
டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்!

பெண் நாய் வளர்த்தால் ஆஸ்துமா வாய்ப்பு குறையும்!

கு
ழந்தைகளுக்குச் செல்லப்பிராணிகள் என்றால் மகிழ்ச்சிதான். குறிப்பாக, நாய்களுடன் ஓடியாடி விளையாடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அவற்றால் அவர்களுக்கு இன்னொரு நன்மையும் உண்டாம். `நாய் வளர்த்தால், குறிப்பாகப் பெண் நாயை வளர்த்தால் ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறையும்’ என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம் மற்றும் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கான சுவீடன் குழந்தைகளின் புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்து, இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, பெண் நாய் வளரும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை வரும் வாய்ப்பு     16 சதவிகிதம் குறைவாக இருந்திருக்கிறது.

டாக்டர் நியூஸ்!

நாய்களின் வகை, அளவு என்று இன்னும் பல காரணிகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அவை ஆஸ்துமாவைப் பெரிதாக பாதிப்பதில்லையாம். பெண் நாய்கள் மட்டுமே அந்த ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கின்றனவாம். ஏனென்றால், ஆண் நாய்களுடன் ஒப்பிடும்போது பெண் நாய்கள் ஆஸ்துமாவுக்குக் காரணமான ஒவ்வாமைக் கிருமிகளைக் குறைவாக வெளிவிடுகின்றனவாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணியிடப் பிரச்னைகளால் பாதிக்கும் உடல்நலம்!

டாக்டர் நியூஸ்!ணியிடங்களில் பாதுகாப்பு பற்றிய விழிப்புஉணர்வு அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மற்ற பணியிடங்களில் பணிபுரிவோரைச் சக ஊழியர்கள் கேலிசெய்வது, அடிப்பது, வன்முறையைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும் என்று நிறுவனங்களும் அரசாங்கங்களும் முயன்றுவருகின்றன. `இதை ஒரு சமூகப் பிரச்னையாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். உண்மையில், இது ஒரு மருத்துவப் பிரச்னையாகவும் இருக்கலாம்’ என்கிறது கோபன்ஹேகன் பல்கலைக் கழகம். பணியிடங்களில் கேலி, துன்புறுத்தல், வன்முறையைச் சந்திப்பவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகள், பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 36 சதவிகிதம் அதிகரிக்கிறதாம்.

வேலையிடங்களில் பிறரது கேலி, துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது அவர்களது மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது அவர்களின் உடல்நிலையை பாதிக்கிறது. எனவே, நிறுவனங்கள் இவற்றைக் கவனித்து, கட்டுப்படுத்தினால் கணிசமான பிரச்னைகளைக் குறைக்கலாம். அத்துடன் ஊழியர்களின் நலனையும் உறுதிசெய்யலாம்.

`தரமான மருத்துவக் கல்வி’ - ரயில்வே முடிவு!

ந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே மருத்துவமனைகள் சிறப்பான வசதிகளுடன் இயங்கிவருகின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்; லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள், ஓய்வுபெற்றோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறுகிறார்கள். தங்களது இந்த பலமான மருத்துவ வலைப்பின்னலைப் பயன்படுத்தி, மருத்துவ உயர்கல்வியை வழங்கினால் என்னவென்று யோசித்திருக்கிறது இந்திய ரயில்வே. பல்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதற்காக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைக் கோரியிருக்கிறது.

இந்தியாவில் எப்போதுமே தரமான மருத்துவக் கல்விக்கான தேவை அதிகம். ஏற்கெனவே அருமையான மருத்துவமனை வசதிகளைக்கொண்டிருக்கும் ரயில்வே துறை சிறந்த பாடத்திட்டத்துடன் உயர்கல்வியை வழங்கினால், மாணவர்களுக்கும் அனுபவமிக்க அறிவு கிடைக்கும். நாட்டின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்ய அது பெரிதும் உதவும்.

டாக்டர் நியூஸ்!

மலேரியா கட்டுப்பாடு: இந்தியாவுக்குப் பாராட்டு!

கொ
சுக்களால் பரவும் மலேரியா நோய் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வோராண்டும் மலேரியா தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை வெளியிடுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். காரணம், சர்வதேச அளவில் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த ஆண்டில் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறதாம்.

2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்தியாவில் மலேரியா பிரச்னை 24 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். அதாவது, தொடர்ச்சியான நலப் பராமரிப்புப் பணிகளால் லட்சக்கணக்கானோர் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற நாடுகளான நைஜீரியா, காங்கோ, மொசாம்பிக், உகாண்டா போன்றவற்றிலும் இது போன்ற முயற்சிகள் தொடர்கின்றன. ஒட்டுமொத்தமாக மலேரியாவை வெல்லும் நாள், மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும்.

டாக்டர் நியூஸ்!

ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுங்கள்!

ணவகத்துக்குச் செல்லும் ஒருவர் ஆரோக்கியமான உணவுகள்  அல்லது  தரம் குறைந்த உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம். இது முழுக்க முழுக்க அவருடைய சொந்தத் தீர்மானம்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், யாருடன் சாப்பிடச் செல்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மாறுவதாகச் சொல்கிறது, சியோல் தேசியப் பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வு ஒன்று. அதாவது, நம்முடன் சாப்பிட வருபவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கவனித்து, நாம் நம் உணவை மாற்றி அமைப்பது தெரியவந்திருக்கிறது.

உதாரணமாக, நண்பர்கள் இரண்டு பேர் உணவகத்துக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் முதல் நபர் பர்கர், ஐஸ்க்ரீம் போன்றவற்றை வாங்குகிறார் என்றால், அடுத்த நபரும் அதே போன்ற உணவை வாங்க வாய்ப்புகள் அதிகம். முதல் நபர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அது போன்ற உணவை வாங்கும்போது அடுத்தவர் மட்டும் ஆரோக்கியமான உணவை வாங்கி, அவரைச் சங்கடப்படுத்த விரும்புவதில்லையாம். ஆனால், அடுத்த நாள், அதே இரண்டாம் நபர் அதே உணவகத்துக்குத் தனியாகச் சென்றால், அவர் ஆரோக்கியமான உணவை வாங்கிச் சாப்பிடக்கூடும். அப்போது அவருக்கு அது பற்றிய எத்தகையச் சங்கடங்களும் குற்றவுணர்ச்சியும் இருப்பதில்லையாம். ஆகவே, அடுத்த முறை உணவகத்துக்குச் செல்லும்போது நீங்கள் முதலில் (ஆரோக்கியமான) உணவை ஆர்டர் செய்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது!

- என்.ராஜேஷ்வர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism