Published:Updated:

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!
பிரீமியம் ஸ்டோரி
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்ஹெல்த்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்ஹெல்த்

Published:Updated:
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!
பிரீமியம் ஸ்டோரி
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

`வார்ட்’ எனப்படுகிற மரு, சரும அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. சின்னக் கட்டிகள் போன்று உருண்டு திரண்டும், சொரசொரப்பான மேல்பரப்புடனும் காணப்படுகிற மருக்கள், சரும நிறத்திலேயே காணப்படும். பெரும்பாலும் இவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. பாதங்களில் வந்தால் மட்டும் வலி இருக்கலாம். ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ அல்லது ஹெச்.பி.வி தொற்றால் ஏற்படுவதே மரு. இந்த வைரஸ் தொற்று சிராய்ப்பு ஏற்பட்ட மற்றும் வெட்டுப்பட்ட சருமப் பகுதியில் எளிதில் மருக்களை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத் தொற்று அதிகம் இருக்கும்.

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

எங்கெல்லாம் ஏற்படும்?

விரல் இடுக்குகளில், பாதங்களில், அந்தரங்க உறுப்பில், அடிக்கடி ஷேவ் செய்கிற பகுதிகளில் ஏற்படும். மரு எளிதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். மரு பாதிப்பு உள்ளவர்களைத் தொடுவதாலும், அவர்கள் உபயோகிக்கும் டவல், படுக்கை உறை போன்றவற்றைப் பகிர்வதாலும் பரவும். உங்களுக்கு உடலில் ஓரிடத்தில் மருக்கள் இருந்து அவற்றை நீங்கள் தொட்டுக்கொண்டே இருந்தால், உங்கள் உடலிலேயே மற்ற இடங்களுக்கும் மருக்கள் பரவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!



தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம்?

அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். சருமத்தில் தரமான மாய்ச்சரைஸர் தடவிப் பராமரிப்பதும், காயங்களின்றிப் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நகங்களைக் கடிப்பது மிக மோசமான பழக்கம். நகங்களைக் கடிப்பதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு நீங்களே வழியமைத்துக் கொடுக்கிறீர்கள். ஜிம் போன்ற இடங்களில் டவல்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்தும்போது காலணிகள் பயன்படுத்த வேண்டும்.

சிகிச்சைகள்

சில வகை மருக்கள் சிகிச்சைகள் தேவைப்படாமல் தாமாகவே மறைந்துவிடும். சில வகைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். ஒரு மரு வந்தால், உடனே சரும மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது. லிக்யூட் நைட்ரஜன் பயன்படுத்தியோ, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி முறையிலோ மருத்துவர்கள் மருக்களை அகற்றுவார்கள். மருக்களின் மீது ஊசி வழியே பிரத்யேக மருந்து செலுத்தி, அதை உதிரச் செய்வார்கள்.

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். கர்ப்பப்பைவாய் புற்றுநோயையும் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் மருக்களையும் தடுக்கும் ஹெச்.பி.வி தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட்டுக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism